கொள்ளு
கொள்ளுப் பயறு வீரியமான பயிறு வகையாகும்.
‘இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்குக் கொள்ளு’ என்பது பழமொழி. ஆங்கிலத்தில் கொள்ளைக்
(Horse gram) குதிரைப் பயிறு என்று சொல்கிறார்கள். விலங்கில் அதிக வீரியமானது குதிரை.
அந்தக் குதிரையே கொள்ளு சாப்பிட்டால் அத்தனை பலன் கிடைக்கும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்,
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் கொள்ளு சாப்பிட வேண்டும்.
இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. சளி வந்து மருத்துவம் பார்த்தால் ஒரே வாரத்திலும்
பார்க்காவிட்டால் ஏழு நாளிலும் போய் விடும் என்பார்கள். எப்படி என்றாலும் சளி விடாது
என்பது அவர்கள் கொள்கை. கொள்ளு ரசம் சளி தொந்தரவு உள்ளவர்களும், நோய் இல்லாதவர்களும்
சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து காற்றில் பறப்பது
போல இருக்கும். யவனம் காக்கும். கரிசல் காடு, கொங்கு மண்டலம், தென் கர்நாடகத்தில் கொள்ளு
பாரம்பரிய உணவு. குறிப்பாக விவசாய குடும்பத்தில் தவிர்க்க முடியாத உணவு. கரிசல் காட்டில்
விளைந்த கொள்ளுக்கு வீரியம் அதிகம். கரிசல் நிலத்தில் வேறு பயிர்கள் விதைக்க முடியாத
பொழுது எள்ளையும் கொள்ளையும் விதைத்து விடுவார்கள்.
பார்வை நூல்
1.
தொகுப்பாசிரியர்
பக்தவத்சலபாரதி – தமிழர் உணவு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் – 629 001, முதல் பதிப்பு
டிசம்பர் 2011.
Comments
Post a Comment