மனவேதனையில்
சில வரிகள்!
உலகில் ஓர் அறிவு முதல் ஐந்தறிவு உயிர் வரை அனைத்து உயிர்களும் தன் உயிரையும் குட்டிகளையும் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் தன் உயிரையும், தன் உடமைளையும், கற்பையும் காத்துக் கொள்ள ஒவ்வொரு நிமிடமும் போராடி வருகிறோம். நேற்று முகநூலில் இரண்டு வீடியோக்கள் பார்த்தேன். நேற்றிலிருந்து மிகவும் மனவேதனையில் இருக்கிறேன். எனக்கு பிற நாடுகளில் எவ்வாறு பெண்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு என்று தெரியவில்லை. ஆனால் நம் நாட்டில்? கலக்கமாக உள்ளது. சமீப காலமே இச்சம்பவம் அதிகம் கேள்வி படுகிறோம்.
சங்க காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரை இலக்கிய
வளர்ச்சியைப் பார்த்துள்ளோம். மொழிக் கலப்பிற்குக் கவலை கொண்டு மொழியைப் பாதுகாக்கத்
தனித்தமிழ் இயக்கம் என்று நம் முன்னோர்கள் போராடினார்கள். ஆனால் நாம்
நம்மை பாதுகாக்கவும், நம் கற்பைப் பாதுகாக்கவும்
போராடுகிறோம். குழந்தை முதல் கிழவி வரை அனைவருக்கும் ஒரே நிலை. வந்தாரை வாழ
வைத்த நம் நாட்டில் யாரும் தெரியாதவர்கள் உதவிக்
கேட்டால் உதவி செய்ய அச்சமாக உள்ளது. மனிதநேயம் பார்த்தால் களவு, கொள்ளை பகலிலும் நிம்மதியாக
இயல்பான வாழக்கை வாழ முடியவில்லை.
நம் முன்னோர்கள் உறவுமுறை வைத்து சாதி மதம்
பார்க்காமல் பழகினார்கள். எனவே குழந்தைகள்
பாதுகாப்பாக சாலையோரங்களிலும், பூங்காவிலும் விளையாடினார்கள். ஆனால் இன்று அவ்வாறு
குழந்தைகள் விளையாட முடியவில்லை.
1. முகநூல் காணொலியில் அடுக்குமாடி குடியிருப்பில்
வசிக்கும் குழந்தை (10 வயதிற்குள்) பள்ளியிலிருந்து தன் அடுக்குமாடிக்கு நுழையும் பொழுது ஒரு கயவன்
பின்தொடர்கிறான். உடனே அக்குழந்தை சமர்த்தியமாக உள்ளே ஓடி வந்து முதல் மாடியில் உள்ள
வீடுகளில் உள்ள அழைப்பு மணியை அழுத்துகிறது. உடனே அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டார்கள்.
அவன் ஓடிவிட்டான். ஆனால் இன்று அக் குழந்தை தப்பிவிட்டது. எல்லா நாட்களும் தனியாக வெளியே
போகாமல் இருக்க முடியுமா?
2. மற்றொரு காணொலியில் ஒரு பெண் 12 அல்லது
13 வயது பெண்ணை அழைத்துச் செல்ல முற்படுகிறாள். அக்குழந்தைக்கு சந்தேகம் எழ உடனே, அருகில்
உள்ள கடைக்குச் சென்று அக்கடையில் பெண்ணிடம் நிலைமையை எடுத்துக் கூறி அந்தப் பெண்ணின் பாதுகாப்புடன் வீட்டுக்குச் செல்கிறது.
அப்பெண் உடனே இருசக்கர வாகனத்தில் சென்று விடுகிறாள்.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது அச்சமாக உள்ளது.
பகலில் இச்சம்பவங்கள் நடக்கிறது. முன்பு இரவில் திருட்டு, கொள்ளை நடக்கும். ஆனால் பகலில்
எல்லாம் நடக்கிறது. தற்பொழுது குழந்தை கடத்தல், பாலியல் சீண்டல், கொலை செய்தல் என்று
நடக்கிறது. தற்பொழுது செய்தித்தாளை பார்த்தால் கோபமாக வருகிறது. தினம் இதுபோல் பாலியல்
துன்புறுத்தல் என்று செய்தி வந்த வண்ணம் உள்ளது.
நம் காலத்தில் எங்கள் அம்மா பெண் பிள்ளை
16 வயது வந்துவிட்டால் வயற்றில் நெருப்பு சுமந்து கொண்டிருக்கிறேன் என்பார்கள். ஆனால்
இன்று 1 வயது பெண் குழந்தை முதல் பாதுகாக்கும் அவசியம் வந்துவிட்டது. இதுதான் கலிகாலமா?
இனி நம் பாட்டி காலம் போல் குழந்தை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் போல் உள்ளது.
பெற்றோர்கள் வீட்டில் தாத்தா, பாட்டியை வைத்துக்கொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்க
வேண்டும். குழந்தைகளிடம் அன்றாட நிகழ்வுகளைக் கேட்க வேண்டும். மனம் விட்டு பேசவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பையனிடம் பெண் பிள்ளையிடம்
நடந்து கொள்ளும் முறையைச் சொல்லி வளர்க்க வேண்டும். பிள்ளைகளிடம் கண்டிப்பும், அக்கறையும்,
அன்பும், பண்பும் சொல்லித் தாருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளின் நலன்களைக்
காப்போம்!
Comments
Post a Comment