பெரியாரின்
பெருநெறிகள்
பெரியாரின் தீவிரமான கருத்துகள் அனைத்தும்
மேலைநாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டு விட்டன. நமது மக்கள் பெரியாரின் வழியில் கண்ணைமூடி
கண்ணைத் திறப்பதற்குள் திடீர் மாற்றம் கொண்டு முன்னேற முடியும் என்பதை எதிர்பார்ப்பது
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட கதையாக முடியும்.
பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புதான் பல வடிவம்
பெற்றிட இயலும். இன்று நம்மில் பலர் மண்ணில் மறைந்திருக்கும் இரும்புக் கனிமவளமாக,
வலுவில்லாத வார்ப்பட இரும்பாக, வெறும் இரும்பாக, விஞ்ஞான ரீதீயில் மேலும் பலம் பெற்ற
இரும்பாகவும் காட்சி தருகிறோம்.
பெரியாரின் முயற்சியினால் ஒரு சிலரே காய்ச்சப்பட்டு,
வெகுசிலர் பழுக்க காய்ச்சப்பட்டனர். அவரால் பல உருவங்களை பெற்றிருக்கிறோம். ஓட்டப்
பந்தயத்தில் கடைசி அணியில் ஓடி வருபவரையும் பார்த்து உற்சாக மூட்டுவதைப் போல தந்தை
பெரியார் நமக்குச் சமயத்தில் கை கொடுத்துக் கரையேற்றி விட்டார்.
பெரியார் நாட்டிற்கு
நல்கிய திட்டங்கள்
·
முதல் திட்டமாக
பிறவியால் கீழ் – மேல், உயர்வு – தாழ்வு கற்பிக்கும் ஜாதிமுறை என்பதை அடியோடு போக்க
வேண்டும்.
·
கோயில் முறை
எடுக்கப்பட்டு பிராத்தனை இடங்களாக – உருவ சம்பந்தமே இல்லாத பொது மண்டபங்கள் இருக்கலாம்
என்றும் கூறுகிறார்.
·
மடம், மடாதிபதி,
குரு – கோயில் சொத்து, மட சொத்து ஆகியவைகள் எடுக்கப்பட வேண்டும்.
·
கோயில் உற்சவங்களை
நிறுத்தி, சமூகவியல், அறிவியல், பொருளியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.
·
எல்லோருக்கும்
ஒரே மாதிரி உடை சாயல் ஏற்படுத்த வேண்டும்.
·
அகராதியில்
மக்களுக்கு, சமூகத்திற்கும் தேவையற்ற சொற்களை நீக்க வேண்டும்.
·
அவசியமில்லாத
வசதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
·
லாபம் வரையறுக்கப்
படவேண்டும்.
·
அதிக மதிப்புள்ள
நகைகள் அணிவதை அனுமதிக்கக் கூடாது.
·
உத்தியோகங்களில்
சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பலப்பல யோசனைகளைப் பெரியார் கூறியுள்ளார்.
பார்வை
நூல்
1. வேணு ஏ.எஸ்,
- பெரியார் ஒரு சரித்திரம், பூம்புகார்
பிரசுரம்,மேகலை எண்டர்பிரைசஸ், சென்னை
-5, முதற்பதிப்பு – 1980.
Comments
Post a Comment