உழவின்
உயர்வு
உணவுத் தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே
பஞ்சத்திலே வீழ்ந்து பரிதவிக்காது. அந்நாட்டில் வாழ்வோர் இன்புறுவர். அந்த நாடே செல்வத்திலே
சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர் உணர்ந்திருந்தனர்.
”கருவி வானம் தண்டளி சொரிந்தனெப்,
பல்விதை
உழவிற் சில் ஏராளர்,
பனித்துறைப்
பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு
கலிங்கம் கடுப்பச் சூடி
விளங்கு
கதிர் திருமணி பெறூஉம்,
அகன்கண் வைப்பின் நாடு கிழவோனே
(பதிற்றுப் பத்து, ஒன்பதாம் பத்து , பா,76)
கூட்டமாகிய
மேகங்கள் மழை பெய்தவுடன், பலவிதமான விதைகளுடன் வைத்திருக்கின்ற உழவிலே சிறந்த உழவர்கள்,
தங்கள் வேலையை ஊக்கத்துடன் செய்கின்றனர். குளிர்ந்த நீர்த்துறையை அடைகின்றனர். அழகான
பகன்றைப் பூமாலைகளை ஆடைகளைப் போல அணிகின்றனர். விளைந்து விளங்குகின்ற கதிர்களிலிருந்து
அழகிய தானிய மணிகளைப் பெறுகின்றனர். இத்தகைய வளமுடைய பெரிய நாட்டின் தலைவனே.
ஒரு நாட்டின் உயர்வுக்கு உழவுத் தொழிலே காரணம் என்பதை
இதனால் காணலாம்.
Comments
Post a Comment