Skip to main content

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி

 

கப்பலோட்டிய தமிழர் வ..சி


          உலகநாதம் பிள்ளைக்கும், பரமாயி அம்மைக்கும் 1872 – ஆம் ஆண்டு செப்டம்பர் 5 – ஆம் நாள் ஒட்டப்பிடாரத்தில் மகனாக அவதரித்தார் வ..சிதம்பரம். ஆங்கிலம் கற்க அந்த ஊரில் பள்ளி இல்லை என்பதனால், ..சி. படிப்பதற்காக ஓர் ஆங்கிலப் பள்ளியையே புதிதாக உருவாக்கினார் உலகநாதம் பிள்ளை. பாட்டனார், பெரிய தந்தை, தந்தையைப் போல் தானும் ஒரு வழக்கறிஞராக உயர்ந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதிடுவதையே தன் கடமையாகக் கொண்ட சிதம்பரம், காவல் துறை அதிகாரிகளின் கடுங்கோபத்திற்கு ஆளானார். ‘சப்- மாஜிஸ்திரேட் ஏகாம்பரம் என்பவர் லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடுத்துத் தண்டனையைப் பெற்றுத் தந்த இவர் அதிகார வர்க்கம் பரம எதிரியாகப் பாவித்தது.

          சிதம்பரம் பிள்ளைக்கு 23 வயதில் திருமணம் நடந்தது. தமிழ் புலமைமிக்க வள்ளியம்மையின் கரம் பற்றினார். ஆறாண்டுகள் இனிய இல்லறம் நடந்தது. பின் வள்ளியம்மை இறந்துவிட்டார். பின் மீனாட்சியை மறுமணம் செய்து கொண்டார்.

        விடுதலைப் போரில் விருப்பம் கொண்டார். தன்னுடைய 21 வயதில் திலகரின் தலைமையை ஏற்றார். ஒட்டபிடாரம் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றார். மதுரையிலிருந்து வெளிவந்த விவேகபானு இதழில் சுதேசபிமானம் என்ற முதல் அரசியல் கட்டுரையை 1906 – இல் எழுதினார். சென்னைக்கு வந்த போது இந்தியா இதழ் அலுவலகத்தில் பாரதியாரை முதல் முதலில் சந்தித்தார். ‘என் உள்ளத்தில் மின்மினி போல் ஒளிவிட்டுப் பிரகாசித்ததுஎன்று அந்தச் சந்திப்பின் பயனை வ..சி வருணித்தார்.

      தூத்தக்குடியில் தேசநலன் சார்ந்து மக்களை ஒன்று திரட்ட சுதேசிப் பண்டகசாலை, தரும நெசவு சங்க சாலை, ஜனசங்கம் என்ற மூன்று அமைப்புகளை வ..சி தொடங்கினார். கப்பல் வாணிகத்தில் வெள்ளையர் ஆதிக்கத்தைத் தகர்த்துத் தரைமட்டமாக்கச் சிதம்பரம் பிள்ளையின் தளராத முயற்சியில்சுதேசி ஸ்டீம் நேசிகேஷன்கப்பல் கம்பெனி 1906 – அக்டோபர் 16 – இல் உருவானது. பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் நாற்பதாயிரம் பங்குகள் திரட்டப்பட்டன. வேண்டிய மூலதனம் திரட்ட பம்பாய், கல்கத்தா, சென்னை, மதுரை என்று சோர்வுறாமல் சுற்றினார்.

          கப்பலுடன் வருவேன், இல்லையெனில் கடலில் வீழ்ந்து மாய்வேன்என்று சூளுரைத்துப் பம்பாய் சென்றார். அவர் பம்பாயில் கப்பல் வாங்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டபோது, மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தான். மனைவியோ நிறைமாத கர்ப்பிணியாகச் சிரமப்பட்டார். விரைவில் ஊர் திரும்பும்படி உறவினர் வற்புறுத்தினர்.‘இறைவன் துணை நிற்பார்என்று கடிதம் எழுதிவிட்டுக் காரியத்தில் மூழ்கினார். எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ என்ற இரண்டு கப்பல்கள் தூத்துக்குடி வந்து சேர்ந்தன. வெகுகாலம் புத்திரப்  பேறின்றி அருந்தவம் செய்த பெண்ணொருத்தி ஏக காலத்தில் இரண்டு புத்திர்ர்களை பெற்ற ஆனந்தம் போன்றது என்று இந்தியா இதழில் பாரதி இதைக் குறிப்பிட்டார்.

      தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உருவான கோரல் மில்லில் 1,800 தொழிலாளர்கள் பணியாற்றினர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓய்வின்றி வேலை. வார விடுமுறை இல்லை. தவறு செய்தால் பிரம்படி. மிகக் குறைந்த ஊதியம். சிறுவர்களிடமும் உழைப்புச் சுரண்டல். ‘கூலிகள்என்று கேவலமாக அழைக்கப்படும் இழிநிலை. விடியல் எப்போது என்ற வினாக்குறியுடன் ஏக்கம். இதற்கு முடிவுகட்ட களத்தில் இறங்கினார்.கோரல் மில் தொழிலாளர்களை ஊதிய உயர்வுவார விடுமுறை கேட்டு வேலை நிறுத்தம் செய்ய வைத்தார். வந்தே மாதரம் முழக்கத்துடன் தொழிலாளர்கள் தூத்துக்குடி நகர வீதிகளில் எட்டு நாட்கள் நீடித்தது. நகரமே வெள்ளையர்கள் எதிர்ப்பில் ஒன்று திரண்டது.

          தொழிற்சங்கம் பற்றிய சிந்தனையே வேர்விடாத அந்நாளில் முதல் வேலை நிறுத்தம் நடத்தி, அரை மடங்கு ஊதிய உயர்வும், ஞாயிறு விடுமுறையும், உணவு இடைவேளையும், அவசர காலத்தில் கூலியின்றி விடுப்பும் வாங்கி கொடுத்த வ..சி யின் சாதனையை வங்கத்தில் அரவிந்த கோஷ்வந்தே மாதரம்இதழில்நம்மிடமிருந்து சென்னை முதலிடத்தைக் கைப்பற்றிவிட்டது. இன்று தூத்துக்குடி மீது மகாபாரத்த் தேவர்கள் வானுலகத் தேர்களில் பழங்காலப் புகழ்செறிந்த காட்சிகளை மீண்டும் காண்பது போல, தூத்துக்குடி போர்க்களக் காட்சிகளைக் காண விண்ணில் வலம் வந்தனர். தீவிரமான வீரப் பண்பும், உயிர்தியாகமும் தெற்கு நோக்கிப் பயணித்தனஎன்று நெஞ்சம் நெகிழ்ந்து புகழ்ந்து தள்ளினார்.

     தூத்துக்குடி மசூதிப் பேட்டையில் நடையை மீறி நடந்த கூட்டத்தில் நான்காயிரம் மக்கள் திரண்டனர். சிதம்பரமும் சிவாவும் .... சூறைக் காற்றும், நெருப்பும் சேர்ந்தது போல மேடையில் முழங்கினர். அடுத்த நாள் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடிய கூட்டத்தில் நாடி நரம்புகளை முறுக்கேற்றுவது போல் இருவரும் சண்டமாருதம் செய்தனர். அஞ்சிய அதிகாரி வர்க்கம் வ.உ.சி, சிவா, பத்மநாப ஐயங்கார் மூவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது. இந்த செய்தி கசிந்ததும் நெல்லை, தூத்துக்குடி நகரங்களில் எரிமலை வெடித்தது. கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து நின்றது.

ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் அரங்கேறின. அஞ்சலகங்கள் கொளுத்தப்பட்டன. தந்திக் கம்பங்கள் தகர்க்கப்பட்டன. காவல் நிலையம் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளிகள் முதல் குதிரை வண்டிக்காரர்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்திய வரலாற்றில் உழைக்கும் வர்க்கம் அரசியல் நோக்கத்திற்காக முதன்முதலில் வ.உ.சி கைது செய்யப்பட்ட போதுதான் வேலை நிறுத்தத்தை நடத்தியது.

அரச நிபந்தனைப் பேச்சுக்காகவும், சிவாவை ஆதரித்ததற்காகவும் இரட்டை ஆயுள் தண்டனையை வ.உ.சி க்கு நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே வழங்கினார். ‘சிதம்பரம் மிகப் பெரிய ராஜ துரோகி. அவருடைய எலும்புக் கூடும் ராஜத்துரோகமானது’ என்று அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார். நாற்பதாண்டு சிறைத் தண்டனை பெற்ற போது சிதம்பரத்திற்கு 35 வயது. தீர்ப்பைக் கேட்டதும் அவரின் தம்பி மீனாட்சி சுந்தரம் அதிர்ச்சியில் புத்தி பேதலித்து 1943 – இல் இறந்தார். இந்திய வைஸ்ராய் மிண்டோவுக்கு லண்டனிலிருந்து இந்திய ராஜாங்க மார்லி எழுதிய கடிதத்தில், ‘நீதிபதி பின்ஹேவின் தீர்ப்பு முற்றிலும் நியாயத்திற்குப் புறம்பானது. இந்த அரக்கத்தனத்தை என்னால் ஆதரிக்க முடியாது’ என்று கண்டித்தார். லண்டனில் இருந்த ‘பிரிவியூ கவுன்சிலிலும் மேல் முறையீடு செய்த்தன் விளைவாக 40 ஆண்டு சிறைத்தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. பின்னர் அவரது நன்னடத்தையைக் கணக்கில் வைத்து, அது நான்கரை ஆண்டுகளாக மாற்றப்பட்டது.

