Skip to main content

ஆரோக்கியமாக வாழவேண்டுமா?

 

ஆரோக்கியமாக வாழவேண்டுமா?

          தமிழகத்தில் பரவலான உணவு என்று கணக்கு எடுத்தால் இட்லி, தோசை, பொங்கல், சோறு, சாம்பார், பொரியல், கூட்டு, ரசம், தயிர் இன்னும் தாராளமாகக் கணக்குப் போட்டால் அப்பம்,  அடை, வடை, புட்டு, ரவை உப்புமா, சப்பாத்தி. அசைவம் உண்பவர்களுக்கு முட்டை, கோழி, ஆட்டுக்கறி, மீன் இவையாவும் அவசியமானவை. ஆனா இவை மட்டும் போதுமானவை அல்ல. அதிலும் இவற்றை உணவாக மாற்றுவதும் அதனுடன் சேர்மானங்களும் அதில் இருக்கும் சத்துக்களையும் அழிப்பதாக இருக்கின்றன. அவை மூலப்பொருள்களாக வரும்போதே ஜீவசத்துக்களை இழந்து வருகின்றன. நடக்க முடியாத, நடக்க விடாத பிராய்லர் கோழியைச் சாப்பிட்டு எவ்வாறு மனிதன் நாலுபடி ஏறி இறங்க முடியும்.

          ஜீவசத்துக்கள் இழந்த உணவு உடலுக்குள் ஏற்கப்படும் போது இரட்டைச் சிக்கல் உருவாகிறது. ஒன்று உணவுக்காகக் காத்திருந்த உடல் தனக்கான சத்துக்கள் இன்றி ஏமாற்றம் அடைகிறது. இரண்டு இந்தக் குப்பைகளை அரைத்துச் செரித்து வெளித்தள்ள வேண்டிய மகத்தான பணியையும் எந்தக் கூலியும் இன்றி நிறைவேற்ற வேண்டி உள்ளது. உடலுக்குக் கூலி என்றால் சத்துக்கள். இவை தொடர்ந்து நடைபெறும் பொழுது நீண்ட நாள் நோயான நீரழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. இது மாதிரி உணவு முறைகளைப் பின்பற்றி வாழ்ந்தோம் என்றால் நம்நாட்டில் நீரழிவு நோய் பெரும்பாலனோருக்கு வர வாய்ப்புள்ளது.

          ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப வாழவேண்டும் என்றால் நம் மீது நமக்கு மரியாதை வேண்டும். டூ வீலர், கார் போன்றவற்றை சரியான தேதி பார்த்து சர்வீஸ் விடுவது போல நோய் வந்த பிறகு எதிர்கொள்வதை விட ‘வருமுன் காப்போம்’ என்ற வகையில் வரவிடாமல் தடுப்பது உணவில் தான் உள்ளது.

          பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவை நம் உணவின் மூலப்பொருட்களாக இருக்கின்றன. வாரத்தில் பாதி நாட்கள் முழுப் பயறு வகை சாம்பார், குழம்பு, சுண்டல் செய்து உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். பிரிட்ஜில் வைப்பதைத் தவிர்ப்பது, காய்கறிகள் வாங்கும்போது பூச்சி புழு இருக்கிற காய்கள் வாங்குவது, கோதுமை சொந்தமாக அரைத்துக் கொள்வது, டால்டா, சமையல் சோடா கலர்ப்பொடி, இரசயானங்கள் ஆகியவற்றை முழுமையாக சமையலில் சேர்க்காமல் இருப்பது என்ற தீவிர கவனம் மேற்கொள்ள வேண்டும்.

          நம் சமையலறைப் பாத்திரங்கள் கல், மண், செம்புப் பாத்திரங்கள் போல் உடல் நலத்திற்கும் சுவைக்கும் ஏற்றது. சில்வர், ஈயப் பாத்திரங்கள் உடல் நலத்திற்கு பாதுகாப்பானது அல்ல. குறிப்பாக நான்ஸ்டிக் பாத்திரத்தின் வேதி வெளியீடு அபாயகரமானது.

