மாணவர்களுடன் சுற்றுலா சென்ற அனுபவங்களாக...
எங்கள் கல்லூரியில் நாங்கள் (21.02.2025) முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு கணினி அறிவியல்
மாணவ – மாணவியர்களை ஒருநாள் சுற்றுலா பயணமாகத் தஞ்சாவூர் மற்றும் மல்லிப் பட்டினம்
என்ற இரு இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். நாங்கள் பகுதி – I – தமிழ் எடுக்கும் நாங்கள்
இவர்களை கல்விச் சுற்றுலாவாக இவர்களை அழைத்துச் சென்றது புதிய அனுபவமாக இருந்தது. அதை
உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். எங்களிடம் அனைத்து பிள்ளைகளும்
நன்றாக ஒத்துழைத்து எங்களுக்கு எந்த சிரமமும் வைக்காமல் நடந்து கொண்டார்கள். காலையில்
8.30 மணி அளவில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச்
சென்றோம். இரவு 10.30 மணிக்கு வந்துவிட்டோம்.
தஞ்சைப் பெருவுடையார்
கோயில் (அ) தஞ்சைப் பெரிய கோவில்
சம்ஸ்கிருதத்தில் – பிரகதீசுவரர் கோவில்
தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சைப்
பெரிய கோவில்
தஞ்சைப் பெரிய
கோவில் சோழர்களின் தனித்துவமான நாகரிகத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. இக்கோயில் கட்டிடக்கலை,
சிற்பக்கலை, ஓவியக் கலை, வெண்கலச் சிலை உருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
கோயில் உருவான
விதம்
காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர்
கோயில் இராசராசனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோயிலைக் கட்ட எண்ணி இராசராசன் தஞ்சையில்
பெரிய கோயிலைக் கட்டினான். பெரிய கோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில்
உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு.
சந்நிதிகள்
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள முக்கியமான
கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேசுவரர், அம்மன், நடராசர், வராகி,
முருகர், விநாயகர் மற்றும் கருவூர் தேவர் கோவில்களும் இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.
·
பெருவுடையார்
சந்நிதி – பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான்
லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராசராச சோழன் இராசராசீச்சரமுடையார் என்ற பெயரில்
வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை.
·
பெரியநாயகி
அம்மன் சந்நிதி – இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.
·
கரூவர் சித்தர்
சந்நிதி – இக்கோவிலில் கரூவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.
·
வராகி அம்மன்
சந்நிதி – வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு
கரங்கள் மட்டும் இருப்பது வியக்கத்தக்கது.
கோயில் சிறப்பு
இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர்
இராசராச சோழனின் தமிழ் பற்றையும் காணலாம். சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர்
எழுத்துக்கள் 12, பீடத்தின் உயரம் 18 அடி, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி, தமிழின் உயிர்மெய்
எழுத்துக்கள் 216, சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, தமிழ் மொழியின்
மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.
·
பிரமாண்டமான
இக்கோயில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
·
1010 ஆம் ஆண்டு
முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டு 1000 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
·
இக்கோவில் தமிழகத்தின்
மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 1967 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி,
அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தஞ்சை சரசுவதி
மகால் நூலகம்
·
தஞ்சாவூரில்,
தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது.
·
சோழர்கள் காலத்தில்
வளர்ச்சி அடைந்து, தஞ்சை நாயக்கர் மன்னர்களால் வளர்க்கப்பட்டுப் பின்னர் தஞ்சையை ஆண்ட
மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்றது.
·
பன்மொழிச் சுவடிகளும்,
காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்டு ஒப்பரிய நூலகமாக அமைந்துள்ளது.
·
இங்குத் தமிழ்,
தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள
ஓலைச் சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன.
·
இந்நூலகத்திற்கு
வெளியே கொலுமண்டபத்தில் 1807 –இல் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நிறுவப்பெற்ற கிழக்கிந்தியக்
கம்பெனியரால் நிறுவப் பெற்ற சரபோசி மன்னரின் உருவச் சிலை அழகாக அமைந்துள்ளது.
·
இப்பொழுது தமிழ்நாடு
அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.
மல்லிப்பட்டிணம்
தஞ்சாவூரிலிருந்து 66.5 கிமீ தொலைவில் மல்லிப்பட்டிணம்
அமைந்துள்ளது. மீன் அதிகமாக உள்ள பிரபலமான இடமாக மல்லிப்பட்டிணம் அமைந்துள்ளது. வெளிநாட்டு
மக்கள் அதிகமானோர் இங்கே மீன் வாங்குகின்றனர். மீன் மற்றும் கடல் உணவு இங்கிருந்து
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மனோரா கோட்டை
மல்லிப்பட்டிணத்தில் மனோரா கோட்டை உள்ளது.
1814 – இல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிப் பெற்றதைப்
பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்
சின்னத்தை நிறுவினார். அந் நினைவுச் சின்னத்தை
மனோரா என்று அழைக்கப்படுகின்றர். இது 8 அடுக்குள்ள மாடி, அறுகோண வடிவ கோபுர அமைப்பைக்
கொண்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 75 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோட்டை மினாரெட்
என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து மனோரா என்ற பெயரைப் பெற்றது. உச்சியை அடைய 120 படிகள்
உள்ளன. கோபுரம் ஒரு சுவர் மற்றும் ஒரு அகழியால் சூழப்பட்டுள்ளது.
----
Comments
Post a Comment