‘இறவா பேரழகி கிளியோபாட்ரா’
(எகிப்து நாட்டு
அரசி கிளியோபாட்ராவைப் பற்றி படிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைப்பட்டேன். அந்த ஆசை இன்று நிறைவேறியது. அதை உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ரத்தினச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்.
2000 ஆண்டுகளாக என்றென்றும் அழகி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பெண். இன்றும் ஆண்களின்
மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே பெண் கிளியோபாட்ரா.
கிளியோபாட்ராவும், 32 வயதில் உலகையே வென்று மாவீரனாக உலாவந்த மகாவீரன் அலெக்சாண்டருக்கும்
வம்சாவழி தொடர்புண்டு என்பது பெரும் வியப்பான செய்தியாகும்.
கிளியோபாட்ரா – தாலமி வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர்கள் பரம்பரை பரம்பரையாக அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
கிடையாது. மாசிடோனியாவின்
பேரரசன் மகா அலெக்சாண்டர் உலகை ஒரே குடைக்குள் கொண்டு வர விரும்பி, தன் நாட்டிலிருந்து
கிளம்பினான். எகிப்தை வென்று
நைல்நதி வழியாக பல நாடுகளை கைப்பற்றி இந்தியாவிற்குள் நுழைந்தான். இந்திய மன்னன்
போரஸ் (எ) புருஷோத்தமன்
அலெக்சாண்டரை கடுமையாக எதிர்த்தான் என்றாலும், அவனால் அலெக்சாண்டரை வெல்ல முடியவில்லை. எனினும் ஒரு
இந்திய மன்னனின் வீரத்தைக் கண்டு பிடித்த நாட்டை அவனிடமே கொடுத்துவிட்டு மாசிடோனியாவை
விட்டு பல்லாண்டுகள் ஆனதாலும் படைவீரர்கள், அவர்கள் களைப்பும், சோர்வும் வேதனையாலும் நாடு திரும்ப வேண்டியிருந்தது.
நாடு திரும்பும் வழியில் அலெக்சாண்டர் பாபிலோனியாவில் தனது 32 – ம் வயதில் நோய்
வாய்ப்பட்டு இறந்தார். இவருக்கு வாரிசு இல்லாததால் முக்கிய தளபதிகள் ஒன்று சேர்ந்து
நமது அரசன் கைப்பற்றிய நாடுகளில் விருப்பமான நாட்டை எடுத்துக் கொண்டனர்.
இதில் தாலமி
என்ற அலெக்சாண்டரின் மிக நெருங்கிய நண்பராக இருந்த அவன் எகிப்து நாட்டை கைப்பற்றினான். இவன் அரசனை
விட ஆறு வயது மூத்தவன். அரசன் மாசிடோனியாவின் அரசனாக பதவி ஏற்றபோது தாலமி முக்கிய
தளபதியாக பதவி ஏற்றான்.
தளபதியாக இருந்த தாலமி அரசனாக பதவி ஏற்ற பிறகுதான் அவரின் (தாலமி) வம்சம் தோன்றியது. இவரின் வம்சத்தில்
பிறந்தவள்தான் உலகம் உள்ளவரை நிரந்தர அழகியாக வீற்றிருக்கும் பேரழகி கிளியோபாட்ரா (எ) ஏழாம் கிளியோபாட்ரா.
கிளியோபாட்ரா
– 13 –ம் தாலமி
திருமணம்
எகிப்து மரபுபடி ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் மூத்த பெண்ணிற்கு திருமணம் செய்து
வைத்த பின்னர் தான் அரச பதவி வழங்க வேண்டும். அதன்படி 18 வயது அழகு மகளை, அவளின் சகோதரனான 11 வயதுள்ள 13 – ம் தாலமிக்கு திருமணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். காரணம் எகிப்து
தேசமானது முழுமையாக ரோமிற்கு அடிமையாகவிடக் கூடாது என்ற எண்ணம்தான். தனது கணவராக
சகோதரன் கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். சிறு பையனான அவனை ஒன்றும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு
அரசை ஆண்டு கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டாள்.
அக்காலத்தில் வாரிசுகள், அரச பதவிக்காக அண்ணன் –தங்கை , அக்காள் –தம்பி மணப்பது இயல்பான நாகரிகமாகவே கருதப்பட்டது.
