புத்தர்
இமயமலை
அடிவாரத்தில் ‘கபில வஸ்து’ என்னுமிடத்தில் கி.மு. 563- இல் சித்தார்த்தன் (புத்தர்) பிறந்தார். புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி
வளர்த்தனர். துன்பம் என்றால்
என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர். ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு, பிணி, சாக்காட்டைப்
பார்த்தார். அதனால் உலக
வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். பீகார் மாநிலம்
கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும்
காரணம் என்பதைக் கண்டறிந்தார். போதி மரத்தடியில்
ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். நல்லவர் – தீயவர், ஏழை – பணக்காரன் களைந்து
அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார்.
பகுத்தறிவு சிந்தனைகள்
·
சாத்திரங்களை
நம்பாதீர்கள்.
·
நடைமுறை என்பதற்காக
மூடபழக்கங்களைப் பின்பற்றாதீர்கள்.
·
சிறுவயதில்
உங்களுக்கு உபதேசிக்கப்பட்டதைப் பகுத்தறிந்து பாருங்கள்.
·
விசாலப்படுத்தி
எதனையும் ஆராய்ந்து பாருங்கள்.
·
முதியோருக்கு
உதவுங்கள்.
·
பணத்தையோ, புகழையோ விரும்பாதீர்கள்
என்று மக்களுக்கு உபதேசம் செய்தார்.
உயிர்களிடத்தில் பரிவு காட்டுதல்
புத்தர் அழகிய சோலையில் உலாவிக் கொண்டிருந்த
போது அவரது தோழன் தேவதத்தன் அச்சோலைக்கு வந்தான். அவன் வில் எய்துவதில் வல்லவன். வானில்
பறந்த பறவை மீது அம்பு எய்தான். ஓர் அன்னப் பறவை மீது அம்பு தைக்கப்பட்டுக் கீழே விழுந்தது.
அதனைக் கண்டு கலங்கிய புத்தர் அந்த அன்னப் பறவையை எடுத்து அம்பினை நீக்கி மருந்திட்டுக்
குணப்படுத்தினார். இச்செயல் எல்லா உயிர்கள் மீதும் பரிவு காட்ட வேண்டுமென்ற கருத்தை
வலியுறுத்தியது. இச்செயலை வலியுறுத்தும் விதமாக புத்தர் ஞானம் பெற்றபின் ‘உயிர்க் கருணை
உடையவர் இன்புற்று வாழ்வர்’ என்று உபதேசித்தார்.
மகத நாட்டு அரசன் பிம்பிசாரன் வேள்வி செய்ய
எத்தனித்தான். அதற்காக பெரும் எண்ணிக்கையிலான ஆட்டு மந்தைகளை வேள்வித் தீயிலிட நினைத்தான்.
அதனை அறிந்த புத்தர் பிம்பிசாரனுக்கு அறிவு புகட்டி அந்த ஆடுகளைக் காப்பாற்றினார்.
மகத நாட்டு இராஜ கிருகத்தில் புத்தர் தங்கியிருந்த
பொழுது அந்தணச் சிறுவனொருவன் தமது சாதிப் பெருமையை உயர்வாகப் பேசினான். அதனைக் கண்ணுற்ற
புத்தர் அச்சிறுவனின் செயலைக் கண்டித்துப் பேதைமையைப் போக்கும் வண்ணம் ‘பிறப்பினால்
யாதொரு நன்மையும் விளையாது ஓழுக்கம் ஒன்றே உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்’ என்று
விளக்கினார். மேலும் தாயைக் கொண்டோ, குல மூலத்தைக்
கொண்டோ ஒருவனைப் பிராமணன் என்று கூறமாட்டேன். அவன் செல்வந்தனாயிருந்தால் அகம்பாவியாவான்.
எவன் எல்லா விதமான ஆசைகளிலிருந்தும் விடுபெற்ற ஏழையோ அவனையே பிராமணன் என்பேன் என்று
கூறினார். ஒருவன் பிராமணன் ஆவது தன் சடைத் தலையால் அல்ல. தன் குலம் கோத்திரத்தால் அல்ல.
பிறப்பினாலும் அல்ல. எவனிடம் உண்மையும் அறமும் நிலைத்திருக்கிறதோ அவனே பிராமணன் என்று
தம்ம பதத்தில் கூறுகிறார்.
ஒருவரின் அறியாமையே ஆசை, சினம், துன்பத்திற்குக்
காரணம் என்று கூறுகிறார். இத்துன்பத்தை ஒழிப்பதற்கான நெறிகளாக,
·
நற்சாட்சி
·
நல்லூற்றம்
·
நல்வாய்மை
·
நற்செயல்
·
நல்வாழ்க்கை
·
நன்முயற்சி
·
நற்கடைப்பிடி
·
நல்ல நட்பு
மக்களுக்காகவே வாழ்ந்து மக்கள் துன்பத்தைப் போக்க முயன்றவர் புத்தர். அவர் தம்
என்பதாம் வயதில் குசி நகரில் முக்தியடைந்தார். இவர் போதித்த போதித்த அன்பு, அகிம்சை
இன்று உலகின் பல நாடுகளில் போற்றப்படுகின்றது.
பார்வை நூல்
1.
முனைவர் ஆ.ஜெகதீசன் – இலக்கியத்தில்
மனித உரிமைக் கோட்பாடுகள், அமர்நாத் பதிப்பகம், தஞ்சாவூர் மாவட்டம் -613 204, முதற்பதிப்பு –செப்டம்பர், 2008.
Comments
Post a Comment