          மசாலாக்களையும் நாம் நாளுக்கு நாள் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். அவ்வப்பபோது அரைத்துக் கொள்வது சுவைக்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது. நமது மசாலாக்கள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, மல்லி, புதினா இவற்றை நாம் முறையான அளவில் பக்குவமாகப் பயன்படுத்தி வந்தாலே ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்று வள்ளுவரின் வாக்கிற்கிணங்க மருத்துவருக்கு வேலையே இல்லை. ஒரு காலத்தில் மிளகுதான் காரத்திற்குப் பயன்படுத்தி வந்தோம். நாலு மிளகு கையில் இருந்தால் எதிரி வீட்டிலும் விருந்து சாப்பிடலாம். அத்தனை விஷமுறிவு. மிளகு வாங்க வந்தவர்கள் மிளகுக்கு ஈடாக ஒரு காயைக் கொடுத்தார்கள். அதுதான் மிளகாய். மிளகாயின் பூர்வீகம் லத்தீன் அமெரிக்க நாடாகிய சிலி. வெள்ளைக்காரன் நன்றி மறக்காமல் அதற்கு அப்படியே பெயர் வைத்துவிட்டான்.

          மசாலாக்களை அதிகம் பயன்படுத்துவது. அரைத்து நாட்பட்ட மசாலாக்களைப் பயன்படுத்துவது புற்றுநோய்க்கு அஸ்திவாரம். ஒரு நாளைக்கு ஒரு முறை பழம் உண்பதைப் பழக்கமாக்கிக் கொண்டால் டாக்டரிடம் செல்லும் அவசியமில்லை.

          நமது தாய்தந்தையர் நமக்கு பெரும் கவனத்துடன் சோறு தயாரித்து தம் கையால் மையப் பிசைந்து நிலாவைக் காட்டி அமுது ஊட்டியவர்கள். நமக்காகப் பலமணி நேரம் செலவழித்து உணவு ஊட்டினார்கள். ஏன் நிலாவைக் காட்டி உணவு ஊட்டினார்கள். மேல் நோக்கும் பொழுது தொண்டைக்குழல், உணவுக்குழல் விரிகிறது உணவு இலகுவாக உள்ளிறங்கும். சின்ன உணவுக் குழலில் கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு இறங்கும்.

          சோற்றைக் குடி, நீரைக்கடி என்று தமிழ் இலக்கியமான மூதுரை இயம்புகிறது. அதாவது சோற்றை மென்று கூழ் போலாக்கி அதைக் குடிக்கவேண்டும். நீரை வாயில் ஊற்றிப் பற்களால் கடித்து அதன் பின் தொண்டைக்குள் அனுப்ப வேண்டும். உணவை இவ்வாறு அருந்தும் போது அனைத்து திசுக்களும் உள் வாங்குகின்றன. எளிதில் செரிக்கிறது. நெஞ்சுக்குக் கீழே இன்னொரு உணவு கொடவுன் தேவையில்லை. குடலில் நடக்க  வேண்டிய வேலையை வாயில் முடித்து விட்டால் வயிற்றில் நடக்க வேண்டிய வேலை மிச்சமாகிறது. உடலில் சுயப் பராமரிப்பு வேலைகள் சுருக்கமானால் வெளி வேலைகளுக்கு உடல் ஒத்துழைக்க முடியும்.

          குழந்தை பிறந்தது முதல் சுமார் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பர். பால் பருவம் தாண்டியதில் இருந்து பதின்ம வயது வரை பிள்ளைகளின் உணவு முறையானது நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் குறைவான அதிகச் சத்துள்ள உணவை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இப்போதுள்ள நமது பழக்கவழக்கங்களில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து விட்டால் நமது மரபின் வீரியத்துடன் காலத்தை எதிர்கொள்ளலாம்.

          நாற்பது வயதை கடந்தவர்கள் வெற்றிலை டப்பா வைத்திருந்தவர்கள் தற்பொழுது மாத்திரை டப்பா வைத்துள்ளார்கள். ஒவ்வொரு சிறு நகரங்களில் மருத்துவமனை தெருக்கள் உருவாகி வருகின்றன. நமக்கு நெருங்கின மனிதர்கள் படும் துன்பங்கள் மனத்தைப் பிசைந்து கொண்டே இருக்கின்றன. நாம் அறுபது வயது எழுபது வயதை கடந்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு நிறைய கற்றுக் கொள்வோம். அவர்கள் சொல்லில் குறையொன்றும் இருக்காது. அவர்கள் அமுதுட்டுவது போல தம் அனுபவத்தையும் நமக்கு ஊட்டுவார்கள். அப்பொழுது தான் நம் சந்ததியினரை ஜீவசக்தியுடன் வளர்க்க முடியும்.

பார்வை நூல்

1.  தொகுப்பாசிரியர் பக்தவத்சலபாரதிதமிழர் உணவு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் – 629 001, முதல் பதிப்பு டிசம்பர் 2011.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...