Skip to main content

அம்பேத்கார்

 

அம்பேத்கார்


          19 – ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் அவதரித்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் மராட்டிய மாநிலத்தில் ‘மகா’ என்ற சாதிப் பிரிவில் 1891- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். அவர் பிறந்த சூழலில் இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் ஏகாதிபத்தியக் கொடுமையும், பார்ப்பனியத்தின் கொடுமையும் இந்திய மக்களைச் சொல்லனா துயரத்திற்கு ஆளாக்கியது. இத்துன்பங்கள் எல்லாம் தம் இளம் வயதில் வருந்தச் செய்தது. கல்வி உரிமை மறுக்கப்படுவது, கல்விக் கூடங்களில் சக மாணவர்களுடன் சேர்ந்து அமர அனுமதிக்கப்படாமை, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்த மறுப்பு, உணவு விடுதிகளில் தனிக் குவளை முறை, வாகனங்களில் தனி இருக்கை ஆகிய கொடுமைகளால் அம்பேத்கார் நேரிடையாகப் பாதிக்கப்பட்டார். தான் பாதிக்கப்பட்ட இக்கொடுமைகளைப் போலத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் அதே கொடுமையை அனுபவிப்பது அவருக்குத் துயரத்தைக் கொடுத்தது.

          இத்தகைய சாதிக் கொடுமையிலிருந்து விடுபட வேண்டுமானால் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று கருதினார். அதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களின் அறியாமையைப் போக்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதுடன் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்து சமூகத்தில் மட்டும் இருக்கும் தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் இதர சமுதாயத்தில் இல்லாதது அவரைச் சிந்திக்க வைத்தது. குறிப்பாகப் பௌத்த சமயம் சாதி வேறுபாடு அற்ற சமத்துவத்தைப் போதித்தது அவரது கவனத்தை ஈர்த்தது. அதனால் தான் பௌத்த மதத்திற்கு மாற்றினார். இது ஒரு வகையில் சாதி கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த வழியாகத் தென்பட்டது. 20 – ஆம் நூற்றாண்டின் ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் கூட ஒரு சில இடங்களில் சாதிய போக்கை ஆதரித்துள்ளனர். ஆனால் மராட்டிய அரசாங்கத்தின் மேல்சபை உறுப்பினர் எஸ்.கே.போல் ஒரு உயர்சார் இந்துவாக இருந்தாலும் கூடத் தீண்டாமையையும், தீமையை விளைவிக்கும் மூடப்பழக்க வழக்கங்களையையும் அறவே வெறுப்பவர் ஆவார். இவரது முயற்சியால் 1923 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மும்பை மேல் சபையில் ஒரு தீர்மானத்தைக் கீழ்த்தட்டு மக்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பது தெளிவாக தெரியும். ”அரசாங்க நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், சத்திரங்கள், அலுவலகங்கள், நீதி மன்றங்கள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கும் உரிமை உண்டு. ஆதலால் அங்கெல்லாம் அவர்கள் பேதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும். ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை. அவற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும், குடிப்பதற்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் உரிமை உண்டு என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று அவ்வறிக்கை அமைந்துள்ளது.

முதல் புரட்சி

          அம்பேத்கார் சாதி பிரிவுகளையும் தீண்டாமை கொடுமைகளையும் அகற்றுவதற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பல மாநாடுகளில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறுவதிலும் சாதியத்தின் கொடுமைகளை எடுத்துரைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்து மதம் மட்டுமே தீண்டாமையைக் கட்டிக் காத்து வருகிறது. அந்த மதத்தில் இருப்பதால் எந்தப் பயனையும் அடைய முடியாது. 1935 – ஆம் ஆண்டு ஓர் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்தி அம்மாநாட்டில் ”எந்த மதம் சமத்துவம் அளிக்கிறதோ அந்த மதத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்து கொள்ளலாம்” என்று அறிவித்தார்.

கலப்புத் திருமணம்

          தன் முதல் மனைவி இறந்தவுடன் கவனிப்பற்ற நிலையில் அம்பேத்கார் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுப் பல இரவுகள் கால் வலியால் தூக்கமின்றி அவதிப்பட்டார். அப்போதெல்லாம் அவருக்கு உதவியாக டாக்டர் சாரதா பாடுபட்டார். அப்பெண் திருமணம் ஆகாதவர். தனக்குப் பெண் துணை தேவை என்பதை அறிந்த அம்பேத்கார் தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று சாரதாவைக் கேட்டார். அவரும் சம்மதிக்கவே இருவரும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். பிராமணப் பெண்ணான சாரதா அம்பேத்காரின் அறிவையும், தொண்டு மனபான்மையையும் விரும்பியதால் அம்பேத்காரை மணந்து கொண்டார். இவ்வாறு சாதியத்திற்கு எதிரான தாக்குதலை அம்பேத்கார் பல்வேறு நடைமுறைகளிலும் செய்து காட்டினார்.

          இத்தகு சமூகப் புரட்சியாளரான அம்பேத்கார் 1956 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

பார்வை நூல்

1.  முனைவர் ஆ.ஜெகதீசன் – இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள், அமர்நாத் பதிப்பகம், தஞ்சாவூர் மாவட்டம் -613 204,  முதற்பதிப்பு –செப்டம்பர், 2008.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...