மானமுள்ள
வாழ்வு
எவ்வளவு துன்பம் வந்தாலும் மானங்கெடாமல் வாழ வேண்டும். பசிப்பிணியால் சாவதாகயிருந்தாலும்
தன்னை இழிவாக மதிப்பவர்களின் இல்லத்திலே உணவருந்தக் கூடாது. இதுவே தமிழர்களின் சிறந்த
பண்பாடு. இந்த பண்பாட்டை நாலடியார் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
”தன் உடம்பின்
ஊண் கெடிதும் உண்ணார்கைத்து உண்ணற்க”
தன் உடம்பின்
உள்ள சதை வற்றிப் போனாலும், உடம்பின் எலும்புத் தோலுமாக இளைத்துப் போனாலும், உண்ணத்தகாத
பகைவர் கையிலிருந்து உணவு பெற்று உண்ணக் கூடாது.
”பொற்கலத்துப் பெய்த புலி உயிர்
வான்புழுக்கல்
அக்காரம், பாலோடு, அமரார் கைத்து உண்டலின்
உப்புஇலிபுற்கை, உயிர்போல் கினைஞர்மாட்டு,
எக்காலத்தானும் இனிது.
பொன் பண்டத்திலே
புலிநகம் போன்ற வெண்மையான சோறு, சர்க்கரை, பால் இவைகளைத் தம்மை மதியாதாரிடம் பெற்று
உண்பதால் இன்பம் இல்லை. இதைவிட உயிர்போன்ற உறவு பூண்டவரிடம், உப்பில்லாத கூழை மண்பாண்டத்திலே
பெற்று உண்டாலும் இனிமையுண்டு.
”நாள்வாய்ப் பெறினும் கள்ளாதார்
இல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்
நாள்தோறும்
குறித்த நேரத்திலே கிடைப்பதாயினும் தன்னை விரும்பாதார் இல்லத்திலே அவர்கள் உதவும் பொரிக்கறியோடு
கூடிய சோறு இனிமை தராது. உண்டால் வேம்பு போலவே கசக்கும்.
இவைகள் விரும்பாதார் – மதியாதார் – பகைவர்
இல்லத்தில் உணவு உண்பது தீமை என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வாறு செய்வது மனித்த்
தன்மையற்ற செயல். மானம் கெட்ட நடத்தை என்பதையும் உணர்த்தின.
பார்வை நூல்
1.
சிதம்பரனார்.
தமிழறிஞர் சாமி, - பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும், சிவகாமி சிதம்பரனார், இலக்கிய
வளம், சென்னை – 600 094.
Comments
Post a Comment