ரோமிக்கு அடிப்பட்டு – அல்லல்பட்டு, அடிமைச் சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கும் எகிப்தை மீட்டெடுக்க
வேண்டும் என்ற வைராக்கிய உள்ளத்தோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாள் கிளியோபாட்ரா.
மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைத்தாள். அழகி என்றாலும்
அகந்தை இல்லாத குணமும், தங்களுக்காக பாடுபடும் அரசியை மக்கள் மதித்து போற்றினார்கள்.
இளவரசன் தன்னையொத்த சிறுவர்களோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் சூழ்ச்சியினால்
மந்திரி, அகில்லஸ் என்ற
தளபதி இருவரும் கிளியோபாட்ராவைத் தவறாக சித்தரித்து கெட்ட எண்ணத்தை உருவாக்கினார்கள். ஆகையால் இளவரசன் 13 – ம் தாலமி ”உடனே இளவரசியாரை
நாட்டை விட்டு துரத்துங்கள்” என்றான்.
தான் இங்கிருந்தால் பொதினஸிம், அகிலெசும் சேர்ந்து கொன்றே விடுவார்கள். தன்னை பிடிப்பதற்குள்
அரண்மனையிலிருந்து தப்பி விட வேண்டும் என்று திட்டமிட்டவள், தன் மேல் உண்மையான
பற்று வைத்திருந்த சில வீரர்களோடு தீப்ஸ் நகருக்கு தப்பித்துச் சென்றாள்.
தன்னை கொல்ல தாலமி ஆட்கள் வருகிறார்கள் என்பதை அறிந்த அவள், எங்குச் சென்றால்
பாதுகாப்பாய் இருக்கும் என்பதை உணர்ந்த அவள், சிரியாவிற்குள் தன் ஆட்களோடு நுழைந்தாள். அவளின் ஆலோசகர்படி
கார்ஸா என்ற இடத்திற்கு வடக்கே உள்ள கடற்கரையை ஒட்டிய பகுதியான அஸ்கலன் என்ற இடத்தில்
தங்கினான்.
இங்கிருந்தே பெரும்படையை திரட்டி எகிப்தை மீண்டும் தன் கைப்பிடிக்குள் கொண்டு
வர திட்டமிட்டாள்.
ஜீலியஸ் சீசர்
வியந்த பேரழகி கிளியோபாட்ரா
அலெக்சாண்டரியா அரண்மனையில் அமர்ந்திருக்கிறார் சீசர். அவர் மீது படை
எடுக்கும் துணிவு வட்டார நாடுகளிலுள்ள அரசர்களுக்கு இல்லை. தன்னாலும் படையெடுக்க இயலாது. அவர் மீது படை எடுத்து வெற்றி பெற பத்து ஜென்மம் எடுத்தாலும்
முடியாது.
அவரை வெல்ல ஒரே வழி. அழகுதான். என் அழகு வலையை வீசி, அந்த அரைக்கிழ அரசனை வீழ்த்தி விடலாம். பெண்ணின் கடைக்கண்
பார்வைக்கு கட்டுப்படாத மன்னாதி மன்னர் எவராவது இவ்வுலகில் இருக்கிறாரா என்ன?
எகிப்து தான் நுழைந்தால் பொதினெஸின் ஆட்களை தன்னை கொலை செய்து விடுவார்கள். சீசரை அரண்மனையில்
சந்திக்க என்ன தான் வழி? சிந்தித்தாள்.
வழி அகப்பட்டது.
தன்னை மிகவும் அழகாக அலங்கரித்து கொண்டாள். கண்ணாடியே அவர் அழகைக் கண்டு மோகித்தது.
உயிர் போகும் நிலையிலுள்ள கிழவன் கூட அவள் அழகை பார்த்தானானால் உடனே உயிர்ப்பித்து
விடுவான் அத்தனை மோக அழகு.
தனது ஒற்றர் இருவரை அழைத்தாள். அவர்களிடம் தான் எழுதிய கடிதத்தை கொடுத்து அனுப்பினாள்.
ஒற்றர்கள் சீசரை சந்தித்து கடிதத்தைக் கொடுத்தனர்.
மாவீரரே! வீரத்தின் விளைநிலமே, ரோமாபுரியின்
வேந்தே,
12 – ம் தாலமியின் தங்கமகளும், 13 – ம் தாலமியின் மனைவியுமான எழில் கிளியோபாட்ரா, இக்கட்டான நிலையில்
எழுதும் கடிதம்.
தங்களை நேரில் கண்டு என் நிலையை எடுத்து கூற விரும்புகிறேன். சந்திக்க அனுமதி
வழங்குங்கள்.
இப்படிக்கு,
கிளியோபாட்ரா
”தங்கள் இளவரசியை வரச் சொல்லுங்கள்” என்று அனுமதி வழங்கினான் சீசர்.
இளவரசியின் ஒற்றர்கள் சீசர் சந்திக்க விரும்பியதை கூற, மிகவும் மகிழ்ந்தாள்.
”இளவரசியாரே தங்களை கொல்ல எகிப்து முழுவதும் பொதினெஸின் ஆட்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவளின் நம்பிக்கையான
பாதுகாவலன் அப்போலோ டோரஸ்.
”தெரியும் டோரஸ்”
”எப்படி பேரரசரை சந்திப்பது?”
”சொல்கிறேன். விலை மதிப்பில்லாத கம்பளத்தை செய்ய சொல்லியிருக்கிறேன். அதில் நான்
படுத்துக் கொள்கிறேன். என்னை சுருட்டி, கம்பள வியாபாரி போல அரண்மனைக்குள் நுழைந்து விடு” என்று தன் திட்டத்தைக்
கூறினாள்.
”அருமையான திட்டம் இளவரசி” என்றான் அப்போலோ டோரஸ்.
நள்ளிரவு
தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டு அஸ்கலனிலிருந்து தன்னோடு ஒரு சில நம்பிக்கையான
படை வீரர்களோடு கிளம்பினாள் கிளியோபாட்ரா.
எகிப்தின் எல்லையில் கம்பளத்தில் தன்னை மறைத்துக் கொண்டாள். அப்போலோ டோரஸ். கம்பளத்தை தோளில்
சுமந்து கொண்டான்.
அலெக்சாண்டீரியா அரண்மனை.
காவலர்கள் டோரஸை நிறுத்தினர்.
அரசருக்குக் கம்பள அர்ப்பணம் என்றான்.
அனுமதித்தனர்.
உள்ளே நுழைந்தான்.
கிளியோபாட்ரா - சீசரைச் சந்தித்தல்
இருவரும் தனி அறையில் அமர்ந்தனர்.
கிளியோபாட்ரா ”நான் எகிப்தின் அரசியாக வேண்டும். அதற்காக என்ன
கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்பதை மனதில் கொள்ளுங்கள்” என்று கூறியது
அவர் காதில் ரீங்காரமிட்டன.
அழகின் சிகரமான புதுப் பருவ மங்கையின் வசீகர முகத்தை தன் பக்கமாய திருப்பினார்
சீசர்.
மைதீட்டிய கவர்ச்சிக் கண்கள்
உள் அமுங்கிய அழகிய நாசி
செவ்வரி அமைந்த மோவாய்
மெல்லிய தோள்கள். இளமை பொங்கும் அழகிய – மென்மையான தேகம்.
கோபமானான் 13 – ம் தாலமி
13- ம் தாலமி தன் மனைவி ஜீலியஸ் சீசரிடம் சோரம் போனதை ஒற்றர் மூலம் அறிந்து கூக்குரலிட்டார்.
”எல்லாம் போச்சு, எகிப்தின் மானம், மரியாதை எல்லாம் போச்சு, கிளியோபாட்ரா எகிப்தை சீசருக்குத் தாரை வார்த்துவிட்டாள்
பாவி! என்று கோபத்தின்
உச்சியில் கத்தினார்.
மக்கள் கூடியிருந்த இடத்தில்,
13 – ம் தாலமியை ரோமானிய படைவீரர்கள், எந்தவித சலசலப்புக்கும் ஆளாகாமல் தூக்கிச் சென்றனர்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான் 13 – ம் தாலமி.
