எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாதவர். பல முறை
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர் கவனம் முழுவதும் கண்டுபிடிக்க வேண்டிய
பொருளின் மீதே இருந்தது. ஒரு நாள் நண்பர் ஒருவர், ”எடிசன் உங்களுக்கு காது கேட்கவில்லை.
இந்தக் குறைபாடு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது? என்றார். அதற்கு அவர், ”எனக்கு காது
கேட்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்குப் பல வகையில் உதவியாக உள்ளது.
நான் ஆராய்ச்சியின் மீதே என் மனதைச் செலுத்தும் போது யார் கூப்பிட்டாலும் எனக்குக்
காது கேட்காது. என் எண்ணம் சிதறாமல் இருக்க அது உதவுகிறது” என்றார்.
பார்வை நூல்
1.
ப்ரியா பாலு
– அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை, வானவில் புத்தகாலயம், சென்னை – 600 017.
Comments
Post a Comment