சிரிப்பின் மகத்துவம்
ஒருவரின் மனநிலைக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய
தொடர்பு இருக்கிறது. மனதின் மகிழ்ச்சி குறையக்குறைய உடல்நலமும் மனநலமும் பாதிக்கத்
தொடங்கும். வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத்
தரக் கூடியவையாக அமையும். நாம்தான் மனத்தை பாதிக்காதவாறு அவற்றிலிருந்து விடுபட வேண்டும்.
ஒரு தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகச்
சில உத்திகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதைப் போல, வாழ்க்கையில் இன்பம் உண்டாகவும் சில
உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன் வந்தால், வாழ்வே மகிழ்ச்சிதான்! செய்யும்
செயல்கள் சீராகவும், உடலும் மனமும் வளமாகவும் கவலைகள் நீங்க வாழ்க்கை உத்திகள் வகை
செய்யும்.
மனத்தின் இயல்பு எது எளிதாக இருக்கிறதோ அதை
நாடிச் செல்வது. ஒன்று திருப்தி, மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் மனதின் இரண்டு பக்கங்கள்.
இதனை பெறுவதற்காக நாம் கடுமையாக உழைப்போம். அதனால் மனத்தில் இயல்பு மாறி மனஇறுக்கம்,
மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் போன்றவை தோன்றும். இவை அனைத்தையும் மாற்று
மருந்தாக பயன்படுவது சிரிப்பு. சிரிப்புக்கு விலைக் கிடையாது. ‘வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகும்!’ என்றால் அதனை நாம் செய்ய வேண்டும்.
சிரிப்புகளின்
வகைகள்
·
நமட்டுச் சிரிப்பு
·
வெடிச் சிரிப்பு
·
புன் சிரிப்பு
·
கபடச் சிரிப்பு
·
அசட்டுச் சிரிப்பு
·
ஆணவச் சிரிப்பு
·
அகந்தைச் சிரிப்பு
·
கள்ளச் சிரிப்பு
·
காதல் சிரிப்பு
என்று கூறப்பட்டாலும்
மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச் சிரிப்புக்காகவும், பிறரைக்
கேலி செய்வதற்காகவும் சிரிப்புப் பயன்படுகிறது. சிலரது நகைச் சுவை, சிந்தனையைத் தூண்டுவதாகவும்,
அறிவுக்கு விருந்தாகவும் அமையும். நகைச் சுவையினால் ஏற்படக் கூடிய சிரிப்பு மனதுக்கு
ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத்
தருகிறது.
சிரிக்க சிரிக்க மலரும் தாமரை போல், மனம்
வீசத் தொடங்குகிறது. மனதுக்கு இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டும் தான். அந்தச்
சிரிப்பு மருந்து கசப்போ, புளிப்போ, கார்ப்போ, துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும்
ஒரே சுவை. அது இனிப்பு. நமக்கு இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா?
சிரியுங்கள்.
மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்,
மருந்துக்ளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியுள்ளார்கள்.
சிரிப்பு என்னும் மருந்து நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும்
மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது.
உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான இரசாயனத்தை
வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு CGRP என்று பெயரிட்டுள்ளார்கள். இது உடம்பிலுள்ள
நோயெதிர்ப்புச் சக்தியாகச் செயல்படுகின்ற செல்களை ஊக்குவிக்கிறது. மனதில் உண்டாகும்
சிரிப்பினால் நரம்புகள் அதிர்கின்றன. மேலும் நாம் சிரிக்கும் போது மூக்கிலுள்ள சளியில்
இம்யூனோகுறோபுலின்- ஏ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால் பாக்டீரியா,
வைரஸ், புற்றுநோய் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதபடி தடுக்கிறது.
கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும்
நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது. அவ்வாறு ஏற்படாதிருக்க நாள் தோறும் குறைந்தது ஒரு
மணி நேரமாவது சிரித்துப் பழக வேண்டும். மேலும் வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது
சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
·
சிரிப்பினால்
இரத்தம் தூய்மையாகிறது.
·
ரத்த அழுத்தம்
குறைகிறது.
·
நுரையீரல் நன்கு
செயல்படுகிறது.
·
‘என்சிபேலின்ஸ்’
என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அதனால் தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது.
·
ஸெப்டிக் அல்சர்
என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.
நகைச்சுவையினால் நண்பர்கள் வட்டம் அதிகமாகிறது. உறவு பலமாக இருக்கும். புன்னகை
என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் இருக்கும் ஆன்மா. தனது
அழகை வெளிப்படுத்தும் போது புன்னகை தோன்றுகிறது. நம்பினால் சிரியுங்கள். பிறரது சிரிப்பிலும்
மகிழுங்கள்.
பார்வை நூல்
1. வாசுதேவன். இர, - உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம், New Horizon media
Pvt.Ltd., Alwarpet, Chennai – 600 018, june, 2008.
Comments
Post a Comment