சிந்திக்காததால் கேடு
‘நாத்திகன்’ என்றால் ஞானி. அறிவாளி என்றுதான்
பெயர். கடவுள் இல்லை என்பவர் என்பது பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல
– ஞானம் உடையவன்; அறிவு உடையவன் என்பது பொருள். எவன் ஒருவன் அறிவை உபயோகப் படுத்துகிறானோ
– எவன் ஒருவன் அறிவு கொண்டு எதையும் விவகாரம் பண்ணுகிறானோ அவன் நாத்திகன் என்று கூறப்படுகிறான்.
‘ஆத்திகன்’ என்றால் அறிவில் நம்பிக்கை வைக்காமல்
– சாஸ்திரம், புராணங்கள் முதலியவைகளை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவன் என்று
பொருள்.
தோழர்களே! இராமாயணத்திலேயே ஓர் இடத்தில்
நாத்திகனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கின்றானோ
அவன் நாத்திகன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவில் நம்பிக்கை வைத்து நடக்க
வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டே இருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்தத்
துறையில் இறங்கிப் பாடுபட முன்வருவதில்லை.
2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றிப்
பாடுபட்டார். ‘உன் அறிவு என்ன சொன்னதோ அதன்படி நட; முன்னோர்கள் – பெரியவர்கள் சொன்னார்கள்,
வெகு காலத்துக்கு முன் சொல்லப்பட்ட கருத்தாயிற்றே என்று நம்பாதே! மோட்சம், நரகம் என்பது
எல்லாம் பித்தலாட்டம்’ என்று எடுத்துக்காட்டி விளக்கினார். அவருடைய இயக்கம் காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது என்றாலும், புத்தருக்குப் பிறகு அது ஒழிக்கப்பட்டு,
சின்னாபின்ன மாக்கப்பட்டுவிட்டது. பிறகு யாரும் வரவில்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.
மாணவர்களாகிய நீங்கள் நல்ல வாழ்வில் நம்பிக்கை
வைக்கவேண்டும். அறிவில் நம்பிக்கை வைத்து ஒழுக வேண்டும்.
(மதுரை தியாகராயர் கல்லூரியல், 13-3-1961 ல் சொற்பொழிவு,
‘விடுதலை’ 4-4-1961)
பார்வை நூல்
1. கல்விச் சிந்தனைகள் பெரியார் - தொகுப்பு அ.மார்க்ஸ், மூன்றாம் பதிப்பு - சனவரி 2013, பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம், 421, அண்ணாசாலை, சென்னை - 600 018.
Comments
Post a Comment