கோவை சிறையில் வ.உ.சி அடைந்த துன்பங்களுக்கு அளவில்லை. கைத்தோல் உரிந்து விழும் வண்ணம் சணல் உரிக்கும் இயந்திரம் சுற்றினார். பகலெல்லாம் எண்ணெய் செக்கில் எரிகிற வெயிலில் காய்ந்த கல்லையும், கட்டையும் தள்ளினார். அவர் கால்களில் பெரிய இரும்புச் சங்கிலி பூட்டப்பட்டது. கல்லும் மண்ணும் கலந்த உணவு வழங்கப்பட்டது. சிறிது நேரமும் அவரை இளைப்பாற விடவில்லை. இரக்கமற்ற சிறை அதிகாரிகள். சிறை வாசத்தில் உடல் நலிவுற்று, இருபது பவுண்டு (9கிலோ) எடையை இழந்தார்.

கோவை, கண்ணனூர் சிறைகளில் நான்கரை ஆண்டுகளில் கடுந்துன்பங்களைத் தாங்கி 1912 டிசம்பர் 24 அன்று வ.உ.சி விடுதலையானார். அவரை வரவேற்க மாநிலமே திரண்டு வரும் என்று எதிர்பார்த்த ஆங்கிலேய அரசு விரிவான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ரகசிய அறிக்கை அனுப்பியது. ஆனால் அந்த மனிதரை வரவேற் அவருடைய மனைவி, மக்கள், மைத்துனர், சுவாமி வள்ளிநாயகம், நண்பர் கணபதி, ஒரு மாத்த்திறகு முன்பு விடுதலையான தொழுநோய் பிடித்த சுப்ரமணிய சிவாவை தவிர வேற யாரும் வரவில்லை. நாய்களிடம் நன்றி கற்க வேண்டிய மண் இது.

சிறைவாசத்திற்கு பின் சென்னை போய் சேரந்த சிதம்பரம் பிள்ளை வறுமையின் பிடியில் வாடினார். குடும்பம் நடத்த மளிகைக் கடையும், மண்ணெண்ணெய் கடையும் வைத்து வாழ்க்கை வியாபாரத்தை வெற்றிக் கரமாக நடத்த தெரியாமல் நட்டப்பட்டார். நீதிபதி இ.எச்.வாலஸ் உதவியால் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட அவர் தன் நன்றியை வெளிப்படுத்த ‘வாலீஸ்வரன்’ என்று பெயரிட்டார். இறுதியில் தூத்துக்குடியில் சென்றார்.

விடுதலைக்குப் பின்பு அரசியல் களத்திலும், தொழிலாளர் நலனிலும் நாட்டம் காட்டினாலும், அவருடைய ஆன்மா இலக்கிய பணியில் நிறைவடைந்து விட்டது. ‘மகாபாரத்த்தின் முடிவில் காண்டீபத்தைத் துறந்து இமயத்தை நோக்கி நடந்த அருச்சன்னைப் போல, நமது வீரம் பெறும் நோக்கி நடந்த அருச்சுன்னைப் போல, தமது வீரம் பெறும் அரசியல் தன்மையைத் தாமே துறந்து மொழிப்பணியிலும் சமய வாழ்விலும் ஆழ்ந்தார். இதுவே அவருடைய தியாகத்திற்கெல்லாம் மணிமுடியாக அமைந்தது’ என்றார் பேராசிரியர் சீனிவாச ராகவன்.

வ.உ.சி. நோயுற்றதும் தன் இறுதி நாள் நெருங்குவதை உணர்ந்தார். என்னுடைய கடைசி நாட்களைக் காங்கிரஸ் காரியாலயத்தில் கழிக்க விரும்புகிறேன். என்னை என் வீட்டிலிருந்து காங்கிரஸ் கமிட்டிக்குக் கொண்டு செல்லுங்கள்’ என்றார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மண் காணக் கூடிய அந்த கர்மயோகி 1936 நவம்பர் 18 ஆம் நாள் இரவு 11.30 மணிக்கு இறுதியாக கண்மூடினார். சுத்த சைவரான சிதம்பரம் பிள்ளை கண்மூடும் கடைசி தருணத்தில் ‘நமசிவாயம் வாழ்க’ என்ற திருவாசகம் கேட்கவில்லை. சிவகுருநாதன் என்ற காங்கிரஸ் தொண்டரை ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ எனும் பாரதியின் தேசியப் பாடலைப் பாட சொல்லி அதைக் கேட்ட படி மரணத்தின் மடியில் கண் மூடினார்.

கடைசித் தமிழன் உள்ளவரை மறக்க முடியாத மனிதர் நம் கப்பலோட்டி தமிழர் வ.உ.சி.

பார்வை நூல்

1.  தமிழருவி மணியன் – மறக்க முடியாத மனிதர்கள், தற்பகம் புத்தகலாயம், சென்னை – 600 017.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...