நன்னடத்தை
பழந்தமிழர்கள் நல்லொழுத்திலே நாட்டமுடையவர்கள்.
உயிரினும் சிறந்தது. ஒழுக்கமே என்ற உண்மையை உணர்ந்திருந்தனர். அறநெறிக்கு மாறான செயல்களால்
நன்மையில்லை. ஆதலால் அறநெறிக்குத் தடையாக நிற்கும் அனைத்தையும் அறிந்து அவற்றைப் பின்பற்றாமல்
பாதுகாத்து வந்தனர்.
”சின்னே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம்,
பொய்ச்சொல், அன்புமிக உடைமை,
தெறல்,
கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து
அறந்தெரி
திகிரிக்கு வழியடையாகும்”
(பதிற்றுப்பத்து,
ஒன்பதாம் பத்து,பா, 22)
பொருளற்ற கோபம்,
காமவெறி, அளவுக்கு மீறிய தயவு, பகைவர்களுக்குப் பயப்படுதல், பொய் கூறல், பொருளின் மேல்
பேராசை, நன்மைகளை நாசம் பண்ணுதல், கடுஞ்சொற் கூறல் இவைகளும், இவைகளைப் போன்ற குணங்களும்,
இவ்வுலகிலே அறநெறியிலே செல்லும் வண்டிக்கு, அது செல்லுகின்ற வழியிலே போடப்படும் முட்டுக்
கட்டைகளாகும்.
பழந்தமிழ் மக்கள் இவ்வாறு நல்லறத்தைப் பாதுகாப்பதில்
கவலை கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment