நம் நிழல் கூட நமக்கு உதவாது?
ஒரு
பெரிய பணக்காரன், வல்லவன், பலசாலி, நான் தான் எல்லாம் என்றும், தனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்தில் அலைந்து திரிபவன். இவன் ஒரு நாள்
குருவைக் காண்பதற்கு வந்திருந்தான். அவரிடத்தில் அந்த செல்வந்தன், குருவே! என்னிடத்தில் எல்லா செல்வமும் இருக்கிறது. என் உடலில்
பலமும் நன்றாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ்ந்திட வேண்டிய அவசியம் இல்லை. எவ்வித எதிர்பார்ப்பும்
இல்லை. என் கடமைகளையும், என்னால் முடிந்த
பல புண்ணியங்களையும் செய்திருக்கிறேன். என்னிடம்
அனைத்தும் இருக்கும் நான் ஏன் கடவுளை வழிபடவேண்டும்? அதனால் கால விரயம் என்று நான்
நினைக்கின்றேன் என்றான். குருவிடம் அந்த பணக்காரன்.
குரு, அப்படியா? சரி, நான் சொல்கின்ற அன்று
நீ என்னோடு வர முடியுமா? என்று கேட்டார். வருகின்றேன் என்றான் பணக்காரன். சரி என்று
ஒரு நாளை குரு சொல்ல, அந்த நாளில் இருவரும் புறப்பட்டுப் போனார்கள். போன இடம் பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் குரு அந்த பணக்காரனை
அழைத்துக் கொண்டு, வா போகலாம் என்று நெடுந்தூரம் அழைத்துச் சென்றார். இவ்வாறு நெடுந்தூரம்
போக, பணக்காரனால் நடக்க முடியவில்லை.
பரிதாபம், அவனுக்கு உடலெல்லாம் எரிச்சல்
வேர்வை வந்து உடல் தளர்ந்து நொந்து போய் நிற்கிறான். பாலைவனத்தில் கடுமையான வெயில்.
குருவோ சர்வ சாதாரணமாக போய்க் கொண்டே இருக்கிறார். பணக்காரனோ, என்னால் இனி ஒரு அடிக்
கூட நடக்க முடியவில்லை.
குரு, ஏனப்பா, அதோ உன் பின்னால் உன் நிழலே
உள்ளதே, அதில் ஒதுங்கி இளைப்பாறலாமே என்றார் குரு. என் நிழலில் நான் நின்றாலும் பயன்தராது
சுவாமி என்றான். உடனே குரு, இப்பொழுது புரிகிறதா? உன் நிழலே உனக்கு உதவாத பொழுது நீ
எவ்வளவு பெற்றாலும், என்ன செய்தாலும் எந்த சூழலிலும் சமாளிக்கும் நிஜமான திறமையும்,
பலமும் இறைவன் அருளால் மட்டும்தான் ஒருவர் பெற முடியும் என்பதை நீ உணரவேண்டும். அதே
போல் ஒரே மரக்கிளையை ஒரே வெட்டில் வெட்டுபவன் பலசாலி இல்லை. வெட்டுப்பட்டுப் பிரிந்த
கிளையை மீண்டும் எடுத்து வைத்து ஒட்டுபவனே நிஜமான பலசாலி. நிஜமான செல்வந்தன். புரிகிறதா?
இதை ஆழ்ந்து சிந்தித்தால் நீ இறந்து போனால் உன் உடன் வருவது ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே
நெற்றியில். புரிந்து கொள் நண்பா. ஒரு ரூபாய்க்குத் தான் நீ சொந்தக்காரன்!
Comments
Post a Comment