திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் (Blog) 21 – ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பது இணையமாகும் . தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி , இனம் பாராமல் மக்களுக்குச் செய்து வருகின்றது . இது விஞ்ஞானம் , அறிவியல் , கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்கு மட்டும் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றி வருகின்றது . நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது . இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் தமிழ்மொழிக்கு வலைப்பூக்கள் என்ற புதிய இலக்கிய வகை தோன்றிப் பெரும் பங்காற்றி வருகிறது . வலைப்பூ – வலைப்பதிவு ” ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும் . இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும் . இது தவிர்க்க முடியாதது ” என்று டாக்டர் வா . செ . குழந்தைசாமி அவர்களின் கூற்றின்ப...