Skip to main content

நெப்போலியன்

 

நெப்போலியன்


நெப்போலியன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளாக...


·        ஓர் இராணுவ வீரனை நெப்போலியன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் ஓர் உயர் அதிகாரி. இவன் அவ்வளவு திறமைசாலியான வீரன் அல்ல. அதனால் போரிலிருந்து இவனுக்கு ஓய்வுத் தரவேண்டும் என்று ஒரு குற்றச்சாட்டாக நெப்போலியனிடம் கூறினார்.

                             இவன் என்ன செய்தான்? என்று நெப்போலியன்

                              கேட்டார்.

எதிரிகளின் தாக்குதலில் காயப்பட்டு ஒன்பது முறை தரையில் விழுந்தான். பத்தாவது முறைதான் எழுந்தான்.

உடனே நெப்போலியன் முகம் பிரகாசமானது. வீரனைப் பார்த்து, ‘உன் விடாமுயற்சியையும், வீரத்தையும் பாராட்டுகிறேன். ஒன்பது முறை வீழ்ந்தாலும் சோர்ந்து விடாமல் பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றி பெற்றாயே... நீதான் மற்றவர்களைவிட மாவீரன்’ என வாழ்த்தினார்.

·        மன்னரும் மாவீரருமாகிய நெப்போலியன் ஒரு நாள் தன் அரண்மணையில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காவல் காக்கும் பணியில் இருந்த வீரன் ஒருவன் தூங்கி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டார். காவல் பணியின்போது தூங்குவது மிகப் பெரிய குற்றமாகும். ஆனால், நெப்போலியன் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பவில்லை. அதற்கு மாறாக அவனுடைய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அன்றிரவு முழுவதும் அரண்மனையைக் காவல் காக்கும் பணியில் தானே ஈடுபட்டார்.

·        ஒரு சமயம் நெப்போலியனை மதகுரு ஒருவர் சந்தித்தார்.  ”சாம்ராஜ்ய ஆசை கொண்டு ஊர் ஊராக அலைகிறாயே! நீ இறந்து போன பின்பு உன்னுடைய சாம்ராஜ்யங்கள் உன்னுடையவையாக இருக்கப் போவதில்லையே” என்றார். ”சாம்ராஜ்யம் என்னுடையதாக இருக்காது. ஆனால் சாம்ராஜ்யங்களை எப்படி அமைக்க வேண்டும் என்ற என் எண்ணமும், அதன் காரணமாக எழுந்த வீரமும், அந்த வீரத்தினால் எழுந்த புகழும் இந்த உலகம் உள்ளவரை என்னுடையதாக இருக்கும்” என்று பெருமிதத்துடன் பதில் சொன்னார் நெப்போலியன்.

·        ஒரு முறை மாவீரன் நெப்போலியன் வெளியூரில் இருந்தார். அவர் வறுமையில் வாடி கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு நாள் கடிதம் ஒன்று அவருக்கு வந்தது.

நெப்போலியன் தாய் தானும் அவரின் உடன் பிறந்தவர்களும் வறுமையால் வாடுவதாக எழுதிய கடிதம் அது. அனலிடப்பட்டப் புழுவாகத் துடித்த அவருக்கு, ஆறுதலாக எங்கிருந்தோ அவரைக் காண வந்தான். தெமாஸிஸ் என்ற அவரது நண்பன்.

விஷயம் அறிந்ததும் தெமாஸிஸ் தன்னிடமிருந்த ஆறாயிரம் டாலரைத் தந்தான். அந்த நண்பனைக் கடந்த 15 ஆண்டுகளாகத் தேடித் தேடி அலுத்துப் போனார் ஃப்ரான்ஸ் நாட்டுப் பேரரசனான உயர்ந்த மாவீரன் நெப்போலியன். காலச்சக்கரம் சுழன்றாலும் அதன் உள்ளே நன்றி எனும் ஓர் அச்சாணி நடுநாயகமாக நிலைத்து நின்றது.

ஒரு நாள் தன் நண்பனை கண்டே விட்டார். அப்பொழுது அன்பொழுக அவருக்கு அவர் திருப்பித் தந்தது அறுபதாயிரம் டாலர்.

·        நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார். ஏராளமான நூல்கள் இடம் பெற்றிருந்த அந்த நூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இடம் பெற்றிருந்தது.

அந்த நூல் கம்பராமாயணம்.

பார்வை நூல்

1.  அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவைபிரியா பாலு, வானவில் புத்தகாலயம், தி.நகர், சென்னை – 600 017.

 

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...