சூதாட்டம்
வாழ்க்கை முழுவதும் நம்மிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதுவா? இதுவா? வாழ்க்கையை
உன்னிப்பாக ஆய்ந்தால், இஃது உங்களுக்கு விளங்கும்!
·
துன்பப்பட்டுப்
படிக்க வேண்டும் என்பது இல்லைதான்! ஆனால், வாழ்வில் முன்னேற முடியாது. அதுவா? இதுவா?
நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
·
உறவு என்று
பார்ப்பதா! கடமை என்று பார்ப்பதா! அதுவா? இதுவா? உறவைப் பெரிதாக நினைத்தால், கடமை தவறியதாக
ஆகும். கடமையைப் பெரியதாக மதித்தால் உறவு படுதாகும். நடக்கிறதா? இல்லையா?
இப்படி எதை எடுத்தாலும் இதுவா? அதுவா? கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில்
தான் மனிதன் இழுபடுகிறான். இதில்தான் சின்னா பின்னப்படுத்தப் படுகிறான்.
இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான் சூதாட்டம் (Gambling).
சூது +ஆட்டம் = சூதாட்டம்
சூது – எச்சரிக்கை, கவனம்
சூதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய ஆட்டம் சூதாட்டம். அதாவது
வெளிப்படையாகத் தெரியாத ஒன்று பற்றி, ஊகித்து, எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளிலும் கவனம் தேவைதான்! ஆனால் இவற்றில் கண்ணுக்குத்
தெரியாத சூது எதுவும் இராது. வெளிப்படையாகத் தெரிகிற நுணுக்கமே இருக்கும். அதனால்,
இவை சூதாட்டம் ஆவதில்லை.
சூதாட்டத்தின் ஆரம்ப நிலம் தமிழ் நிலம் தான்! த்த்துவங்களில் சிறந்த நிலமே,
சூதிலும் சிறக்க முடியும். இதுவா அதுவாப் போராட்டத்தை உணர்ந்தவர்களே சூதாட்டத்தை அமைத்திருக்க
முடியும். தமிழக அகழ்வாய்வுகளில் சூதாடுகருவிகள், தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன என்பதே
இதற்குச் சான்றாகும்.
நால்வகைப் படைகளை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டே சதுரங்கம் (Chess). இதிலும்
சூது உண்டு. நேரடியாக ஒரு காய் நகர்த்தப்படும். ஆனால் அதன் உள் நோக்கம் வேறாக இருக்கும்.
இதுவே சூது. இன்றும் தமிழகக் கிராமங்களில் தாயம் போன்ற சூதாட்டங்கள் நீக்கமற நடந்து
கொண்டிருக்கிறது.
மகாபாரதக் காலத்தில் தமிழகத்தில் சூதாட்டம் பெருகியிருந்தது.
‘சூதானமாகப் போய் வா’ என்ற தமிழ் சொல்லிற்கு ‘பார்த்துப் போய் வா’ என்பதே பொருள்.
சில மலையடிவாரங்களில் பார்த்தால், தாயக்கட்டம் உளியால் செதுக்கப்பட்டிருக்கும்.
பாறைகளிலும், மணலிலும் கீறி விளையாடப்பட்ட விளையாட்டு பின் தாள் வரவே தாளில் வரையப்பட்டு
விளையாடினர்.
முதலில் கூறியது போல, அதுவா? இதுவா? என்ற வினா, சூது விளையாட்டில் ஒவ்வொரு மணித்துளியிலும்
கேட்கப்படும். அதற்கு விளையாடுபவர் விடை தந்து கொண்டே இருக்க வேண்டும். அதில்தான் இன்பநடுக்கம்
(Thrill) உள்ளது.
இந்த இன்ப நடுக்கத்தினை அடைவதற்காக மட்டும் பழந்தமிழர்கள் சூதாடவில்லை. முன்னர்
கண்ட தத்துவ நுட்பத்திற்காகவும் தான்.
பார்வை நூல்
1.
முனைவர் சு.
சௌந்தரபாண்டியன், மறைந்து போன தமிழர் பண்பாடுகள், மாரிமுத்து பதிப்பகம், சாலி கிராமம்,
சென்னை – 600 093.
Comments
Post a Comment