சந்திரசேகரமூர்த்தி
தக்கனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றும்
தேய்ந்து வந்தன. ஒளியும் சிறப்பும் இழந்து வருந்தி நின்றான். சிவபெருமானிடம் சென்று
தன்னைக் காத்தருள வேண்டினான். அடைக்கலம் வேண்டிவந்த சந்திரன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான்.
தன் காலில் வீழ்ந்த வணங்கிய சந்திரனை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டார். மேலும்
தன்னை வணங்குகின்றவர்கள் எல்லாம் சந்திரனையும் வணங்கும்படி செய்துவிட்டார். இத்திருக்
கோலமே ‘சந்திரசேகரமூர்த்தி’ ஆகும். இதனை,
”குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குளிர்த்தான்
வினை
பறைவதாக்கும்
பரமன் பகவன் பரந்தாடை
இறைவன்
எங்கள் பெருமான் இடம்போல் இடும்பை தனுள்
மறைகள்
வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே”
(திருஞானசம்பந்தர்)
தவறு செய்தவர்கள் மனம் திருந்தி சிவபெருமான்
வழிபட்டால், அவர்கள் மீது இரக்கம் கொண்டு காப்பாற்றி அருளுவதோடு, அவர்களைச் சிறப்படையவும்
செய்தார்.
‘புனல்கூனல் பிறை அணிந்தான்’ (திருக்கோய்எழுபது,43)
‘தீர்தன அன்றியே திங்கள் தண்ணிடை
வார்த்திடும் சடைமிசை வயங்கச் சேர்த்தினான்
சார்ந்தில் தவவழித் தக்கன் சாபமே” (கந்தபுராணம்)
இந்த எடுத்துக்காட்டுகளில்
இருந்து இலக்கியங்களில் சிவபெருமான் சந்திரசேகரமூர்த்தியாக விளங்கியமை அறியலாம். இதனை,
”தூமதி சடைமிசை சூடுதல் தூநெறி
யாம் மதியான் எனஅமைந்த ஆறே”
என்று கூறி
பட்டினத்தடிகள் இது தான் உண்மை என்று விளக்குகிறார்.
பார்வை
நூல்
1. சங்க கால இறைநெறியும் வாழ்வியல் நெறியும் – புலவர்
சக்தி தரும நடராசன், சரஸ்வதி பதிப்பகம், வேலூர் முதன்மைச்சாலை, ஆர்க்காடு – 632
503, முதற் பதிப்பு, 2017.
Comments
Post a Comment