Skip to main content

கற்புப் பற்றி பெரியாரின் கருத்துக்கள்

 

கற்புப் பற்றி பெரியாரின் கருத்துக்கள்

        தொல்காப்பியர்,

கற்பெனப்படுவது காரணமொடு புணரக்

        கொளக்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

        கொடைக்குரி மரபினோர் கொடுப்பதுக் கொள்வதுவே

இவை கிராமப்புறங்களில் நல்லொழுக்கமாகும். துணைவியாக ஒருத்தியைக் கொள்வதற்கு உரிய தலைவன், பெண் கொடுக்க உரிய மரபினரிடத்துப் பெண் கேட்டு, அவர்களால் கொடுக்கப்பட்டுத் திருமண நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுவது கற்பு ஆகும். இது கற்பொழுக்கம் என்கிற திருமண வகையைக் குறித்தது.

          கற்பு என்னும் சொல் திருமணம் ஆன ஒரு பெண் என்பதைக் குறிப்பதற்கே பயன்படுகிறது. அப்பெண்ணின் ஒழுக்கம் பற்றி குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை.

          பெண்ணிற் பெருத்தக்க யாவுள கற்பென்னும்

           திண்மையுண் டாகப் பெறின்

என்பதற்கு கற்பு என்னும் திண்மை உடையவளாக ஒரு பெண் இருப்பாளானால் கணவனுக்கு அப்படிப்பட்ட பெண்ணை விடப் பெருமை உடையது வேறொன்றும் இல்லை.

          ஒருமை மகளிரே போலப் பெருமையும்

           தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு

என்பது திருக்குறள். ஒருவனோடே இருந்து வாழும் மகளிர் பெருமைக்கு உரியவர். அதே போல் தன்னைத் தானே தற்காத்துக் கொண்டு ஆடவனும் நடந்தால் அவனுக்குப் பெருமை உண்டு என்று பொருள் கூறப்படுகிறது.

         கற்பு என்னும் திண்மைஒரு ஒழுக்கமாகப் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்டு இருப்பது போல, ஆணுக்குதன்னைத்தான் கொண்டொழுகுதல்என்கிற ஒழுக்கம் திருக்குறளில் வரையறுக்கப்பட்டிருப்பதை இவ்விரண்டு குற்ட்பாக்களைக் கொண்டு நாம் அறியலாம். அப்படி ஒழுகுவதால் பெண் பெருந்தக்க கற்பு உள்ளவளாகவும், ஆண் பெருமை உடையவனாகவும் திகழ முடியும் என்பது இதனால் பெறப்படும்.

கற்புப் பற்றி பெரியார்

    கற்பு என்கிற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது, படி-படிப்பு எனபது போல் கல்கற்பு என்கின்ற வாக்கியப்படி பார்த்தல் கற்பு என்பது சொல் தவறாமை, அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்த்திற்கு விரோதமில்லாமல் நடப்பது என்கின்ற கருத்துக்களைக் கொணடிருக்கிறது”.

என்கிறார்.

          கற்பு என்ற சொல்லை பகாப்பதமாக வைத்துப் பார்த்தால், மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களைக் குறிக்கும். நிறை என்கின்ற சொல்லுக்குஅழிவின்மை’, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன. கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும் அழிவில்லாதது, உறுதி யுடையது என்கின்ற பொருள்களே காணக்கிடைக்கின்றன.

          மேலும் கற்பு ஒழுக்கம் உலகம் முழுவதும் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்றும் பெரியார் ஆராய்ந்துள்ளார். கற்பு உணர்ச்சி உலகம் முழுவதும் ஒரே சீராக இருக்கவில்லை. இதனை,

          ஒரு தேசத்தில் நல்லொழுக்கமென மதிக்கப்படுவது வேறொரு

           தேசத்தில் கூடாவொழுக்கமாக எண்ணப்படுகிறது. பொதுவாக பெண்

 புருஷனின் அடிமை என்றும் போகப் பொருள் என்றும் உலக மக்கள்

 ஒரு காலத்தில் நம்பியே வந்திருக்கின்றனர்

என்கிறார்.