சீசர் எகிப்து
மக்களிடம் பேசுதல்
சீசர் எகிப்து மக்களிடம், ‘என் இனிய எகிப்து மக்களே, நான் எகிப்து நாட்டில் உன்னதமான, உங்கள் மனம் கவர்ந்த, நற்குணங்கள் கொண்ட அருமை நண்பர் உன் உயிர் தோழர் 12 – ம் தாலமி என்பதை
நீங்கள் அறிவீரா! அவர் இறப்பதற்கு முன்னர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில்
மரியாதைக்குரிய நண்பர் சீசரே, தாலமியும் கிளியோபாட்ராவும் எந்தவித அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்கு
உறுதுணையாக இருந்து எகிப்தை தாங்கள் ஆள வேண்டும். தாலமி ஆளும் தகுதியை பெற்று விட்ட பின்னர், தாங்கள் அவனுக்கு
ஆலோசகராக இருக்கவேண்டும். நட்புக்கு துரோகம் செய்யாமல் பகைவர்கள் தங்கள் நாட்டை சூறையாடமலிருக்கவே
நான் இங்கு வந்தேன்.
நாளையே தங்கள் அரசராக 13 – ம் தாலமியையும், அரசியாக கிளியோபாட்ராவையும் பதவி ஏற்க வைக்கிறேன்.
உடனே மக்கள் வாழ்க ரோமானிய மன்னர் சீசர் ! என்ற வாழ்த்தொலி எழுப்பினர்.
சீசர் தன் மக்களை பேச்சால் வென்று விட்டார் என்பதை நினைத்து பூரித்தாள் கிளியோபாட்ரா.
சதி திட்டம்
கணவன் நானிருக்க கண்டவனோடு களித்து கிடக்கும் கருநாகத்தை கண்டவுடன் கொல்ல வேண்டும்
என்று கத்தினான் 13- ம் தாலமி.
ஒரு மாதம் போர் நடந்த போரில் தாலமியின்
படைகள் தோற்று ஓடின. உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய 13 –ம் தாலமி கைது செய்யப்பட்டான்.
எகிப்து சீசரின் கைக்குள் அடங்கியது. அப்பொழுது கிளியோபாட்ராவின் வயிற்றில் சீசரின்
வாரிசு வளர்ந்தது.
இறுதியாக நடந்த போரில் 13 –ம் தாலமி, பொதினெஸ், அகில்லெஸ் கொல்லப்பட்டனர். எகிப்தின் அரசியாக கிளியோபாட்ரா பட்டம் சூட்டவேண்டும் என்றார்
சீசர்.
அன்றிலிருந்து மூன்றாவது நாள் 13 வயது 14
– ம் தாலமிக்கும், கிளியோபாட்ராவுக்கும் திருமணம் செய்யப்பட்டது. (எகிப்து நியதிப்படி) அன்றே அவளுக்கு
அரச பதவி வழங்கப்பட்டது. 14 – ம் தாலமிக்கு 15 வயதாகும் வரை அவள் தான்
எகிப்தின் சர்வ வல்லமை பொருந்திய அரசி.
ஜீலியஸ்
சீசர் – கிளியோபாட்ரா
வுக்கு குழந்தை தாலமிசீசர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. சீசரை சூழ்ச்சியால்
காங்கோ மறைத்து வைத்திருந்த கத்தியால் சீசரின் கழுத்தில் ஓங்கி குத்த... ‘காங்கோ என்ன
செய்கிறாய் நீ? என்று சட்டென்று
கழுத்தை பிடித்தபடி...
அடுத்து
புரூட்டஸ் நெஞ்சில் ஓங்கி குத்த...
‘நீயுமா புரூட்டஸ்’ என்று சரிந்து விழ.. அடுத்தடுத்து குத்துக்கள் தொடர்ந்து அவர் உடம்பில் போம்பேயின்
சிலை முன் ரத்த சகதியாய், தரையில் கிடந்தார் மாவீரர் சீசர்.
நான்கு
நாட்கள் சீசரின் மாளிகையில் அவரின் பூத உடல் கிடத்தப்பட்டிருந்தது. தினமும் மக்கள்
அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சீசரின்
உடல் எரிந்து சாம்பலாகும் வரை மக்கள் அசையவில்லை. சாம்பலானதும் மக்கள் கண்ணீருடன் மெல்ல விலகினர்.
மார்க்
ஆண்டனி எல்லோரும் சென்ற பின் ‘உன்னை கொன்ற புரூட்டஸ் கும்பலை அழிக்காமல் சாக மாட்டேன்’ என்று சபதம்
செய்து விட்டு நகர்ந்தார்.
