தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள் வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...
ஹிட்லர்
ஹிட்லர் ஒரு சமயம் பைத்தியக்கார மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார். ஹிட்லர்
வரும் சமயம் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தும்படி பைத்தியக்காரர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல ஹிட்லர் வந்ததும் பைத்தியகாரர்கள் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தினார்கள். அதில் ஒரு ஆள்
மட்டும் கத்தாமல் இருந்தார். ஹிட்லர் அவரிடம் சென்று ‘நீ ஏன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று
கத்தவில்லை என்று கோபமாகக் கேட்டார். அதற்கு வெகு அமைதியாக ‘நான் பைத்தியம் அல்ல’ டாக்டர்
என்று பதிலளித்தார் அவர்.
Comments
Post a Comment