பொங்கல்
தின வாழ்த்துகள்!
தமிழர்கள் அனைவராலும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா பொங்கல் விழா. இவ்விழாவை
மக்கள் சூரியனுக்கும், மழைக்கும், மாடுகளுக்கும் நன்றி சொல்லும் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
· மார்கழித் திங்களின்
இறுதி நாளை போகி விழாவாகக் கொண்டாடுகின்றனர். பழைய பொருட்களை போக்கி புதிய பொருட்களால்
வீட்டை அலங்காரம் செய்வர்.
·
தைத்திங்கள்
முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இதனைத் தமிழர் திருநாள் என்றும் உழவர் திருநாள்
என்றும் அழைக்கப்படுகிறது. அன்று வேளாண்மைப் பெருக்கத்திற்கு காரணமான ஞாயிற்றை வணங்குகின்றனர்.
புதுப்பானையில் பொங்கல் இட்டுப் பொங்கலோ பொங்கல் என்று முழங்குவர். கதிரவனுக்கப் பொங்கலைப்
படைத்து உண்டு மகிழ்வர்.
· தைத்திங்கள்
இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு
வண்ணம் தீட்டி, குங்குமம் இட்டு மாலைச் சூட்டி சோறு படைப்பர். அன்று வீர விளையாட்டான
சல்லிக்கட்டு ஒரு சில இடங்களில் நடைபெறுவது உண்டு. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர்
திருநாளாகக் கொண்டாடி வருகிறது.
· மாட்டுப் பொங்கலுக்கு
மறுநாள் காணும் பொங்கல் என்று அழைக்கின்றனர். அன்று பெரியவர்களை கண்டு வாழ்த்து
பெறுவர். இதனை காணும் பொங்கல் என்றும் கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு
மிக்கப் பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். அனைத்துத் தமிழ் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும்
பொங்கல் தின வாழ்த்துகள்.
Comments
Post a Comment