Skip to main content

கல்கத்தா பயணம் சென்ற அனுபவங்கள்

 

கல்கத்தா

என்னுடைய பயண அனுபவமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்நிகழ்வு வருங்காலத்தில் எனக்குக் கையேடாகவும் பயன்படுத்திக் கொள்வேன்.

            கல்கத்தா என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும்(1911- ஆம் ஆண்டு வரை), தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் மூன்றாவது மக்கள் தொகை கொண்ட நகரமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்நகர் உலக பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும். அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கல்கத்தா 1954 – ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெற்ற அரசியல் வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவு அடைந்தது. 2000 – ஆம் ஆண்டுக்குப் பின் சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. என்றாலும் பிற இந்திய நகரங்களை ஒப்பிடும் பொழுது வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளில் பின்தங்கிய உள்ளது.

சனவரி 4, 2025

நானும் என் சகோதரனும் அமெரிக்கா செல்வதற்காக அயல்நாட்டு நுழைவுச் சான்று (VISA) எடுக்க கல்கத்தாவிற்கு சனவரி 4, 2025 அன்று வான்வழி பயணமாக விமானம் மூலம் சென்றிருந்தோம். Indica விமானத்தில் திருச்சியில் பிற்பகல் 12.40 புறப்பட்டு 1.40 மதியம் சென்னை சென்றடைந்ததுசென்னையில் மதியம் 3.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.15 மணிக்குக்  கல்கத்தாவிற்குச் சென்றோம். Casa Fortuna என்ற நட்சத்திர விடுதியில் தங்கினோம்.

Casa Fortuna அந்த நட்சத்திர விடுதியில் தங்கியது புதிய அனுபவமாக அமைந்து இருந்தது. இரவு உணவு அங்கு சாப்பிட்டோம். மிகவும் நன்றாக இருந்தது.

விக்டோரியா நினைவிடம்

       விக்டோரியா நினைவிடத்தை சனவரி 5-ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்று பார்வையிட்டோம். நினைவிடத்தின் உள்ளே செல்லவில்லை. வெளியே உள்ள பூங்காவிற்கு மட்டும் சென்று திரும்பினோம்.

          VISA Bia Matrix interview க்கு Kolkata VAC, 57B, Pataka House (4th floor), Mirza Ghalib st, Taltala என்ற இடத்திற்குச் சென்றோம். மதியம் 1.00 மணிக்குப் போனேன். 1.15 மணிக்கு முடிந்துவிட்டது.

            இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் நினைவிடம் ஆகும். இவர் இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் ஆவர். இது தற்பொது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது. இந்த நினைவிட மண்டபத்தின் கட்டுமானத்திற்கு வெள்ளை மாகரானா பளிங்குகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்தக் கட்ட்டமானது 1921 – ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.

விக்டோரியா மகாராணி

     பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 – ஆம் ஆண்டு சூன் முதல் 1876 – ஆம் ஆண்டு மே 1 வரை ஆட்சியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள், 7 மாதங்கள். இவரது ஆட்சிக் காலப் பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது. இவர் 81 வயதில் சனவரி 22, 1901- ஆம் ஆண்டு அன்று ஓஸ்பர்ன் இல்லத்தில் இறந்து பிப்ரவரி, 4 அன்று அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

 விக்டோரியா நினைவிடம்


கல்கத்தா - அறிவியல் பூங்கா

          இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள அறிவியல் மையம் இந்திய துணை கண்டத்தின் மிகப் பெரிய அறிவியல் மையமாக உள்ளது. இந்த மையம் இரண்டு பகுதிகளாகத் திறக்கப்பட்டது. 1. மாநாட்டு மைய வளாகம் டிசம்பர் 1996 – ஆம் ஆண்டு, மற்றும் மீதமுள்ளவை சூலை 1, 1997 அன்று அப்போதைய பிரதமர் இந்தர குமார் குஜ்ரால், 10 சனவரி 2010 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவியல் நகரத்தின் இரண்டாம் கட்டத்தை முடிக்க முயற்சித்தார். டைனமோஷன் ஹால், பூமி ஆய்வு கூடம், விண்வெளி ஒடிஸி, கடல் சார் மையம் ஆகியவை கொண்ட இடமாக உள்ளது. நாங்கள் ROPE CAR மூலம் சென்றோம். பின் அனைத்து இடங்களையும் மேலோட்டாகவே பார்வை யிட முடிந்தது. ஒரு நாளில் மூன்று இடங்களைப் பார்த்ததால் மேலோட்டாக பார்வையிட்டு வந்து விட்டோம்.


 


ஹவுரா பாலம்

          இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹிக்ளி ஆற்றின் மீது ஒரு சீரான எஃகு பாலம் ஆகும். 1943 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பாலம் முதலில் புதிய ஹவுரா பாலம் என்று பெயரிடப்பட்டது. ஏனெனில் இது ஒரே இடத்தில் உள்ள ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் காண்டூன் பாலத்தை மாற்றியது. 14 சூன் 1965 ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் ஆசிய நோபல் பரிசு பெற்ற வங்காள கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் நினைவாக ரவீந்திர சேது என்று மறுபெயரிடப்பட்டது. ஆனால் இன்றும் பிரபலமாக ஹவுரா பாலம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் நீளமான ஆறாவது பாலம் ஆகும்.

 

ஹவுரா பாலம்



கல்கத்தா காளிக் கோவில்

         இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹீக்ளி நதியின் பழைய தடம். இக்கோயில் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர்.

            இக்கோவிலையும் ஞாயிறு சனவரி 5 ந் தேதியன்று மாலை 5.30 மணிக்கு சென்று தரிசனம் செய்தோம். அதிகமான கும்பல் இருந்தாலும் நாங்கள் பார்த்து விட்டு வந்தோம்.

சனவரி – 6, 2025

            காலை 8 மணிக்கு VISA Interview க்கு 5/1, HO Chi Minh Sarani, kalkata என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு வரிசையில் இருக்கும் போது எனக்கு சிறு தயக்கம் இருந்தது. ஆகையால் அங்கிருந்தவரிடம் எனக்கு Translater வேண்டும் என்று கூறினேன். எனக்கு மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் திரும்ப பதில் சொல்வது கடினம். எனவே உதவி கேட்டேன். பிறகு அங்கிருந்தவர் VISA Interview க்கு வந்தவர் காரைக்குடி சேர்ந்தவர் எனக்கு உதவுகிறேன்  என்று முன்வந்தார். பின் இனிதே 8.45 மணியளவில் சிறப்பாக முடிந்து மதியம் கல்கத்தா to சென்னை, இரவு 8.50 மணிக்கு சென்னை to திருச்சிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தோம்.

            இந்த அனுபவம் மிகவும்  சிறப்பாக அமைந்தது. கல்கத்தாவில் காலை முதல் அனைவரும் சுறுசுறுப்பாக அவரவர் வேலைகளை செய்கின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். சாலை விதிமுறைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. யாரிடம் கேட்டாலும் உதவி செய்தார்கள். மிகவும் மன திருப்தியாக அமைந்தது.


Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...