தமிழினத்தின்
பொதுமை நோக்கு
தமிழன் தனக்காக வாழக் கற்றனால்லன். தான்
வாழ்வதை விட உலகத்து உயிர்கள் இன்பமாக வாழ எண்ணுவமே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. ”தனக்கென
வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன்” என்ற தொடர் புறநானூற்றில் வருகின்றது. பண்ணன் மட்டுமல்லன்;
தமிழ் நாட்டில் பிறந்த அனைவருடைய பிரதிநிதிதான் பண்ணன் என வைத்துக் கூறப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவரையும் தன்னுடன் பிறந்தவராகவே
தமிழ் உள்ளம் எண்ணியது. அதனால் தான்,
”யாதும் ஊரே; யாவரும் ஊரே”!
என்ற தொடர்
இதனை வலியுறுத்துகின்றது. தன் நாடு, தன் மொழி, தன் இனம் என எண்ணாமல் உலகம் அனைத்தையும்
ஓர் இனம் என எண்ணிய பொதுமை உள்ளம் தமிழனை இன்றும் வாழ்வித்து வருகின்றது.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்
உலக நாடுகளில் சென்று தங்கிய இடமெல்லாம் இத்தொடர்பை வலியுறுத்தி வாழ்ந்தனர். தமிழ்ப்
பண்பாட்டை உலகப் பண்பாகவே வளர்த்தனர். இக்கருத்தை வலியுறுத்தவே சேக்கிழார் தமது நூலின் முதலிலும் இடையிலும் முடிவிலும் ‘உலகெலாம்’
எனப் பாடியுள்ளமை உளங்கொளத்தக்கது.
”உலகெங்கும் மேவிய தேவாலயந்தொறும்
மேவிய
பெருமாளே”
எனப் பாடிய
அருணகிரிநாதர் இறைவனிடத்திலும் இவ் ஒருமைப்பாட்டைக் காண்கின்றார். எத்துறையிலும் பொதுமை
காண விரும்பிய தமிழ் உள்ளத்தின் எதிரொலி எனலாம்.
பார்வை நூல்
1.
அழகப்பன். ஆறு.முனைவர்,
தமிழ்ப் பேழை, திருவரசு புத்தக நிலையம், சென்னை – 600 017, இரண்டாம் பதிப்பு –
2001.
Comments
Post a Comment