வெப்பத்தின் நன்மைகளாக...
நம் உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமானால்
வெப்பமும், நீரும் அவசியம் தேவை. இவை நம் உடம்பில் இல்லையென்றால் உயிர் தங்காது. உடம்பு
பிணமாகி விடும்.
வெப்பம்
நம் உடம்பில் வெப்பம் என்று குறிப்பிடுவது
சூடாகும். சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்து விடும். பனிமலைகளில் ஆடையோ தகுந்த
பாதுகாப்போ இல்லாமல் போனால், இரத்தம் உறைந்து இறக்க நேரிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு,
உடலெங்கும் பரவியிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல் நம் உடம்பின் அழுக்குகளை
நீக்கவும், அழிக்கவும் சூடு தேவைப்படுகிறது.
வெப்பம் நம் உடம்பிலுள்ள நச்சுப் பொருள்களை
எரிக்கும்போது ஏற்படுகின்ற வெப்பத்தையே காய்ச்சல் (Fever) என்று கூறுகிறோம். உடம்பில்
நச்சுப்பொருள்கள் அதிகமாக இருந்தால் காய்ச்சல் அதிகமாக இருக்கும். காய்ச்சல் வருவது
உடல் நலத்துக்காகவே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றாகக் காய்ச்சல் வந்தால் நம்
உடம்பில் உள்ள நச்சுப் பொருள்கள் முற்றிலும் அழிந்து விடும். எனவே உடலின் சூடு அதிகமாகவும்,
குறைந்து போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தக் கொதிப்பு அதிகமானால் இறக்க நேரிடும்.
வெயிலில் செல்லும் போது கறுப்பு நிறத்தில் குடை, ஆடை போன்றவற்றை அணியக் கூடாது. கறுப்பு நிறம் வெயிலின் வெப்பத்தை இழுத்து உடம்பில் செலுத்தும் தன்மை கொண்டது. வெண்மை வெப்பத்தைத் தடுக்கும் என்பதால் கோடை காலத்தில் வெண்ணிற ஆடைகளை அணிந்தால் வெப்பத்தின் பாதிப்பிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மனித உடம்பின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றவாறு,
பருத்தி, கம்பளி, தோலாடை போன்றவற்றை அணிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பார்வை நூல்
1.
வாசுதேவன்.
இர, - உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம், New Horizon media Pvt.Ltd.,
Alwarpet, Chennai – 600 018, june, 2008.
Comments
Post a Comment