          உலகிலுள்ள ஆண், பெண் எல்லோருக்கும் இருக்கின்ற சுமைகளும், குறைபாடுகளும் ஒரே தன்மை வாய்ந்தவையாகும். திருமணத்திற்குத் தொடர்பில்லாத கற்பு என்பது பெண்கள் பேரில் மட்டும் சுமத்தப்பட்டிருப்பதைக் கூர்ந்து ஆராய்ந்த பெரியார், பெண் ஆணுக்குரிய ஒரு சொத்து போலவும், ஒரு நுகர்வுப் பொருளாகவும் கருதப்பட்டு, தனக்கே உரியவளாக இருக்க வேண்டும் என்கிற தனிஉடைமைச் சிந்தனையோடு ஆண் வாழ்வது பெண்ணடிமைக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.

           கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்று எழுதிவிட்டதன் பலனாலும்,

           பெண்களை விட ஆண்கள் செல்வம், வருவாய், உடல்வலி

           கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும், பெண்கள்

           அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது

           தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கு அனுகூலம் ஏற்பட்டதே

           தவிர வேறில்லை”                        

மேலும்,

          ”புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி

          வார்த்தைகளே காணாமல் மறைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம்

          ஆண்களின் ஆதிக்கம் தவிர வேறில்லை”

          என்று கற்பொழுக்கம் பெண்களின் மீது மட்டும் சுமத்தப்படுவதற்கு ஆண்களின் ஆதிக்கமே காரணம் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

          பெண்ணுக்கு மட்டும் கற்பு ஒழுக்கம் என்று வலியுறுத்தப்பட்டதால் ‘விபச்சாரம்’, ‘கற்பழிப்பு’ போன்ற கேடுகள் நிலவின.

          இத்தகைய கேடுகள் நிகழாமல் இருக்க வேண்டுமானால் ‘கற்பு ஒழுக்கம்’ இருபாலர்க்கும் சமம் என வலியுறுத்த வேண்டும். இதனை,

          ”ஒரு பிறப்புக்கு ஒரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து இரு

 பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும்”

என்று தீர்வு கூறுகிறார் பெரியார். இருபாலர்க்கும் கற்பு ஒழுக்கம் என்பது ஒரே நீதியாக வழங்கப்படுவதன் மூலம் பெண் அடிமை நிலையிலிருந்து விடுபட முடியும்.

       பெண்ணுக்கு மட்டும் கற்பு ஒழுக்கம் என்று வலியுறுத்தப்பட்டதற்குக் காரணம் வாரிசு உரிமையே,

          ”பெண்கள் பிற்றைபெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக

 வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்தவகையிலும்

 அவர்களுக்கு விடுதலையில்லை”

என்கிறார் பெரியார்.

          கற்பு ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டும் என்று கூறுவதிலிருந்து மாறுபட வேண்டுமானால் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும். பிள்ளை பெறுவதை நிறுத்தினால் ‘கற்பு ஒழுக்கம்’ அவசியமில்லாமல் போகலாம். இதனால் மக்கள் தொகை குறையத் தொடங்கும். இதன் காரணமாக மக்கள் இனம் பெருகுவது தடைப்படும்.

          திருமணத்திற்குச் சம்மந்தப்படாத கற்பு என்பது பெண்கள் மீது மட்டும் சுமத்தப்பட்டிருக்கிறது. கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை. ‘ஒரு பிறவிக்கு ஒரு ‘நீதி’ என்கின்ற கற்புமுறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்ணடிமை நீங்கி உரிமை பெற முடியும். அதற்கு பெண்களுக்குக் கல்வி அறிவை அளிக்க வேண்டும். மேலும் ‘கன்னிகா தானம்’ ‘கலியாணம்’ ‘தாராமூகூர்த்தம்’ ஆகியவைகள் ஒழிய வேண்டும். அன்று தான் பெண்கள் சுதந்திரம் அடைய முடியும் என்பது பெரியாரின் கருத்தாகும்.

பார்வை நூல்

1.   கிராம சீர்திருத்தங்களில் தந்தை பெரியார் – லட்சுமி, அம்சா ஆப்செட்ஸ், சென்னை. முதற்பதிப்பு - 2009

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...