ஆப்ரகாம்லிங்கன்
ஆப்ரகாம் லிங்கன் சாதாரண செருப்பு தைக்கும்
தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையோடு குடும்பத் தொழிலினை செய்தவர்.
தனது பட்டப் படிப்பிற்கு தேவையான புத்தகம் ஒன்று வாங்குவதற்காக மூன்று நாட்கள் ஏர்
உழுது சம்பாதித்து புத்தகத்தை வாங்கியவர். சட்டக் கல்வி பயின்றவர். அரசியலில் ஆரம்பம்
முதல் பல்வேறு தோல்விகளைக் கண்டவர்.
தோல்வியின் தடைகளையெல்லாம் கடந்து அரசியலில்
மிக பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். தனது
பதவியேற்பில் அவர் சொற்பொழிவு நிகழ்த்திய போது, எதிர்க்கட்சியில் உள்ள ஒருவர் இவரை
அவமதிக்கும் எண்ணத்துடன் ”மிஸ்டர் லிங்கன், இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள்
உங்கள் தந்தையார் தைத்துக் கொடுத்தவை தெரியுமா?” என்று ஏளனமாகக் கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்டு பலரும் சிரித்தனர்.
ஆனால், லிங்கன் கோபம் கொள்ளவில்லை. மாறாக அவரது கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து
ஓடியது.
”ஐயா, இந்த நேரத்தில் என் தந்தையை நினைவு
கூர்ந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. அவர் மட்டுமல். நானும் செருப்பு தைக்கும் தொழிலில்
வல்லவன்தான். என் தந்தையிடம் இத்தொழிலைப் பயின்றிருக்கிறேன். உங்கள் காலணியில் ஏதேனும்
குறை இருந்தால் என்னிடம் தாருங்கள். உடனே சரி செய்து தருகிறேன்” என்றார். கேள்வி கேட்ட
எதிர்க்கட்சிக்காரர் முகத்தில் அசடு வழிந்தது.
பார்வை நூல்
1.
அறிஞர்கள் வாழ்வில்
நகைச்சுவை – பிரியா பாலு, வானவில் புத்தகாலயம், தி.நகர், சென்னை – 600 017.
Comments
Post a Comment