பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்
– இந்த ஐவரும் பஞ்சபாண்டவர்கள். இந்த ஐவரும் பாண்டு எனும் அரசனுக்குப் பிறந்தவர்கள்.
ஆதலால், பஞ்சப்பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர்.
பஞ்சபாண்டவரில் முதல் மூவரான தருமன், பீமன்,
அர்ச்சுனன் ஆகிய மூவரும் பாண்டு அரசனுக்கும் குந்திதேவியிடம் பிறந்தவர்கள். மற்ற நகுலன்,
சகாதேவன் பாண்டுவின் மற்றொரு மனைவியான மாத்ரி என்பவளுக்குப் பிறந்தவர்கள். இந்த பஞ்ச
பாண்டவர் ஐவருக்கும் பொது மனைவியாகத் திரௌபதி திகழ்ந்தாள். திரௌபதி மூலம் பஞ்ச பாண்டவர்கள்
பெற்ற பிள்ளைகள்,
தருமன் - திரௌபதி
- பிரதிவிந்தியன்
பீமன்
- திரௌபதி
- சுருதசேனன்
அர்ச்சுனன் - திரௌபதி - சுருதகீர்த்தி
நகுலன் -திரௌபதி - சதானிகன்
சகாதேவன் - திரௌபதி
- கருதகர்மா
திரௌபதி, பஞ்சபாண்டவரின் பொது மனைவி என்று
மேலே கூறப்பட்டது. ஆனால், திரௌபதி தவிர வேறு மனைவிகளும், பஞ்சபாண்டவர்களுக்கு இருந்தனர்.
வேறு மனைவிகளும் பஞ்ச பாண்டவர்களின் பிள்ளைகளும்,
தருமன் -
தேவகி - யௌதேயன்
பீமன்
- ஹிடம்பா
- கடோத்கசன்
பீமன்
- காசி - சார்வாகன்
அர்ச்சுனன் - சுபத்ரா
- அபிமன்யு
நகுலன் - கரணுமதி - நிறமித்ரா
சகாதேவன் - மாத்ரி - சுகோத்ரா
பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் திரௌபதி அனைவருக்கும்
உண்மையாக இருந்தாள். ஆனால் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் திரௌபதிக்கு உண்மையாக இல்லை என்பது
புலனாகிறது. அவர்கள் வாழ்ந்த காலச் சூழலில் ஆண்மகன் ஒருவன் பல மனைவியரை மணப்பது சமுதாயம்
ஒப்புக் கொண்ட தத்துவமாக இருந்தது.
பார்வை நூல்
1.
சௌந்திரபாண்டியன்.
முனைவர்.சு, - மறைந்து போன தமிழர் பண்பாடுகள், மாரிமுத்து பதிப்பகம், தசரதபுரம், சாலிகிராம்ம்,
சென்னை – 600 093, பதிப்பு – முதல் பதிப்பு, 2007.
Comments
Post a Comment