கோயில்கள் சென்ற அனுபவங்களாக...
சூலை மாதம் நான்கு கோயில்கள் சென்று வந்தேன். திருவெள்ளறை, திருப்பட்டூர், தஞ்சாவூர், மண்ணச்சநல்லூர் பூமிநாதர் திருக்கோயில் என்ற கோயில்களுக்கு நானும் என் தோழிகளும் சென்று வந்தோம். தஞ்சாவூர் எங்கள்
கல்லூரியில் கல்லூரி சுற்றுலாவாக முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை எங்கள் துறைச் சார்ந்த ஆசிரியர்களும், பிறத் துறை
ஆசிரியர்களும் அழைத்துச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திருப்பட்டூர்
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் திருப்பட்டூர் என்ற புறநகரில் அமைந்துள்ள ஒரு சிவ பெருமான்
திருக்கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர்
என்றும் அழைக்கப்பட்டது. சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப
எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை
மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை
தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.
நானும் எங்கள்
கல்லூரி தோழிகளும் கல்லூரிக்குச் சென்று வரும்பொழுது மாலை வேலையில் கோயிலுக்குச் சென்றோம். திருப்பட்டூர் கோயிலுக்கு வியாழக் கிழமை தான் அனைவரும் செல்வார்கள்.
நாங்கள் சூலை 1ந் தேதி செவ்வாய்கிழமை சென்றோம்.
கோயிலில் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இருந்தாலும் பிரம்மன், பிரம்மபுரீஸ்வரர்.
இறைவி பிரம்மநாயகி சாமியைத் தரிசனம் செய்து வந்தோம். மிகவும் மனமகிழ்ச்சியாக இருந்தது.
திருவெள்ளறை
புண்டரீகாட்ச பெருமாள் கோயில்
108 திவ்யதேசங்களில் ஒன்றாகும் சோழநாட்டின் நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது. இங்கு செந்தாமரைக்கண்ணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
எங்குமில்லாத
வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல்,
தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி
முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத்
தரிசிக்கச் செல்ல வேண்டும்.
சூலை 2 ந்தேதி புதன் கிழமை மாலை 4.30 மணிக்குத்
திருவெள்ளறை சென்றோம். கோயிலைச் சுற்றியுள்ள இடங்கள்,
மற்றும் இயற்கைச் சூழலுடன் மயில்களின் அழகை ரசித்துக் கொண்டு தரிசித்து
வந்தோம். மிகவும் மனமகிழச்சியாக அமைந்தது. இந்தக் கோயிலிலும் பராமரிப்புப் பணி நடந்துகொண்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயில்
இக்கோயில் உலக பாரம்பரிய சின்னம் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில்
இதுவும் ஒன்றாகவும், தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர்
கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது
தனித்துவமான தமிழர் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும்
சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச்
சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
தஞ்சாவூர் கோவிலுக்கு
சூலை 4ந் தேதி வெள்ளிக் கிழமை சென்றோம். அதனால் கோயிலில் ஓரளவு கும்பல் இருந்தது. இருந்தாலும்
சாமியைத் தரிசனம் செய்து விட்டு வந்தோம். மாலை 3 மணிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்தோம். மதிய உணவு
முடிந்தவுடன். சரஸ்வதி மஹாலில் ஒரு காணொளி வீடியோ போட்டார்கள்.
அந்த வீடியோவில் தஞ்சாவூரின் பெருமை, சுற்றுவட்டாரத்தில்
உள்ள கோயில்கள், அதன் சிறப்பு என்ற அனைத்தும் அக் காணொலியில்
இருந்தது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் குளிர்மை அரங்கில்
கண்டு மகிழ்ந்தோம்.
பூமிநாத சுவாமி கோயில் – மண்ணச்சநல்லூர்
இன்று (15.07.2025) மாலை 5.00 மணிக்குக் கல்லூரியில் இருந்து வரும்பொழுது
நாங்கள் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வந்தோம். இன்றைய நாள் சிறப்பாக
அமைந்தது.
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பூமிநாதர், அறம் வளர்த்த நாயகி சன்னதிகளும், முருகன், தட்சிணமூர்த்தி, துர்க்கை,
நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட
ராஜகோபுரம் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கும் சிவபெருமானின் கோயில் தோஷங்கள், அனைத்தையும் பிரச்னைகள் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான
வீடு, மனை, நிலம்
அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள
அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து,
சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம் என
இக்கோயிலின் ஐதீகம்.
நிறைவாக,
இந்த மாதம் நான்கு கோவில்கள் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
Comments
Post a Comment