திருமணம் பற்றிய பெரியாரின் கொள்கைகளாக!
வியாபாரம் நடத்துவது போன்றுதான் வாழ்க்கையும்
என்கிறார் பெரியார். மேலை நாடுகளில் திருமணம் என்ற ஓர் அமைப்பு முறை ஒரு சில நாடுகளில்
இருப்பினும், பிரிந்து போகும் நிலை மிகவும் எளிதாகவே அந்த நாடுகளில் உள்ளன. கல்லானாலும்
கணவன், புல்லானாலும் புருஷன் என்ற வைதிக மூடநம்பிக்கை அங்கு இல்லை. மனம் ஒத்த உண்மைக்
காதல்தான் அவர்கள் கையாண்டு வருகிறார்கள். விருப்பமில்லாது வாழ்க்கை நடத்துவதை மானக்
குறைவாக அங்கு ஆண்களும் பெண்களும் கருதுகின்றார்கள். அங்குப் பெண் அடிமை இல்லை. ஆண்
ஆதிக்கம் இல்லை.
ஒத்த காதல் – ஒத்த இன்பம் – உடல் நலம் அங்குப்
பிரதானம். அதனால் விபச்சாரம் என்பதற்கு அங்கு இடம் இல்லை.
திருமணம் பற்றி
பெரியார் கூறும் கருத்துக்கள்
திருமணம் காட்டுமிராண்டிக் காலத்தில், அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும்.
அதை இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும். ஒரு ஆணுக்குப் பெண்ணை அடிமைப்படுத்தவே
திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறோமோ அதைப் போலவே
பெண்ணைப் பலி கொடுக்கும் விழாதான் திருமணம்.
உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால், உலகம்
தொல்லைகளிலிருந்து சுபிட்சம் அடைய வேண்டுமானால் திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்க
வேண்டும் என்கிறார் பெரியார். அதனால் இந்நாட்டுப் பெற்றோர்களுக்கு இவ்வாறு கூறுகிறார்.
‘பெற்றோர்கள் பெண்களை 21 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்; பிறகு ஒரு
தொழில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் பிறகு வாழ்க்கைத் துணையைப் பற்றி நினைக்க வேண்டும்.
அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள்
குறிக்கிடக் கூடாது என்று அறிவுரை புகன்றார் பெரியார்.
மகளிர்க்கு
எதிரி மகளிரே!
சுதந்திரத்தின் சிறப்பைப் பற்றி வாய்க்கிளிய
பேசுபவர்கள் கற்பு – விபச்சாரம் என்ற இரண்டு வார்த்தைகள் இந்த நாட்டில் இருக்கலாமா
என்று எங்கே யோசிக்கிறார்கள். ஒழுக்கமும், கட்டுப்பாடுகளும் ஒரு சாராருக்கு மட்டும்
தான் என்றால் அப்படிப்பட்டச் சமுதாயத்தை மனித சமுதாயம் என்பதா? மிருக சமுதாயம் என்பதா?
கணவன் இறந்து விட்டால் மனைவியும் உடன் கட்டை
ஏறும் கொடுமையை யார் ஒழித்தது? எந்தப் பதவியும் இல்லாத ஒரு சாதாரண மனிதாபிமான இராஜராம்
மோகன்ராய் அவர்களால் எவ்வளவு பெரிய சீர்திருத்தத்தை அன்று செய்ய முடிந்தது. இன்று எத்தனை
தலைவர்கள், எத்தனைக் கட்சிகள், பெற்று வளர்த்து சீரும் சிறப்புமாக ‘கன்னியாதானம்’ செய்யும்
திருமணங்கள் இன்னும் நடப்பது எவ்வளவு கேவலம்.
மேல் நாடுகளில் பெண்களுக்கு ஆண்கள் எவ்வளவு
மதிப்பு கொடுக்கிறார்கள். அதனால்தான் அவர்களை நாகரிகச் சமுதாயமாக உலகம் ஏற்கிறது.
தந்தை பெரியார் ஒருவர் மட்டும் நம் நாட்டில்
பிறந்திருக்காவிட்டால்? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. பெண் அடிமை படிப்படியாகத்
தீர்ந்திருக்குமா? காதல் மணம் பெருகி இருக்குமா? கலப்பு மணம் பெருகி இருக்குமா? விதவை
மணம் அனுமதிக்கப் பட்டிருக்குமா? சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்ற சட்டத்தை
அறிஞர் அண்ணாவின் அரசு முடித்திருக்குமா?
இறுதியாக,
அப்துல்ரகுமானின்,
”காதல் கூட
நாம் உனக்கு
விரிக்கும் வலைதான்
தாலி கூட
நாம் உனக்குப்
பூட்டும் விலங்குதான்
அம்மா சகோதரி காதலி
மனைவி மகள்
வைப்பாட்டி
தோழி என்று
எங்கள் விளையாட்டிற்கான
பொம்மையாகவே
உன்னை ஆக்கினோம்”
இவ்வரிகள் பெண்ணினம்
அடிமைப்பட்டதைக் கண்ணீரோடு வெளிப்படுத்துகின்றது. சமுதாயத்தின் மூடத்தனத்தை மறைமுகமாகவும்
சாடமுடியும் என்பதற்கு இக்கவிதை சான்றாகும்.
”ஆண்கள் தங்களுடைய கற்பைக் காப்பாற்றிக்
கொள்ளாதவரை
பெண்கள் தங்களுடைய கற்பை
எப்படிக்காப்பாற்றிக்
கொள்ள முடியும்? (நாவல் வளர்ச்சி, ப.110)
என்பது போன்று
கற்பென்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றும் பாரதியின் கூற்றிற்கு
இணங்க இனியாவது நடந்தால் நன்மையே!
பார்வை
நூல்
1. வேணு ஏ.எஸ், - பெரியார் ஒரு
சரித்திரம், பூம்புகார் பிரசுரம்,மேகலை
எண்டர்பிரைசஸ், சென்னை -5, முதற்பதிப்பு
– 1980.
2. ஜெகதீசன்.முனைவர்.ஆ, - இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்,
அமர்நாத் பதிப்பகம், திருவையாறு-613 204.
Comments
Post a Comment