இரத்தம் தூய்மையாக ...
உடல் தூய்மைக்கும் நீண்ட ஆயுளுக்கும் ரத்தம்
இன்றியமையாதது. ரத்தம் தூய்மையாக இல்லாமல் உடல் உறுப்புகள் தூய்மையாக இருந்தாலும் பயனில்லை.
இப்போது மருத்துவ வளர்ச்சியின் காரணத்தினால், இரத்த மாற்றுச் சிகிச்சையும் நடைபெறுகிறது.
அத்தகைய இடர்பாட்டுக்கெல்லாம் இடந்தராமல், ரத்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது
நம் கடமையாகும்.
உடலில் நோய் உண்டானால், அந்நோய் ரத்தத்தைப்
பாதிக்கிறது. அதனால், ரத்தத்தைச் சோதித்து உடலில் தோன்றிய நோய்களை அறிகிறார்கள். எனவே,
ரத்தத்தின் தூய்மைக்கும் உடல் தூய்மைக்கும் தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் தோன்றிய
நோய்க்கிருமிகளை அழிப்பதே மருத்துவத்தின் தலையாயப் பணியாக இருந்து வருகிறது. உடலில்
நோய் இருந்தால் துர்நாற்றம் வீசும். தோலில் நிற மாற்றம் தோன்றும். இம்மாற்றத்திற்குக்
காரணம் இரத்தத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளாகும்.
இரத்தத்தைத் தூய்மை செய்ய ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆடுகளும் மாடுகளும் தின்னக்கூடிய தாவரங்கள் இரத்தத்தைத் தூய்மை செய்து விடும்.
கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி,
பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வெருகடி அளவு
தினமும் தேனில் ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் போய் ரத்தம்
தூய்மையாகும். நோய் கிருமிகள் அழிந்து விடும். கண்ணின் பார்வையும் கூர்மையாகும்.
பார்வை
நூல்
1.
வாசுதேவன். இர,
- உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம், New Horizon media
Pvt.Ltd., Alwarpet, Chennai – 600 018, june, 2008.
---
Comments
Post a Comment