சித்தர் பாடல்களில்
உணவு குறித்த பழமொழிகள்
சித்தர்கள் வாழ்வில் சொல்லி வைத்த பழமொழிகள்
ஈண்டு காணலாம்.
·
பத்து மிளகு
இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பதால் மிளகுக்குரிய குணவியல்பினைக் காணலாம்.
·
”சிறு குழந்தை
இல்லாத வீடும், சீரகம் இல்லாத உணவும் சிறக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
·
இஞ்சியின் மருத்துவ
குணத்தை சித்தர்கள், ”காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு
வந்தால் இளமையோடும் உடல் வனப்போடும் வாழலாம் என்று சித்தர்கள் பாடியுள்ளனர்.
·
உடல் வலுவிற்கு
ஏற்றது ‘எள்’ என்பதைப் புலப்படுத்தும் பழமொழி, ‘இளைத்தவன் எள் தின்பான்’ என்றும் ‘கொழுப்புள்ளவன்
கொள் தின்பான்’
·
சித்தர்கள்
ருசியைக் கூடக் கண்டறிந்து காய்களிகளின் வழி அறிவித்துள்ளனர். இதனை,
”கத்திரிக்காய்க்கு
காம்பில் ருசி
வெள்ளரிக்காய்க்கு
விதையில் ருசி”
என்பதால் உணரலாம். பாகல் காயைப் பகல் உணவில்
சேர்க்க வேண்டும் என்பதை, ‘பாகல் பகல் உணவுக்கு’ என்ற பழமொழியால் அறியலாம். இவ்வாறே
கீரையையும் பகல் உணவில் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
·
உணவில் ஒவ்வாத
உணவுகளை நீக்கவும், வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் எனபதை,
”பத்தியத்தை
விட்டாற பிணி வகைகள்
வித்தரிக்கும்
விட்டிடவை விட்டாற வினை”
இதனை வள்ளுவரும்,
”மாறுபாடில்லாத வுண்டி மறுத்துண்ணின்
ஊறு பாடில்லை உயிர்க்கு”
என்கிறது.
·
நோயின்றி வாழும்
நெறியைத் தேரையர் என்ற சித்தர்,
”திண்ண மிரண்டுள்ளே சிக்க வடக்காமற்
பெண்ணின் பாலொன்றைப் பெருக்காமல் – உண்ணுங்கால்
நீர் சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி
யுண்பவர்தம் பேரூரைக்கில் போமே பிணி”
என்று நோயில்லாமல்
வாழும் முறையை பின்பற்றியுள்ளார்.
பார்வை நூல்
1.
வாழ்வியல் பண்பாட்டுத்
தாளிகைகள் – முனைவர் ச.வனிதா, கோடம்பாக்கம், சென்னை
-600 024, முதல் பதிப்பு – 2015.
Comments
Post a Comment