கிளியோபாட்ராவின்
காதலன் மார்க ஆண்டனி
தன் உயிர் காதலன் சீசரை கொன்ற புரூட்டஸையும், காஷியஸையும் ஆண்டனியின் ஆட்கள் கொன்றதை அறிந்த கிளியோபாட்ரா
மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.
உடனே தனது ஒற்றர்களிடம் மார்க் ஆண்டனிக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்து அனுப்பினான்.
அழகியோடு ஐக்கியமானான்
ஆண்டனி
ஆண்டனி ரோமை மறந்து அவளுடனேயே தங்கி விட்டான். அவர்களின் இன்ப வாழ்விற்கு வாரிசுகளாக கி.மு 40 –ல் இரட்டையர்கள்
பிறந்தனர். ஆண் – அலெக்சாண்டர்
ஹெலியோஸ், பெண் – கிளியோபாடரா
செலின் என்று பெயரிட்டனர். கி.மு. –ல் அவள் மூன்றாவதாக ஒரு ஆண்மகனை பெற்றெடுத்தாள். அவனுக்கு 16 – ம் தாலமி பிலடெம்பியஸ்
என்று பெயரிட்டனர்.
அமைதியாக சென்றது அவர்கள் வாழ்க்கை. நைல் நதி ஓரத்தில் பெரிய மாளிகையை கட்டி நான்கு பிள்ளைகளோடு
வாழ்ந்து வந்தனர்.
நான்கு வருடங்களுக்குப் பின்னர் பல நாடுகளை கைப்பற்றியும், கைப்பற்றிய
நாடுகளிலிருந்து கொண்டு வந்த வைரங்கள், ஆபரணங்கள், ஆடைகள், பிடிபட்ட வீரர்கள் இவைகளை கண்டு எகிப்திய மக்கள் ஆச்சிரியப்பட்டனர்.
அலெக்சாண்டிரியா திருவிழா கோலம் பூண்டது.
சதியால் ஆண்டனி
இறத்தல்
ஆண்டனி இறந்தவுடன் தங்கள் நாட்டு அரசியை கைது செய்து குற்றவாளியாய் அழைத்து
செல்வதைக் கண்டு மக்கள் கதறி அழுதனர்.
அழகு கோலத்தில் காணப்படும் அரசியை அசிங்கமாக்கி, அலங்கோலாமாக்கி இழுத்துச் சென்றது அவர்களை துயரமாக்கியது. அவளை தனியாக
அரண்மனை காவலில் வைக்கப்பட்டாள்.
உதவிக்கு இராஸ், சாரமியோன் மற்றும் சிலர் இருந்தனர். ஆண்டனியே அங்கேயே
அவர் விருப்பப்படி அலெக்சாண்டரியாவிலேயே புதைத்தனர்.
கிளியோபாட்ராவின்
இறுதி வாழ்க்கை
ஆகஸ்ட் 11
தனது சேவகியும், தோழியுமான இராஸை அழைத்தாள் கிளியோபாட்ரா.
சொல்லுங்கள் அரசியாரே.
மெல்ல புன்னகைத்து விட்டு, ”நான் கிரீஸ்
சென்று வாழ கப்பல் கப்பலாய் செல்வங்களை அங்கு அனுப்பினேன். அத்தனையும் ரோமுக்கு சென்று
விட்டது. இன்று நான் வெறும் கையுடன் இருக்கிறேன். அரச பதவி, என் உயிர் ஆண்டனி, எதுவம்
இல்லை. நாம் ரோம் மண்ணில் சாவதை விட அலெக்சாண்ட்ரியாவின் மண்ணில் சாவதையே விரும்புகிறேன்”
என்றவள், ”நமது ஆட்களிடம் காடுகளில் வாழும் ‘அஸப்’ நாகத்தை பிடித்து வரச் சொல்.”
”அரசு.. அது கொட்டியவுடன் உயிர் போய் விடுமே”
அதனால்தான் கேட்டேன்”
அரசியாரே தாங்கள் சாகத்தான் வேண்டுமா?
