இனிய புத்தாண்டு வாழ்த்துகளாக...
அனைத்துத் தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம்.
நண்பர்கள்
இல்லாதவர்கள் நரம்பற்ற வீணைக்கு ஒப்பானவர்கள். ராகங்கள் பல என்றாலும், இசை அனைவருக்கும்
பிடித்தமானது. சுயநலமற்ற அன்பில்தான் நட்பு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். அன்பின் ஆதிக்கத்தில்
தன்னலம் தகர்ந்து போகும். இந்த தன்னலமற்ற அன்பு, நட்பு தான் உலகில் உள்ள அனைத்துத்
தமிழ் சொந்தங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்.
அதுபோல தான் நம் அனைவரையும் இந்த வலைதளம் இணைத்துள்ளது. எனது வலைதளத்தை இடையறாது பார்த்து
ரசித்து, ஆதரவளித்த அனைத்துத் தமிழ் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில தின புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!
”உயர உயரப் பறக்கவேண்டும் என்ற பறவைகளின் உந்துதல் வேண்டும்
உறங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடையின் உற்சாகம் வேண்டும்
உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளரும் மரத்தின் மனோபாவம்
வேண்டும்
முண்டி மோதி முதலில் நிற்கும் முயற்சி வேண்டும்”
மீண்டும் அனைத்துத் தமிழ் சொந்தகளுக்கும் இனிய ஆங்கில தின புத்தாண்டு வாழ்த்துகள்!!!
Comments
Post a Comment