திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
தமிழ் சிந்தனை மரபில் ‘வெளி' யும் காலமும் ‘ வெளி ’ என்பது நிலத்தையும் , நிலத்திற்கு மேலான பரப்பையும் குறிக்கிறது . மேலும் , நிலத்திற்கு மேல் உள்ள வான்வெளி , வீடு , விளைநிலம் , கட்டடங்கள் அமைகின்ற வீதிகள் , கண்ணுக்குப் புலனாகின்ற சுற்றுவெளி , புலனாகாத வெளி போன்றவற்றை உள்ளடக்கியது . தொல்காப்பியத்தில் திணை அடிப்படையில் தொடங்கும் வெளி பிரிவினை , சோழர் காலத்தில் சாதியடிப்படையில் நிலைபெறத் தொடங்கிப் பின்னர் நிலைபெற்று , இக்காலம் வரை நடைமுறையில் உள்ளது . இந்நூலில் பதினொரு தலைப்புக்களில் ‘ வெளி ’ சார்ந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார் . தமிழ்ச் சிந்தனை மரபில் வெளி தமிழ் சிந்தனை மரபில் நிலமும் பொழுதும் இன்றியமையாதன . இவற்றின் மேல்தான் உரிபொருளான வாழ்வு நடைபெறுகிறது . அகப்பொருளும் , புறப்பொருளும் நிலம் , பொழுது சார்ந்தே அமைகின்றன . நிலத்தைக் கைப்பற்றும் செயல் வீரர்கள் சார்ந்தவையாக எண்ணப்படுகின்றன . அ . மார்க்ஸ் என்பவர் ” நிலமென்பது வணிகர்களுக்கு விற்பனைப் பொருளாகவும் , புலம் பெயர்ந்த மக்களுக்கு இழந்த சொர்க்கமாகவு...