திருவண்ணாமலை – கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை, ஜோதி வடிவமாக நெருப்பாக சிவன்
காட்சி தரும் மலை! இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். இறைவன் ஒருவனே என்ற ஒப்பற்றத்
தத்துவத்தை விளக்கும் தலம் திருவண்ணாமலை திருத்தலம். திருவண்ணாமலையில் பத்து நாட்கள்
கார்த்திகை தீபவிழா நடக்கும். பத்தாம் நாள் மலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். பத்தாள்
நாள் மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. முதலில் அண்ணாமலையாரின் கர்ப்பக்கிரகத்தில் கற்பூரம்
ஏற்றப்படும். அந்த தீபத்திலிருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கிலிருந்து
ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டம் ஐந்து விளக்குகள் பஞ்ச
சக்திகள் என்னும் பஞ்ச மூர்த்திகள். பிறகு எல்லா தீபங்களும் கொடி மரம் அருகில் ஒன்றாக்கப்படும்.
இதை சர்வாலயதீபம் என்பார்கள். பெரிய அண்டாவில் நிறைய நெய்யை ஊற்றி பெரிய திரியை அதில்
வைத்து தீபம் ஏற்றுவார்கள்.
திருவண்ணாமலை எண் கோண வடிவத்தில் இருக்கிறது.
மலையைச் சுற்றி வரும் போது எட்டு மைல்கள் கடக்க வேண்டும். மலையில் அஷ்ட லிங்கங்கள்
உள்ளன. எட்டு என்பது கெடுதல் தரும் எண் அல்ல என்பதை நமக்கு புரிய வைப்பதாக திருவண்ணாமலை
அமைந்துள்ளது.
இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம்,
நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானய லிங்கம் என்பது எட்டு
லிங்கங்கள். ஒவ்வொரு பவுர்ணமி இரவிலும் கிரிவலம் செய்பவர்கள் திருவண்ணாமலை ராஜ கோபுரத்திலிருந்து
துவங்க வேண்டும். முதலில் இந்திர லிங்கத்தை வழிபட்டு பயம், கோபம், சோகம், குடும்ப பிரச்சனைகள்
எல்லாம் மறந்து பிரம்மச்சரியமாக அன்று இருந்து, குளித்து சுத்தமான ஆடையுடுத்தி விபூதி
அணிந்து செருப்புப் போடாமல் நடக்கத் துவங்க வேண்டும். கைவீசி நடக்க கூடாது. வாகனங்களில்
செல்லக் கூடாது. வழியில் சாப்பிடக் கூடாது. இடையில் சோதனைகள் வந்தாலும் சிவனை மனதில்
நினைத்து நடக்க வேண்டும். இந்திர லிங்கத்தில் ஆரம்பித்து ஈசான்ய லிங்கம் சுடுகாட்டில்
முடிகிறது! எப்படி வாழ்ந்தாலும் கடைசியில் சேருமிடம் இதுவே என்பதை இது குறிக்கிறது.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில்
நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையில் ஆண்டவனை நினைத்தாலே முக்தி. இந்த மலையைச்
சுற்றி வரும்போது பவுர்ணமியின் குளிர்ச்சியில், மூலிகைகளின் வாசத்தில் நோய் நொடிகள்
எது இருந்தாலும் குளிர் நீங்கி விடும். சிவனுக்கு திங்கள் கிழமை சோமவார விரதம் இருப்பார்கள்.
ஆனால் திருவண்ணாமலை அக்னி மலையாகும். அருணாசலம் என்னும் பெயர் உண்டு. அருணம் என்றால்
சிவப்பு! அக்னிக்குரிய கிரகம் அங்காரகன் எனப்படும் செவ்வாய். அதனால் செவ்வாய் கிழமைகளில்
விசேஷ பூசைகள் நடக்கும். அன்று அண்ணாமலையாரை வழிபட்டு பிறவிப் பிணியில் இருந்து நீங்கலாம்.
திருக்கார்த்திகை அன்று அவல், வெல்லம் கலந்து
பாயசம் செய்து பலகாரங்களுடன் நிறைய விளக்குகளை ஏற்றி வைத்து ஆண்டவனை வணங்க வேண்டும்.
குழந்தைகள் தீபாவளியைப் போல வெடி பட்டாசுகள் கொளுத்தலாம்.
நகரத்தில் ஒவ்வொரு அறை வாசலிலும் விளக்கு
ஏற்ற வேண்டும். தலை வாசற்படியில் இருந்து விளக்கை ஏற்றிக் கொண்டு வரவேண்டும். கூடத்தில்
பெரிய குத்து விளக்குகளை ஏற்றினால் லட்சுமி கடாட்சமாக இருக்கும்.
இலக்கியங்களில் கார்த்திகை தீபம்
கார்த்திகை
தீப விழா பவுர்ணமி நாளில் வந்ததையும், அந்நாளில் மக்கள் விளக்கேற்றி வழிபட்டதையும், அகநானூறு பாடல்
வழி அறியலாம்.
”மழைகால் நீங்கிய மாசு விசும்பிற்
குறுமுயல் மறுந்தம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
பழுவிறல் மூதூர் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர” (அகம்-141)
இங்கு அறுமீன்
என்பது கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் குறித்தது. கார்த்திகைத் திருநாளில் மக்கள் விளக்கேற்றியதையும் அந்நாளில்
மழை வந்ததையும் கார் நாற்பது குறிக்கிறது.
”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகி
புலமெலாம் பூத்தன தோன்றி – சிலமொழி
தூதொடு வந்தமழை” (கார் நாற்பது -26)
கார்த்திகை
தீப நாளில் மலையில் தீபம் ஏற்றியதை சீவக சிந்தாமணி குறிக்கிறது.
”குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ் குவளைப் பைந்தார்” (சிவக சிந்தாமணி -256)
களவழி
நாற்பதில் பொய்கையார், கார்த்திகையில் தீபம் ஏற்றப்படுவதைக் குறித்துள்ளார்.
”ஆர்ப்பு எழுந்த நாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்தோடி
தூக்கி எறிதரு வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழிவளக்குப் போன்றனவே
போர்க்கொடிதனை, பொருபுனல், நீர்நாடன்
ஆர்த்தமா அட்டகளத்து” (களவழி நாற்பது-17)
வளர் கார்த்திகை
மாதந்தோறும் வரு கார்த்திகை நாள் தன்னிலே ”பளகான தில்லா அன்பர்கள் பரிவாகவே யேத்தித் தொழ கிளர் மாமலை
தனிலே ஒளிகெழு சோதி காட்டா நின்ற நின் அளவு ஆர்தெரியவர் ஐயனே அருணாசல அருணாசலா” ஆண்டுதோறும் வரும் கார்த்திகை தீபநாளில், திருவண்ணாமலையில், இறைவன் சோதிப்பிழம்பாய்
எழுந்தருள்வதை அருணாசல
சதகம் மொழிகிறது.
Comments
Post a Comment