Skip to main content

பெண்களின் நிலை (சங்க காலம் – சமகாலம் வரை)

 

                பெண்களின் நிலை (சங்க காலம்சமகாலம் வரை)

          சங்க காலத்தை வீரயுகக் காலம் என்பர். ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனேஎன்று பெண் குறுக்கப்பட்ட எல்லையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த காலம். பெண்களுக்கு இரண்டாம் நிலை என்பது வழக்கத்தில் வந்த காலம். இக்காலத்தில் ஆண்களுக்கு வீரமும், பெண்களுக்குக் காதலும் விதிக்கப்பட்டன. கற்பு, குழந்தை மணம், கைம்மை, பரத்தமை, உடன்கட்டை ஏறுதல், ஆண் மகவைப் போற்றுதல் முதலானவை புகுத்தப்பட்டன. எனவே, சங்க காலத்தில் பெண்ணடிமைக் கூறுகள் பெருமளவு இடம்பெற தொடங்கிவிட்டன எனலாம்.

          முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தில் கணவனைக் கேள்வி கேட்காமல் பின்பற்றும் மனைவியைப் படைத்து, பெண்களுக்கு முன்மாதிரியாக்கிக் காட்டுகிறது. மணிமேகலை, பெண்களுக்கு விதிக்கப்பட்ட கற்பைப் பாகுபடுத்தி நுணுக்கம் கூறுகிறது. ‘கல்லானாலும் கணவன்என்னும் கொள்கைக்கு மாறானதால் குண்டலகேசி வழக்கிழந்து போயிற்று. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலான குணங்கள் பெண்களின் சுயசிந்தனைக்குக் கடிவாளமாகப் புகுத்தப்பட்டன. இவ்வாறு அடிமை நிலையில் ஆழ்த்தத் தொடங்கிய சமுதாயமே வீரயுகக் காலத்து இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது.

          இடைக்கால இலக்கியங்கள் பெரும்பான்மையும் பெண்களை இடையூறாகக் கருதிப் பேசும் நோக்கினைக் கொண்டு அமைந்துள்ளது. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பேசுவதன் மூலம் பெண்ணை இழிவுப்படுத்தும் போக்கே தலைத்தூக்கி நிற்கிறது. மற்ற இரு உடைமைப் பொருளோடு பெண்ணையும் ஓர் உடைமைப் பொருளாகவே மதிக்கும் போக்கு இருந்தது எனலாம்.

          மேலை நாட்டுத் தாக்கத்தால் தமிழில் உரைநடை இலக்கியம் வளரத் தொடங்கியதும் நாவல் இலக்கிய அறிமுகமும் சமூக மாற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன எனலாம். தமிழில் முதல் நாவல் எழுதிய வேதநாயகம் பிள்ளை (1826-1889) கவிதை எழுதுவதில் தொடங்கி நாவலாசிரியராக மலர்ந்தவர். பெண் கல்வியின் இன்றியமையாமையைப்பெண்மதி மாலைஎன்ற கவிதை நூலில் வெளிப்படுத்தினார். மேலும் பெண் கல்வி, பெண் மானம் ஆகிய உரைநடை நூல்களையும் எழுதினார்.

  கவிதை இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் மூலமாகவும் பெண்விடுதலை கருத்துக்களைப் பேரிகை கொட்டி முழங்கிய மற்றொருவர் பாரதியார் ஆவார். கற்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றார்.

 இயக்க அடிப்படையில் 1920 – ஆம் ஆண்டு, தொடங்கித் தமிழகத்தில் செயல்பட்ட பெரியாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலை எழுதியவர். பெரியாரின் சமூகப் பங்களிப்புக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் பெண்களால் இவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டமேபெரியார்என்பதாகும்.

          பெண்களின் உள்ளத்தில் அடிமை எண்ணம் நீங்க வேண்டுமானால், அவர்களது நடை உடையிலும் மாற்றம் தேவை எனக் கருதினார். ஆண்கள் எளிமையான உடையணிவது போல பெண்களையும் உடையணியக் கோரினார். தாலி அணிவது அடிமைச் சின்னம் என்று ஆணித்தரமாகக் கூறினார். இவ்வகையில் பெண் உரிமைக்காக இயக்க அளவில் அவர் ஆற்றிய பங்கு இந்திய பெண்ணிய வரலாற்றில் தனியிடமும், தமிழகப் பெண்ணுரிமை வரலாற்றில் தலையாய இடமும் பெற்று விளங்குகிறது எனக் கூறலாம். பெண் விடுதலைக்கு வழிவகுக்கும் வகைகளில் பலரும் கவிதைகள் படைத்துள்ளனர்.

          என்ன குற்றம் புரிந்தாய் நீ

         தலைகுனிந்து நடப்பதற்கு?

         நேராகச் சீராகப் பார்

         நேசனைத் தேர்ந்தெடு

         நீசரைப் பார்வையால் சுட்டெரி

         தேவைப்பட்டால் துப்பாக்கி

         ஏந்துவதற்கும் தயங்காதே   (.சு.துரைசாமி)

என்று கூறுவதிலிருந்து பெண்களின் பழைய மரபுக் குணங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதோடு அவற்றுக்காகப் போராடும் சூழ்நிலை வந்தால் துப்பாக்கி ஏந்தவும் தயங்கக் கூடாது என்கிறது இக்கவிதை. இவ்வகையில் பெண் உரிமைக்காக இயக்க அளவில் பெண் விடுதலை கருத்துக்களும், பெண்ணுரிமை முழக்கங்களும் தமிழ்க் கவிதைகளில் பரவலாக இடம் பிடித்தன எனலாம்.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...