Skip to main content

நாமக்கல், திருச்செங்கோடு பயணம்...

 

நாமக்கல், திருச்செங்கோடு பயணம்...

          எங்கள் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியரின் மகன் திருமணத்திற்குச் (01.03.2025) சேலம் அருகில் நானும் எங்கள் சக பேராசிரியர்களும் சென்றோம். அந்நிகழ்வை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாமக்கல் – ஆஞ்சநேயர்

திருச்சியிலிருந்து புறப்பட்டு நாமக்கல் சென்றோம்.  உலகப் புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. 1996-ஆம் ஆண்டில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000-ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய  கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது.

திருச்செங்கோடு – அர்த்தநாரீஸ்வரர்

மலையின் தோற்றம் குறிப்பாக மலையின் சிகரத்தின் தோற்றம் தூரத்திலிருந்து காண்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது. கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல விரித்து இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது போலவும் காட்சியளிக்கின்றது. இம்மலை சிவப்பு மஞ்சள் கலந்த நிறமாகவும் தோன்றுகின்றது. காலை சூரியனின் எழில் கிரணங்கள் மலையின் மீது படும் போது இவ்வர்ணக்கலவை எழில் மிகு காட்சியாக கண்களுக்கு விருந்தளிப்பதை நேரில் பார்த்து ரசித்தோம்.

கோவிலின் அர்த்தநாரீஸ்வர வடிவம் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்திலும், முருகப் பெருமான் கிழக்கு முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்திருவுருவங்கள் கற்சிலையோ செம்பு வெண்கலம் பித்தளை போன்ற உலோகங்களோ அல்லாமல் மகத்தான யோகம் வாய்ந்த சித்தர் மூர்த்திகளால் ஆக்கப்பட்ட ஒரு வகை அமைப்பு என்று இக்கோயில் தலபுராணம் குறிப்பிடுகின்றது.






இளம்பிள்ளை

கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலானது இளம்பிள்ளைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவுத் தொழில் பிரபலமானது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. 

இளைஞரான  வாய்த்த திருமூலரின் சீடரோ கிழவர்.  காலங்கிநாகர் என்னும் அக்கிழவர் கலிங்கத்திலிருந்து வந்தவர். காயம் உடலை மூப்படையாது கல்லாக மாற்றி எப்பொழுது இளமைநலம் நல்கும் காயகல்பத்தைத் தேடி குருவான திருமூலர் காட்டிற்குள் சென்றுவிட்டார். குருவுக்கு சீடர் உணவாக்கத் தொடங்கினார். அடிப்பிடித்துவிடக்கூடாதே என அக்காட்டில் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவ்வுணவை அக்கிழவர் கிண்டத் தொடங்கினார். உணவு கருகிவிட்டது. பதறிப்போன அவ்வுணவைக் கீழே இறக்கிவைத்துவிட்டு குருக்கு புது உணவை ஆக்கினார். கருகிய உணவு வீணாகிவிடக்கூடாதே என அதனை எடுத்து சீடராகி அக்கிழவர் உண்டார். அதனை உண்டுமுடித்ததும் கிழவரான காலாங்கிநாதர் இளம்பிள்ளையாக மாறிவிட்டார். அவ்வாறு அவர் உருமாறிய இடமே இந்த இளம்பிள்ளை என்னும் ஊர்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஊர் சென்று நாங்கள் சேலைகள் வாங்கினோம். பின் திருமண வரவேற்பு நிகழ்வுக்குச் சென்று இரவு ஊர் திரும்பினோம். மிகவும் மகிழ்ச்சியாக அன்றைய நாள் அமைந்தது.

 

 

 

 

 

 

 





Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...