பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள் சங்கம் கண்ட தங்கத் தமிழின் அமுத ஊற்றுகளே பழமொழிகள் . பழமையும் பெருமையும் கொண்ட அம்மொழிகள் நம் உளவியல் , உணர்வியல் கூறுகளை மட்டுமின்றி நாட்டு நடப்பு மற்றும் கலை , கலாச்சாரப் பகிர்வுகளையும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது . நமக்குள் தரும் வியப்பு . சின்னசிறு சொற்றொடரால் காலந்தோறும் வாய்மொழியாகவே வழங்கி மக்களால் இன்றும் வழக்கினில் இருப்பதே அவற்றின் தொன்மைக்குச் சான்றாகும் . பழமொழிகள் இறைமை சார்ந்த பழமொழிகள் , இல்லறம் சார்ந்த பழமொழிகள் , திருமணம் சார்ந்த பழமொழிகள் , உறவுமுறை பற்றிய பழமொழிகள் , பெண்மை நிலை பற்றிய பழமொழிகள் , உளவியல் , மருத்துவம் , அறிவியல் , அறிவுரை என்று அனைத்து நிலைகளிலும் பழமொழிகள் மனிதன் வாழ்வில் இடம்பெற்று வழிநடத்துகிறது . · சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் சுண்டைக்காய் என்பது சாதாரணக் காய் வகை ! மிகவும் சிறிய அளவிலான மருத்துவ குணம் ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!