புகழ்வது
போல் இகழ்ந்த புலமை!
நூல் - புறநானூறு
பாடல் எண் –
95
பாடியவர் –
ஔவையார்
திணை – பாடாண் திணை
துறை – வாள் மங்கலத் துறை சார்ந்தது.
இப்பாடல் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் நிகழவிருந்த போரைத்
தடுக்கத் தொண்டைமானிடம் தூது வந்த ஔவையார் பாடியது. அதியமானின் போராற்றலை இகழ்வது போல
புகழும் பாடலாகும்.
”இவ்வே பீலிஅணிந்து
மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ்
திருத்திநெய் யணிந்து
கடியுடை வியன்நக
ரவ்வே சிதைந்து
பகைவர்க் குத்திக்
கோடுநுதி சிதைந்து
உண்டாயின் பதங்
கொடுத்து
இல்லாயின் உடன்
உண்ணும்
இல்லோர் ஒக்கல்
தலைவன்
அண்ணல்எம் கோமான்
வைந்நுதி வேலே”
இந்தப் படைக் கலங்கள் எல்லாம் மயிற்பீலி
அணிவிக்கப் பெற்று, மாலைச் சூட்டி, பிடி திருத்தி, கூர்மழுங்கிக் கெடாதிருக்க நெய்
வேறு தடவி, காவல் மிக்க காப்பறையில் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் எம் தலைவன் அதியமானிடம்
உள்ள படைக் கருவிகளோ பகைவருடலைக் குத்திக் கிழித்ததலால் நுனி முறிந்து கொல்லன் உலைக்
களத்திலேயே செப்பனிடுவதற்காக எப்போதும் கிடக்கின்றன. செல்வம் இருந்தால் பிறர்க்குக்
கொடுத்தும், இல்லையென்றால் உள்ளதைப் பலரோடு பகிர்ந்தும் உண்ணும் வறிய சுற்றத்துக்குத்
தலைவனாகிய நெடுமான் அஞ்சியின் கூரிய நுனியுடைய வேலும் இத்தன்மையதே!
Comments
Post a Comment