”நிராயுதபாணியாய் நிற்கும் எனக்கு இனி
வாழ்க்கை ஏது இராஸ். சாதாரண மனுஷியாய் இருந்தால், எல்லாவற்றையும் இழந்தாலும் இந்த உலகில்
உயிர் வாழ இடமிருக்கிறது. நான் அரசி. அரசியல்வாதி. சிறையில் ஒவ்வொரு நாளும் சித்ரவதையை
அனுபவிக்க வேண்டம். ஆக்டேவியஸ் என்னை உயிரோடு வைப்பான் என்று எண்ணுகிறோயா? இவளை சிறையில்
அடைந்தாலும், எப்படியாவது மீண்டும் எகிப்தை தன் கைக்குள் கொண்டு வரத்தான் எண்ணுவாள்
என்று பாம்பு குழியில் தள்ளுவான். அங்கு சாவதை விட இங்கேயே என் மண்ணில் நிம்மதியாய்
சாகலாம் அல்லவா?”
“அரசி... சீசரையும்.. ஆண்டனியையும் பார்க்காமலிருந்தால்
எகிப்தின் அரசியாக வாழ்ந்திருக்கலாமே.”
”போடி.. சீசர் உயிரோடு இருந்திருந்தால்
, நான் பாதி உலகின் அரசி, மாவீரனையே கொன்றவர்கள். என்னை சாகடிக்க எவ்வளவு நேரமாகும்.
சரி போனதைப் பற்றி பேசி பயனில்லை. இவ்வுலகில்
பிறந்ததற்காக சில ஆண்டுகள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தேன். என் பிள்ளைகள் சிறையில் சித்ரவதை
அனுபவிப்பதை பார்த்துக் கொண்டு ஒர் உயிர் வாழத்தான் வேண்டுமா? இராஸ் இன்று இரவு விருந்துக்கு
ஏற்பாடு செய். நாளை காலை எனக்கு முடிசூட்டும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்” என்றாள் மனம் கசிய...
இரவு விருந்து அமர்க்களமாய நடந்தது.
கிளியோபாட்ராவின்
மரணம்
ஆகஸ்ட் 12.கி.மு.30
விடிந்தது.
வழக்கம் போல உடலெங்கும் வாசனை பொடிகளை
பூசினாள்.
ஆண்டனிக்கு பிடித்த ஆடையை அணிந்தாள்.
இராஸீம், சாமியோனும் கண் கலங்கிய படி கிரீடத்தை
சூட்டினர்.
எகிப்து அரசி வாழ்க! வாழ்க! என்று குரல்
கொடுத்தனர்.
தங்க கட்டிலில் அமர்ந்தாள்,
அரசியில் ஆட்கள் ஒரு கூடையுடன் வந்தனர்.
உள்ளே அனுமதித்தனர்.
கூடையை கிளியோபாட்ராவிடம் கொடுத்த அவர்களுக்கு,
இரு ஆபரணங்களை கொடுத்தாள்.
அவர்கள் கண் கலங்க விலகினர்.
கூடையிலிருந்து அஸப்பை வலது கையில் எடுத்தாள்.
அழகான பாம்பு.
கிளியோபாட்ரா, மெல்ல தன் மார்பிலிருந்து
ஆடைகளை விலக்க ... அஸப் ... மூன்று முறை முத்தமிட்டது.
கட்டிலில் நுரை ததும்ப சரிந்தாள்.
அவள் கையிலிருந்த அஸப்பை இராஸ் பெற்றாள்.
அவளையும் முத்தமிட்டது. சாமியானும் தன்னை முத்தமிட வைத்தான்.
அரசியை காண வந்த ரோம் காவலர்கள் அவளைப்
பார்த்ததும் அதிர்ந்தனர்.
அரசியை பார்த்தான். வேதனை மண்டியது.
அவள் கையிலிருந்த ஏட்டை எடுத்தான்.
படித்தான்.
அவள் சாகும் போது வயது 39 மட்டுமே.
குறுகிய காலமே வாழ்ந்தாலும், சுமார் இரண்டாயிரம்
ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இவள் இறவா பேரழகியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
(கிளியோபாட்ரா
மறைந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு கிறிஸ்து பிறந்தார். அதன் பின்னர் கி.பி.1
என்று வருடங்களைப் பின்பற்றலாயினர்.)
பார்வை நூல்
1.
இறவா பேரழகி
கிளியோபாட்ரா – சிவரஞ்சன், திவ்யா பதிப்பகம், ஆலப்பாக்கம், சென்னை – 600 116.
Comments
Post a Comment