Skip to main content

நாட்டார் உணவுகள்

 

நாட்டார் உணவுகள்

          நாட்டார் உணவுகள் என்பது ஆதிமனிதன் உணவுப் பழக்கவழக்கங்களின் தொடர்ச்சியாகும். நெருப்பைக் கண்டுபிடிக்காத காலத்தில் ஆதிமனிதன் பழங்களையும், காய்களையும் இலைதழைகளையும் பூக்களையும் பச்சையாகவே சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள். இன்றும் குரங்குகள், அடர்ந்த வனங்களில் காய், கனிகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வதைக் காண்கின்றோம்.

     கிராமங்களில் மக்களின் உணவுகள் இன்றும் வேக வைக்காத, சுடாத உணவுகள் இடம் பெற்றுக் கொண்டுள்ளது.

·        காலை எழுந்தவுடன் பதநீர் குடிப்பது, பதநீரோடு நுங்கையும் கலந்து சாப்பிடுவார்கள். இவ்வாறு காலையில் சாப்பிட்டால் மதியம் வரை பசிக்காது. பதநீர் குடிப்பதால் உடல் சூடு தணிகிறது. தென்தமிழகத்தில் பனைமரங்கள் மானவாரியாக விளைகின்றன.

·        மாலையில் இளநீருடன் வழுக்கையையும் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். தினமும் காலையில் பதநீரும், மாலையில் இளநீரும் சாப்பிடுபவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

·        காலையும் மாலையும் பசுவின் பாலை மடியில் கறந்தவுடன் இளஞ்சூட்டில் குடிப்பார்கள்.

·        பெண்கள் காடுகளுக்கு வேலைக்குப் போகும் போது ஒரு கூட்டுதயாரிப்பார்கள். அந்தக் கூட்டு சாப்பிட உப்பும் உறைப்புமாக இருக்கும். வெங்காயத்தைப் பொடிப் பொடியாக முதலில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுவார்கள். அத்தோடு ஒன்றிரண்டு மிளகாய் நறுக்கி, பிறகு தக்காளிப் பழத்தை நசுக்கி அதே சட்டியில் போடுவார்கள். அத்தோடு சிறிது மல்லி இலை, கருவேப்பிலை இலை போட்டு உப்பும் சேர்த்து நொறுங்கப் பிணைவார்கள். அனைத்து சேர்த்து உப்பு, உறைப்பு, புளிப்பு, கரிப்பு என அனைத்துச் சுவையுடன் கூட்டு தயாராகிவிடும். இந்தக் கூட்டு சமைக்காத கூட்டாகும்.

·        முளைக் கட்டிய பயறு, கொண்டைக் கடலை போன்றவற்றையும் பச்சையாகச் சமைக்காமலே சாப்பிடலாம்.

·        பிரண்டைச் செடியின் தளிர் தண்டுடன் உப்பும் மிளகாயும் புளியும் சேர்த்துக் கல்லில் வைத்து, காடு கரைகளில் நசுக்கி ஒருவிததுவையல்செய்வார்கள். இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது.

·        பிஞ்சு மிளகாய், வெங்காயத்தின் மேல் தோலை உரித்துவிட்டு அப்படியே மென்று தின்று கஞ்சி குடிப்பதும் இன்றும் நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.

·        நனைய வைத்த பச்சரிசியுடன், தேங்காய் துண்டுகளும், வெல்லமும் சேர்த்து பண்டமாகச் சாப்பிடுவர்.

·        இளம் கம்மங்கதிர், தினைக்கதிர், சோளக்கதிர் போன்றவற்றைக் கசக்கி அதிலிருந்து வெளிவரும் முற்றாத தானியங்கள் சாப்பிட சுவையாக இருக்கும்.

தீயில் சுட்ட உணவுகள்

ஆதிமனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தப்பின் சுட்டுச் சாப்பிடக் கற்றுக் கொண்டான். தீயில் சுட்ட உணவு சுவையாக இருப்பதாலும், எளிதாக சீரணம் ஆவதாலும் சில காய்களையும், கிழங்கு வகைகளையும் சுட்டுச் சாப்பிட்டான்.

·        சீனிக் கிழங்கு, பனங்கிழங்கு, மீன் போன்றவற்றை உப்புக் கலந்தும் கலக்காமலும் சுட்டுச் சாப்பிட்டான். இன்றும் காடுகளில் சுட்டு உண்கின்றனர்.

·        கத்திரிக்காயைத் தீக்கங்குகளின் மேல் போட்டுச் சுட்டு, அதன் தோலை நீக்கிவிட்டுச் சதைப் பற்றான பகுதியுடன் பச்சை மிளகாயும், வெங்காயமும் உப்பும் சேர்த்துப் பிசைந்து ஒருவிதக் கூட்டுத் தயாரித்து வெஞ்சனமாகச் சாப்பிடுவார்கள்.

·        காட்டில் கிடைக்கும் பிராணிகளின் மாமிசத்தின் மேல் உப்பும் மிளகுவத்தல் தூளும் கலந்த கலவையைத் தடவி அதை அப்படியே தீயில்  இட்டு சாப்பிடும் வழக்கம் உள்ளது.

அவித்து உண்ணுதல்

·        பச்சை மொச்சைக் காய், துவரங்காய், மொச்சைக்காய் போன்றவற்றை ஒரு சட்டியில் போட்டு, அதில் சிறிது நீருற்றி அடுப்பில் வைத்து அவித்து அத்துடன் சிறிது உப்பும் சேர்த்துச் சாப்பிடலாம். இவை சுவையான சத்துள்ள உணவு பண்டமாகும்.

வறுத்து சாப்பிடுதல்

·        சோளக் கதிரை தீயில் வாட்டிய பின் கதிரைக் கையில் வைத்துக் கசக்க, சுட்ட சோள மணிகள் கீழே உதிரும். அதை மடியில் திரட்டி சாப்பிடலாம்.

·        பயறு வகைகளை ஓட்டில் போட்டு வறுத்து அதில் உப்புக் கலந்த தண்ணீரைத் தெளித்து ஆறவைத்துச் சாப்பிடலாம்.

·        பச்சரிசியையும் புழுங்கல் அரிசியையும் வறுத்து சாப்பிடலாம்.

மேலே கண்ட உணவுப் பழக்கங்களும், ஆதிமனிதனிடம் இருந்து தொடர்ந்து வரும் உணவு பழக்கங்களாகும்.

பார்வை நூல்கள்

1.   பக்தவத்சல பாரதி, தொகுப்பாசிரியர் – தமிழர் உணவு, காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில் – 629 001, பதிப்பு டிசம்பர் 2011.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...