உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
மக்களால் மக்களுக்காக நடத்தப்பட்டு வரும்
சுதந்திர ஆட்சியில் கோடி கணக்கானவர்கள் கல்வியில்லாமலும், வேலை வாய்ப்பு இல்லாமலும்,
உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடமில்லாமலும் அவதியுறும் நிலையில் நீடித்திருக்கிறது.
ஆனால் கோயில்கள் பெருகி வருகின்றன. சாமிகளுக்கு
ஆறுகால பூசைகள் தவறுவதில்லை. ஆலயங்களில் பாலாபிசேகம் குறைவில்லை. கோபுரங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
சாமிகளின் வாகனங்கள் தங்கம், வெள்ளியாலும் புதிதுபுதிதாகச் செய்து வைக்கப்படுகின்றன.
வெள்ளையர்கள் ஆட்சியில் 15 ரூபாய்க்கு விற்ற தங்கம் இன்று 55,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து
விட்டது. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஆட்சியாளர்கள் புதுப்பணக்காரர்களாகி
வருகின்றனர். நிலையான நல்ல அரசுக்காக நல்லவர்கள் எல்லாம் ஏங்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் சடங்குகள், திதி, பேய் ஓட்டுவது, பிசாசு
ஓட்டுதல், ராகுகாலம், எமகண்டம், ஜாதகம், தீண்டாமை, என்று மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள மக்களின் நிலை
மாறாமல் ஒரு பக்கம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
இளைய சமுதாயமும் எதைப் பற்றியும் கவலையில்லாமல்
தொலை தொடர்பு சாதனங்கள் தான் உலகம் என்று உடல் உழைப்பு இல்லாமல் மூளை மழுங்கி நாகரிகம்
என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.
'மோட்சம் – நரகம், பாவம் – புண்ணியம், பேய் – பிசரசு, விதி என்று இக்காலத்திலும் நம்பி வரும் மக்களுக்கு மூளையைக் குழப்புவது பயம், தைரியத்தில் பிறப்பது முற்போக்கு, பயம் நம்புகிறது, தைரியம் சந்தேகிக்கிறது? ஊக்கம் முன்னேறிச் செல்கிறது` என்று அமெரிக்க பகுத்தறிவுவாதி இங்கர்சால் கூறியது போல், நாமும் எவர் எதைச் சொன்னாலும் நம்பாமல், சிந்தித்து செயல்பட வேண்டும். சரி என்று தோன்றுவதைத் தைரியமாக செயல்படுத்த வேண்டும். தயக்கம் தான் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. அதைத் தகர்த்து அறிவையும் ஒழுக்கத்தையும் விருத்தி செய்யும் கல்வியின் மூலம் நாம் வாழும் இடத்தைச் சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம். எனவே நம் வாழ்க்கை நம் கையில்!
Comments
Post a Comment