இதுவா பகுத்தறிவு?
தமிழர்கள் ஒவ்வொருவரும் தொடர்பு மொழியான
ஆங்கிலத்திலே தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்
அளவுக்கு ஓரளவு புலமை பெற்றிருந்தால் போதும். அதற்கு மேல் அதில் புலமை அவசியமில்லை.
இந்தியாவிற்கு ருஷ்யாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வந்த தொழில் நுட்ப அறிஞர்கள் பலர்
ஆங்கிலத்தைப் பிழையாகத் தான் பேசுகிறார்கள். ஆனால், தாங்கள் சொல்ல நினைத்ததைச் சொல்ல
அவர்களால் முடிந்தது. அவர்கள் இந்திய அரசால் அழைக்கப்பட்டு அவர்கள் நாட்டு அரசுகளால்
அனுப்பப்பட்ட தொழில் நுட்ப அறிஞர்களாவர்.
நம் நாட்டு படிப்பாளிகள் ஆங்கிலத்தில் பிழையாகப்
பேசினால் எள்ளி நகையாடுகிறார்கள். தமிழரல்லாதவர்கள் ஒருவர் தமிழைப் பிழையாகப் பேசினால்
இவர்கள் சிரிப்பதில்லை! இந்த மூடத்தனம் தமிழ்நாட்டில்தான் முடிசூடிக் கொண்டு ஆட்டம்
போடுகிறது!
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆங்கிலேயர்
இந்த நாட்டை ஆண்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதால் அவற்றில் ஆங்கில ஆதிக்கம் பெற்று
விட்டது. இந்த உண்மையை உணர முடியாத மூட நம்பிக்கை வேறு எங்கு இருக்க முடியும்.
ஆங்கில மொழி இந்திய நாட்டில் – இந்தியர்
வாழ்க்கையில் எங்கும் எதிலும் இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தமிழரில் சிலருக்கு வீட்டு மொழியாகவும் பரவி விட்டது. தாய்மொழியான தமிழில் பேசுவது
அவமானமென்றும் நினைக்கின்றனர். இந்த அவலம் எந்நாட்டிலும் இருக்காது!
Comments
Post a Comment