என் மனதைக் கவர்ந்த விவேகானந்தரின் சிந்தனைகள்!
(சுவாவி விவேகானந்தர்
இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்காகவும், தன்னம்பிக்கை உணர்வு கொண்டப் பேச்சுத் திறனால்
உறங்கிக் கொண்டிருந்தத் தேசிய உணர்வைத் தூண்டக் காரணமாகவும் அமைந்தது என்பதை அவரைப்
பற்றிய நூல்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அவரைப் பற்றிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் பெருமையடைகிறேன்.)
‘விழுமின் எழுமின்’ என உறங்கிக் கிடந்த இந்தியாவை உசுப்பி எழச் செய்தவர் விவேகானந்தர்.
நாட்டை எழுப்ப இளைஞர்களால்தான் முடியும் என்பதையும் உணர்ந்தவராய், ‘நூறு இளைஞர்களைக்
கொடுங்கள், நாட்டை மாற்றிக் காட்டுகிறேன்’ என்று புதுயுகம் படைக்கப் புறப்பட்டவர்.
புத்தகம் படிக்கும்
ஆர்வம்
துறவறம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் இந்தியா
முழுக்க யாத்திரை சென்றார். அவ்வாறு செல்கையில் மீரட் வந்தார். அங்கே அவருக்கு ஜான்
லூப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க ஆசை ஏற்பட்டது.
சக துறவியான அகண்டானந்தரிடம் தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். அவரும் விவேகானந்தர் கேட்ட புத்தகங்களை அருகில் உள்ள நூல்நிலையத்திலிருந்து
எடுத்து வந்து கொடுத்தார். பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை மறுநாளே திருப்பிக்
கொடுத்து விட்டார் விவேகானந்தர்.
அகண்டானந்தரும் அந்த புத்தகத்தை நூலகத்தில் ஒப்படைக்க எடுத்துச் சென்றார். ‘நேற்று
தானே புத்தகத்தை எடுத்துச் சென்றீர்கள்? அதற்குள் படித்து முடித்துவிட்டீர்களா? என்று
ஆச்சிரியத்துடன் கேட்டார் நூலகர்.
”இந்த புத்தகத்தை நான் படிப்பதற்காக எடுத்துச்
செல்லவில்லை. சுவாமி விவேகானந்தர் கேட்டதால் வாங்கிச் சென்றேன். அவரும் ஒரே நாளில்
இந்த புத்தகத்தை படித்து விட்டார். அதனால்தான் திருப்பிக்கொண்டு வந்திருக்கின்றேன்”
என்றார் அகண்டானந்தர்.
அகண்டானந்தர் சொன்னதை நூலகரால் நம்ப முடியவில்லை.
எப்படி ஒரே நாளில் இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒருவரால் படிக்க முடியும் என்று யோசித்தார்.
யோசித்தவர் ”இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒரே நாளில் யாராலும் படிக்க முடியாது” என்று
அகண்டானந்தரிடம் கேட்டார்.
”நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால்,
சுவாமி விவேகானந்தரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு வந்து விட்டார்.
பின் விவேகானந்தரிடம் நூலகத்தில் நடந்ததைத் தெரிவித்தார். உடனே விவேகானந்தர், அகண்டானந்தருடன்
நூலகத்திற்கு புறப்பட்டு வந்து விட்டார்.
விவேகானந்தர் நூலகரைப் பார்த்து இந்த புத்தகத்தில்
எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் தன்னிடம் கேள்வி கேளுங்கள் என்று கூறினார்.
நூலகரும் அந்தப் புத்தகத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றிற்கும் சரியாக
– தெளிவாக பதில் கூறினார்.
நூலகருக்கு ஆச்சிரியம் தாங்க முடியவில்லை.
”சுவாமி இவ்வளவு பெரிய புத்தகத்தை எவ்வளவு
பெரிய மேதையானாலும் ஒரே நாளில் படித்து முடித்துவிட முடியாது. நீங்கள் மா மேதையைக்
காட்டிலும் உயர்ந்த மேதை என்பதை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறேன்” என்று விவேகானந்த்தை
வியந்து பாராட்டிய நூலகர், அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
பிரம்மாண்ட புத்தகத்தை தன்னால் ஒரே நாளில்
எப்படி படிக்க முடிந்தது என்பது பற்றி விவேகானந்தர் கூறும்போது, ”ஒருவன் பிரம்மச்சரியத்தை
அனுஷ்டித்தால் அவனால் முடியாதது எதுவுமே கிடையாது. பிரம்மச்சரியத்தின் ஆற்றலுக்கு முன்னால்
இதெல்லாம் சர்வ சாதாரணம்” என்றார்.
காவி உடை
ஒரு முறை விவேகானந்தரிடம் ஓர் இளைஞன் கிண்டலாக,
”எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்தக் காவி உடையை மட்டும் துறக்காதது ஏன்? பெரும்பாலான
துறவிகள் காவி ஆடையை அணிவது ஏன்?” என்று கேட்டான்.
அதற்கு விவேகானந்தர், ”இந்த உடையை நாங்கள்
பெருமைக்காக அணியவில்லை. ஒருவித பாதுகாப்பு கருதியே அணிகிறோம். காவி உடை அணிந்திருப்பவரைப்
பார்த்து யாரும் பிச்சை கேட்பதில்லை. பொருள் வேண்டி நிற்பதில்லை. அதனால் நாங்கள் யாருக்கும்
இல்லை என்று சொல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க முடிகிறது” என்றார்.
விவேகானந்தரின் பொன்மொழிகள்
·
எந்த வேலையையும்
தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி.
· மலை போன்ற சகிப்புத்
தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதான் நற்காரியத்தில் வெற்றி தரும்.
· உண்மைக்காக
எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
·
உங்களுக்குத்
தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிக் கொண்டிருக்கின்றன என்று நம்புங்கள்.
·
இந்தியாவில்
மதம் ஒன்று தான் வாழ்க்கையாக உள்ளது.
·
மிருகத்தை மனிதனாக்குவதும்,
மனிதனைத் தெய்வமாக்குவதும் மதம்.
·
கடவுளை தாம்
விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதவழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.
· மனிதனுக்குள்
ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.
· முதலில் கீழ்ப்படிவதற்குக்
கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, உனக்குத் தானாகவே வரும்.
·
அன்பு ஒரு முதலீடு
போன்றது. யாவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள். அதை எவ்வளவு கொடுத்தாலும், நிச்சயம்
உங்களுக்குத் திரும்ப வந்து விடும்.
· கவலைகளை நாளைக்கும்,
மன மகிழ்ச்சிகளை இன்றைக்கும் வைத்துக் கொள்வோம். அப்போதுதான் வாழ்க்கை சுமையாக இல்லாமல்
சுகமாக இருக்கும்.
பார்வை நூல்
1. ஆன்மீக செம்மல் விவேகானந்தர் - ப்ரியா பாலு, பதிப்பாசிரியர்
எம். சாதிக் பாஷா, கிளாசிக் ப்ப்ளிகேஷன்ஸ், தாம்பரம், சென்னை – 600 063.
Comments
Post a Comment