அஞ்சா நெஞ்சம்
வெண்ணிகுயத்தியார்
வெற்றி பெற்ற கரிகாலனுக்கு முன் நின்று அஞ்சாது சேரலாதனின் மறங்குன்றாத தன்மானச் சாவை
இவ்வாறு பாராட்டுகிறார். காற்றும் வீசும் திசைக்கு எதிராகவும், கப்பலைச் செலுத்திப்
புகழ் பெற்ற மரபில் வந்தவனே! கரிகால் வளவனே! வெண்ணிப் பறந்தலைப் போரில் வென்ற பெருவீரனே!
உன்னால் மார்பில் எறியப்பட்ட வேல், முதுகில் ஊடுருவிய புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து
உயிர்நீத்தும் பெரும் புகழ் எய்திய சேரலாதன் உன்னை விடச் சிறந்த வீரனாவான்.
காற்றைப்
பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் முறையை மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தனர்.
”நளியிரு
முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில்
ஆண்ட உரவோன் மருக!
களியியல்
யானைக் கரிகால் வளவ!
சென்ற மர்கடந்த
நின்னாற்றல் தோன்ற
வென்றோய்!
நின்னினும் நல்லன் அன்றே!
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிக்க புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே!! (புறம்,66)
வெண்ணிக்குயத்தியார் நின்னினும் நல்லன் அவன் எதிரியைப் புகழ்வது
நயமும் துணிவும் மிக்கச் செயலாகும்.
இங்ஙனம்
வெண்ணிக்குயத்தியார் ஒரே பாடல் பாடியிருந்தாலும், அந்தப் பாடலில் பண்டைய தமிழர் நாகரிகம்,
வரலாற்றுக் குறிப்பு, வென்றோன் தோற்றோன் ஆகிய இருவரையும் புகழ்தல், வென்றோனுக்கு முன்பாகவே
தோற்றோனைப் புகழுடையவனாகப் புகழும் துணிவு ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
Comments
Post a Comment