தந்தை
பெரியாரின் சமுதாய சிந்தனைகளாக...
ஒரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு சாதி, சமயம்,
மூடநம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று அனைத்தையும் புறந்தள்ளி, முன்னோர்களின்
வாழ்க்கையை வழிகாட்டியாகவும், அவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றியும் வாழ்ந்தால் நாமும்
முன்னேறலாம். நாடும் முன்னேறும். சங்க காலத்தில் எவ்வித பாகுபாடுகளுக்கும் முக்கியத்துவம்
கொடுக்காமல் மன்னராட்சி முறையில் நம் முன்னோர்கள் பொற்காலமாக வாழ்ந்தார்கள் என்பதைச்
சங்க இலக்கியங்களின் வழி அறியலாம். ஆனால் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு சிறப்பாக வாழ்ந்ததற்கு
என்ன அடையாளம் வைத்துள்ளோம்?...
தற்பொழுது நான் வாசித்தப் பெரியாரின் சிந்தனைகளில் என் மனதில் பதிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
·
ஆசிரியர்கள்
முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதையைக் கற்றுக் கொள்ளவேண்டும். மானம், ஆண்மை என்ன
என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நமது கல்வி
முறையில் படிக்கும் பொழுது தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை
நிறுத்தினாலும் அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியனவாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை
பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.
·
பக்தி என்பதே
அடிமையை விட மோசமான வார்த்தை என்று எண்ணுகின்றேன். பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு
செய்ய வேண்டியதுடன் மனத்தினாலும் செய்ய வேண்டும். ஆகவே, சுதந்திரத்தையும், சுயமரியாதையும்
எதிர்பார்க்கும் மனிதன் யாருக்கும் பக்தனாயிருக்க முடியாது. யாரையும் பக்தியாயிருக்கச்
சொல்லவும் முடியாது.
·
மேல்நாடுகளில்
அச்சாகின்ற புத்தகங்கள் அடிக்கடி மாறாது. தகுதி வாய்ந்த அறிவு நூல்கள் தான் வெளியிடுவார்கள்.
அதனைப் பிளேட்டில் வார்த்து 20, 30 ஆண்டுகள் கூட வைத்து இருப்பார்கள். தேவையான அச்சிட்டுக்
கொள்வார்கள். நமது நாட்டில் கல்விக் கொள்கையில் ஒரு நிலை இல்லாத தன்மை இருப்பதால் தான்
அவ்வப்போது மாற்றுகின்றார்கள்.
·
ஒரு தகப்பன்
வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே
ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள்
வாழ முடியும்.
·
நல்ல குடும்பம்
என்பது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கையில் செலவை வரவுக்குட்பட்டே
அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பம்தான் கண்ணியமான குடும்பமாகும்.
·
மக்களிடம் உணர்ச்சி,
ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் முதலில் சினிமா ஒழிக்கப் படவேண்டும். நீதி ஏற்பட வேண்டுமானால்
வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால்
தேர்தல் முறை ஒழிக்கப் படவேண்டும். வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால்
லைசென்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும். உயர்நீதி மன்றத்தில் சமூக நீதி வேண்டுமானால்
பார்ப்பனரை நீதிபதியாக ஆவதை ஒழிக்கப்பட வேண்டும்.
·
மனிதனுக்கு
ஆறறிவு இருந்து பயனென்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் சாதி இல்லையே?
·
நமது நாட்டைப்
பிடித்துள்ள பேய்கள் ஐந்து. அவை கடவுள், மதம், சாஸ்திரம், சாதி, ஜனநாயகம் நம்மை அரித்து
வரும் நோய்கள் பார்ப்பான், பத்திரிக்கை, அரசியல் கட்சி, தேர்தல், தேர்தல், சினிமா.
·
சாதி ஒழிய வேண்டுமென்றால்
நம் நாட்டிலுள்ள கடவுள்கள் குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டும். நம்முடைய பெண்கள் விடுதலை
அடைய வேண்டுமானால் கற்பு என்ற பயம் ஒழிய வேண்டும்.
·
பிற நாட்டில்
அறிவுக்குத் தான் மதிப்பே தவிர, மூட நம்பிக்கைக்கு அல்ல, மனிதனுடைய நம்பிக்கைக் கொண்டு
முன்னேறுவார்கள். ஆனால், நம் நாட்டில் ‘எல்லாம் கடவுள் செயல்’, ‘எல்லாம் விதி’ என்று
உட்கார்ந்து கொண்டு சும்மா புராணக் கதைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவைகளை நினைத்தால்
முட்டாள்தனமாக இல்லை. கால நேரத்தை வீணடித்து, வாழ்க்கையைத் தொலைத்து வீணடிப்பது அறிவு
சார்ந்த செயலா?
பார்வை நூல்
1. மழுவை புரட்சிதாசன் – தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்,
கற்பகம் புத்தகாலயம், சென்னை – 600 017, நவம்பர் 2019.
Comments
Post a Comment