Skip to main content

சிறுதெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்

 

சிறுதெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்


          மக்களின் நம்பிக்கைக்கும் நேர்த்திக் கடனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நன்மையின் பால் விருப்பமும், தீமையின் பால் கொண்ட வெறுப்பும் இவைக் காட்டவில்லை. நம்பிக்கை வெற்றிபெறுமானால் அது நேர்த்திக் கடனாகிறது. இது இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் ஒரு பண்டமாற்று முறையாகும். கடவுளிடம் நீ எனக்கு இந்த காரியத்தைச் செய்து முடித்தால், நான் உனக்கு இதைச் செய்கிறேன் என்று நேர்ந்து கொண்டு செய்வதாகும். இறைவன் உயிர்களிடமிருந்து ஏதும் எதிர்பாரான் ஆயினும், மக்கள் தம் மன அமைதிக்காக இறைவனிடம் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தமே நேர்த்திக் கடனாகும்.

நேர்த்திக் கடன்

          நோய்களுக்குத் தக்க முறையில் நேர்த்திக்கடன் அளிக்கப்படுகிறது. உடல் உறுப்புகளில் ஏதேனும் ஊறு ஏற்படின் அதனை நீக்குவதற்கு அவ்வுறுப்பினைப் போன்ற மாதிரிகளை அளிப்பது உண்டு. தலை, கண், கால், கை, வயிறு முதலிய உறுப்புகள் அளிக்கப்படுகின்றன. இவை மண்ணாலோ அல்லது உலோகத்தாலோ செய்யப்பட்டிருக்கும். கண்ணில் ஊறு ஏற்பட்டவர்கள் வெள்ளியலான கண்மலரை இறைவன் கண்ணில் சாற்றி தம் கடனை நிறைவேற்றுவர். முடி இறக்குதல், அங்கப் பிரதட்சணம் போன்ற நேர்த்திக் கடன்கள் பெருமளவில் நடைபெறுகின்றன.

தொட்டில் கட்டுதல்

          பிள்ளையில்லாதவர்கள் வேண்டிக்கொண்டு தொட்டில் கட்டுவது மரபாகும். இதனை அம்மன் சந்நிதியிலோ அல்லது தல மரத்திலோ கட்டித் தொங்கவிடுவர். ‘ஆசைக்குப் பிள்ளை தரின் ஓசைக்கு மணி வாங்கித் தருவேன்’ என்று வேண்டிக் கொள்வோரும் உண்டு.

மாவிளக்கு இடுதல்

          பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சு வருதல் வேண்டித் தன் குலம் விளக்கம் பெறவும், ஒளி பெறவும் கோயில்களுக்கு விளக்கு ஏற்றும் முறையும், மாவிளக்கு இட்டு கடவுளை வணங்கும் மரபும்  உண்டு.

உயிர்ப்பலி

          உயிருக்கு ஊரு நேரும் பொழுது உயிர்க்கு உயிர் அளித்தல் உண்டு. பழங்காலத்திலிருந்து இன்று வரை ஆடு, சேவல் போன்ற உயிரினங்களை பலி இடுதல் உண்டு. மேலும் தற்காலத்தில் சேவல், ஆடு, பசு போன்ற உயிரினங்களை உயிருடன் கோவிலுக்கு விடப்படுகிறது. ‘மயானசூறை’  அங்காளம்மன் ஆட்டத்தின் போதும் சேவல் பலியிடப்படுகிறது.

தீ மிதித்தல்

          எண்ணற்ற மக்கள் இந்த வகையான நேர்த்திக் கடனை செய்து வருகின்றனர். மாரியம்மன் அல்லது காளியம்மனுக்கு செய்யும் பக்திக் கடனாகும். விரதம் இருந்தும், காப்புக் கட்டியும் தீ மிதிக்கின்றனர். மஞ்சள் ஆடை அணிந்து கரகம் எடுத்து வருவோரின் பின் வந்து தீக்குழியில் இறங்குவர்.

காவடி எடுத்தல்

          காவடி எடுத்தல் முருகனுக்கு உரியது என்றாலும் மாரியம்மனுக்கும் காளியம்மனுக்கும் நேர்த்திக் கடனாக காவடி எடுக்கப்படுகிறது. பால் காவடி எடுத்து வந்து அபிசேகம் செய்யப்படும். கம்பிகளால் அலகுக் குத்திக் கொண்டு காவடியைச் சுமந்து வருவர். சிலர் நாக்கிலும், கன்னத்திலும் வேலைக் குத்திக் கொண்டு வருவது வழக்கமாகும்.

நிறைவாக

        அச்சம் காரணமாக வரும் இடையூறுகளை நீக்குவதன் பொருட்டு தெய்வத்தின் துணையை நாடுகின்றனர். தாங்கள் வழிபடும் தெய்வத்தை மகிழ்விக்கப் பூசைகளும், பலியிடுதலும், காணிக்கைகள் செலுத்துதல் போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

துணை நின்ற நூல்

1.   புவனேஸ்வரி. முனைவர்.எ – நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு, சித்ரா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை – 600 024,  முதல் பதிப்பு – 2019.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...