அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!
ஔவையார் அருநெல்லிக்கனி ஈந்த அதியமானை வாழ்த்திப் பாடியது!
புறநானூறு
பாடல் எண் –
92
துறை – இயன்மொழி
வாழ்த்து
பாடப்பட்டவர்
– அதியமான் நெடுமானஞ்சி
”யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சிநீ அருளல் மாறே!”
பெற்றோர்க்குத் தம் பிள்ளையின் மழலை மொழி
இன்பந் தருவது போல், அருநெல்லிக் கனி அளித்த அதியனை வாழ்த்திக் கூறும் புகழ் மொழியும்
அவனுக்கு இன்பூட்டி அருளும் என்று ஔவையார் பாடியுள்ளார்.
Comments
Post a Comment