Skip to main content

Somky Mountains சென்ற அனுபவங்களாக...

 

         Somky Mountains சென்ற அனுபவங்களாக...


          மே மாதம் வெள்ளிக் கிழமை (24.05.2025) அன்று நாங்கள் சின்சினாட்டியிலிருந்து காலையில் 11 மணிக்கு மேல் கிளம்பி Somky Mountains மாலை 5.30 மணிக்குச் சென்றோம். அங்கு Knoxville  என்னும் இடத்தில் MAARIOTT என்னும் ஹோட்டலில் தங்கினோம். அங்கு Sunsphere என்னும் கோபுரம் மற்றும் பூங்கா, Moonshine Mountain Coaster, பேரட் மவுண்டன் அண்ட் கார்டன்ஸ் என்ற இடத்திற்கு மட்டும் சென்று வரும் வழியில் அந்த மலையின் அழகை ரசித்துக் கொண்டு  ஞாயிற்றுக் கிழமை (26.05.2025) மதியம் வீட்டிற்கு வந்து விட்டோம்.

Somky Mountains

          பெரும் புகைமலை (Great smoky mountains)  என்பது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் டென்னிசிவட கரொலைனா எல்லையில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இம்மலைத்தொடர் பன்னாட்டு உயிரக் கோள காப்பகத்தின் அங்கமாகும். கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பான்மையான கருங்கரடிகள் இங்கு உள்ளன. இம்மலைத் தொடரில் இயற்கையாக மூடுபனியாலும் தொலைவிலிருந்து காணும்போது புகை எழும்புவது போல் இருப்பதால்இசுமோக்கிஎன ஆங்கிலத்தில் அழைக்கலாயினர்.

Sunsphere

          






        1982- ஆம் ஆண்டு உலக கண்காட்சியின் சிறப்புமிக்க கோபுரம். 360 டிகிரி காட்சிகளுடன் இலவச கண்காணிப்பு தளத்தைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அதன் கண்காணிப்பு தளத்திலிருந்து நகரத்தின் பிரமிக்க வைக்கும் 360 டிகிரி காட்சிகளை வழங்குகிறது. பார்வையாளர்களை மிகவும் கவரக் கூடியது. இவற்றின் கட்டிடக்கலை, சுவாரஸ்யமான வரலாற்றுக் காட்சிகளையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. நாங்கள் மாலை நேரம் அந்த இடத்திற்கு சென்றதால் வெளிப்புறத் தோற்றத்தையும், அங்குள்ள பூங்காவையும் பார்த்து விட்டு வந்தோம். இரவு அழகான உணவு விடுதியில் உண்டு விட்டு வந்தோம். மிகவும் மகிழ்ச்சியாக அந்த நாள் அமைந்தது.

Moonshine Mountain Coaster


                                                 


         முன்பு கேட்லின்பர்க் மவுண்டன் கோஸ்டர் என்று அழைக்கப்பட்ட மூன்ஷைன் மவுண்டன் கோஸ்டர், 2021 – ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய உரிமை மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோஸ்டர் ஸ்மோக்கி மவுண்டன்களில் அழகான காட்சிகளையும், மேலிருந்து கீழாக ஒரு சிலிர்ப்பூட்டும் சவாரியையும் வழங்குகிறது. ஒவ்வொரு சவாரி செய்பவரும் தங்கள் சொந்த வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும் மணிக்கு 30 மைல் வேகத்தில் செல்ல முடியும். மூன்ஷைன் மவுண்டன் கோஸ்டர் அனைத்து வயதினருக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற ஆர்வத்தைத் தூண்டும் சவாரியாகும். இதில் குழந்தைகளும் செல்கிறார்கள். இரவு சவாரி நன்றாக இருக்கும். நாங்கள் மாலையில் சென்றோம். நான் முதலில் தயங்கினேன். நானும்- என் மகளும், என் மருமகனும் -என் பெயர்த்தியும் என்று சென்றோம். அந்த கோஸ்டரில் முதலில் சவாரி செய்தவுடன் பயம் போய்விட்டது. பின்பு அடுத்த முறையும் சென்றோம். முதல் முறை வாங்கிய டிக்கெட் வைத்து, அடுத்த முறை சவாரி செய்யும்போது டிக்கெட் விலை கொஞ்சம் குறைவாக இருந்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

Parrot Mountain and Gardens


                                            


                                            



                                             


          பேரட் மவுண்டன் அண்ட கார்டன்ஸ் என்பது நான்கு ஏக்கரில் அமைந்த அழகிய நிலபரப்பு தோட்டங்களில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான அழகான வெப்பமண்டல பறவைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பூக்கள் மற்றும் தாவரங்கள் மற்றும் மரங்கள் கொண்டு அமைந்துள்ளது. கிளிகளில் பலவகையான வகைகள், மயில்கள் என்று அதிகமான பறவைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பறவைகளுக்கு அவர்கள் கொடுக்கும் உணவினை நாமும் கொடுக்கலாம். அதற்கு நாம் டிக்கெட் வாங்கும் போது அவர்களிடம் கூடுதல் பணம் செலுத்தி அனுமதி வாங்கியபின் கொடுக்கலாம். நன்கு ரசித்தோம். ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம். மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.

நிறைவாக,

          என்னுடைய பயண அனுபவங்களாக நான் அமெரிக்கா வந்த நாள் முதல் மே மாதம் Somky Mountain சென்றது வரை எனக்கு வியப்பில் ஆழ்த்தியது.

மொழி புரியவில்லை என்றாலும், ஒருவர் செல்லும் போது வழிவிட்டு நடப்பது, அடுத்தவர்களை மோதாமல் நடப்பது, ஒருவரை நாம் நேரடியாக பார்த்தால் ‘ஹாய்’ என்று கூறி புன்னகையுடன் நம்மை கடந்து செல்கிறார்கள். ஏதேனும் சின்ன உதவி என்றாலும் தேங்க்யூ என்று கூறிச் செல்கிறார்கள். இங்கு வாழும் இந்தியர்களும் இதே போல் செயல்படுகிறார்கள். இந்த இரண்டு நாள் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.

 

         

 

 

 

 







Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...