வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
பிளாட்டோ
ஒரு சமயம் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர்
ஒருவர் வந்தார். ‘என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும். அதற்கு எவ்வளவு பணம்
கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். ”ஐந்நூறு பவுண்டுகள்” என்றார் பிளாட்டோ. ”என் மகனுக்கு
கல்வி கற்றுத் தர ஐந்நூறு பவுண்டுகளா? இந்த விலையில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி
விடலாமே” என்று கேட்டார்.
”நீங்கள் சொல்வதும் சரிதான். இந்தத் தொகைக்கு
ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி ஓர் அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கிக்
கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்களே?”
என்று பதில் அளித்தார். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை.
Comments
Post a Comment