பேரறிஞர் அண்ணா
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’
என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் முத்தான மூன்று மதிப்பீடுகளைத் தமிழகத்தில்
வளர்த்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என மாற்றுக் கருத்தை ஊட்டியர்.
சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர். தமிழகத்தில் காங்கிரசுக்கு மாற்றாக ஒரு மாநிலக்
கட்சியை உருவாக்கி அதன் மூலம் சமூக விழிப்புணர்வைத் தட்டி எழுப்பியவர். முதல் மாநிலக்
கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி ஆட்சியைப் பிடித்துச் சரித்திரம்
படைத்தவர் அறிஞர் அண்ணா.
அறிஞர் அண்ணா என்ற அண்ணாதுரை, காஞ்சிபுரத்தில்
நடராசன் – பங்காரு இணையருக்கு மகனாக 1909 – ஆம் ஆண்டு செப்டம்பர் 15 – ம் நாள் பிறந்தார்.
இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கைப் பெற்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப்
பணியாற்றினார். பத்திரிக்கைத் துறையில் ஆர்வம், அரசியல் ஈடுபாடு இவரை ‘அறியாப்புகழ்’
கொள்ள வைத்துவிட்டது. 1930 – ல் இராணியம்மாளைத் திருமணம் செய்து கொண்ட அண்ணா, டாக்டர்
பரிமளம் உட்பட நால்வரை மகனாகத் தத்து எடுத்து வளர்த்தார்.
தமிழ்ச் சமூகத்தை மூளைச் சலவை செய்த சமூகப்
போராளி தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இடம் பெற்று முதல் சீடரானார் அண்ணா.
1942 – இல் திராவிட நாடு என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். 1957 – இல் Home Law என்னும்
பத்திரிக்கையையும், 1966 – இல் Home Rule எனும் பத்திரிக்கையும் தொடங்கினார். பெண்ணடிமைத்
தனத்தை எதிர்த்தும், சமூகத்தின் நலிந்த மக்களுக்காகவும் தன் சிந்தனைகளைப் பத்திரிக்கைகளின்
வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். அவரின் பல கருத்துக்கள் தமிழ் மக்களிடையே மிகப்
பெரிய தாக்கத்தை உருவாக்கின. மக்களிடம் மூடப் பழக்க வழக்கங்களைத் தம் எழுத்துக்களால்
சுட்டிக்காட்டிச் சுத்திகரிப்புச் செய்தார். தம் சீர்திருத்தக் கருத்துக்களால் ‘திராவிட
இனப் போராளி’ எனப் புகழ் பெற்றார்.
படைப்புக்கள்
100 – க்கும் மேற்பட்ட சிறுகதைகள், இலக்கியத் தமிழ் மணக்கும் கடிதங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள், பல்வேறு திரைப்படங்களின் வசனங்கள் என அத்தனையும் இவரது ஓய்வறியாத உழைப்பால்
தமிழர்க்குக் கிடைத்தப் பரிசுகள். இவரது பேச்சுக்கு இரவு பகலாய்ப பலகோடி மக்கள் காத்துக்
கிடந்த அதிசயம் அண்ணாவுக்கன்றி வேறு யார்க்கும் வாய்த்திருக்கவில்லை. கற்ற்றிந்த பெரும்
மேதைகள் இலக்கிய வானின் துருவ நட்சத்திரம் இவர் எனப் பாராட்டினார். அரசியல் ஈடுபட்டால்
நீதிக்கட்சியில் சேர்ந்தார். சமூகக் காவலராக நீதிக்கட்சியில் சேர்ந்தார். சமூகக் காவலராக
இருந்த பெரியாரின் அறிமுகத்தால் திராவிடக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
அரசியலில் அவரின்
பங்கு
1967 – இல் நடந்த பொதுத் தேர்வில் 173 இடங்களில்
தி.மு.க போட்டியிட்டு 138 இடங்களைக் கைப்பற்றித் தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்று
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.
பகைவரும் விரும்பும் பண்பாளர். மனிதநேயத்தின்
மொத்த வடிவத்தை வார்த்தெடுத்த பேரழகு, எளிமையில் எளிமை, மனிதநேயத்தை மறக்காத உள்ளம்
கொண்டவர் அண்ணா. சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டதைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்
செய்தவர். வெறுப்பின் உச்சத்தால் தந்தை பெரியார் இந்திய விடுதலை நாளைத் துக்கநாள் என்றார்.
ஆனால் அறிஞர் அண்ணாவோ ஆணித்தரமாக மறுத்த விடுதலை நாளைத் திருநாள் என்று போற்றிப் புகழ்ந்தார்.
எந்தப் பதவியிலும் மயங்காத மனம்கொண்ட அண்ணா ‘எனக்கு எப்போதும் தலைவர் பெரியாரே’ என்றார்.
தேர்தலில் வென்று முதல்வரானதும் ஓடோடிச் சென்று பெரியாரிடம் இந்த அரசு உங்களுக்குக்
காணிக்கை என்றார். புகழால் பொலிந்த ஓவியம் அண்ணா தேர்தலில் வெற்றி பெற்றதும் கர்மவீரர்
காமராசர் அவர்களைச் சந்தித்து ஆசிபெற்றார். பிராமண வெறுப்பினைக் கொண்டவராக இருப்பினும்
மூதறிஞர் ராஜராஜி அவர்களிடம் நன்மதிப்பும், நல்ல நட்பும் கொண்டவர் அண்ணா. தொண்டைப்
புற்றுநோயின் காரணமாக 1969 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 – ஆம் நாள் இயற்கை எய்தினார்.
உலகில் எந்த தலைவருக்கும் கிடைத்தாத மரியாதை
அண்ணாவுக்குக் கிடைத்தது. யேல் பல்கலைக் கழகம் இவருக்கு முது முனைவர் பட்டம் வழங்கி
கௌரவித்தது.
பார்வை நூல்
1.
பிரேமா அரவிந்தன்
– தமிழ் வளர்த்த சான்றோர்கள், பாக்கியம் பதிப்பதம், தெற்கலங்கம், தஞ்சாவூர் – 613 001.
Comments
Post a Comment